ரோட் ரோலரை இயக்கும் இந்த கிரிக்கெட் பிரபலம் யார் என்று தெரிகிறதா..? ஆச்சரியத்தில் கிரிக்கெட் உலகம்..

ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் உலகத்தையே ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் வகையில் பிரபல கிரிக்கெட் வீரர் ரோட் ரோலர் வாகனத்தை இயக்கி அசத்தியுள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

ரோட் ரோலரை இயக்கும் இந்த கிரிக்கெட் பிரபலம் யார் என்று தெரிகிறதா..? ஆச்சரியத்தில் கிரிக்கெட் உலகம்..!

என்னங்க புகைப்படத்தை வச்சு ஓரளவு கண்டுபிடிச்சிட்டீங்களா..? நீங்க கண்டுபிடிச்சிருப்பீங்கனு நாங்கள் நம்புறோம். ஆம், நீங்கள் நினைத்தபடியே இது பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர், நம்ம தல தோனிதான்.

இவர், தான் தற்போது கிரிக்கெட் மைதானம் ஒன்றில் ரோட் ரோலர் வாகனத்தை இயக்கியுள்ளார். இந்த வீடியோதான் தற்போது இணையம் மற்றும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கின்றது.

ரோட் ரோலரை இயக்கும் இந்த கிரிக்கெட் பிரபலம் யார் என்று தெரிகிறதா..? ஆச்சரியத்தில் கிரிக்கெட் உலகம்..!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான மஹிந்திர சிங் தோனி ஓர் வாகன பிரியர் ஆவார். இதற்கு இவரிடம் இருக்கும் ஏராளமான விலையுயர்ந்த சொகுசு கார்களே முக்கிய சான்று. இதைவைத்து பார்க்கும்போது, தோனிக்கு கிரிக்கெட் விளையாட்டில் மட்டுமின்றி வாகனங்கள் மீதும் அதிக ஆர்வம் இருப்பது புரியும்.

ரோட் ரோலரை இயக்கும் இந்த கிரிக்கெட் பிரபலம் யார் என்று தெரிகிறதா..? ஆச்சரியத்தில் கிரிக்கெட் உலகம்..!

ஆனால், இவருக்கு ரோட் ரோலர் மீதும்கூட ஆர்வம் என்பது யாரும் அறியாத ஒன்றாக இருந்தது. ஆனால், அது தற்போது எம்எஸ் தோனி பேன்ஸ் அஃபீசியல் என்ற டுவிட்டர் பக்கத்தின்மூலம் வெளியுலகிற்கு தெரியவந்துள்ளது.

ரோட் ரோலரை இயக்கும் இந்த கிரிக்கெட் பிரபலம் யார் என்று தெரிகிறதா..? ஆச்சரியத்தில் கிரிக்கெட் உலகம்..!

கிரிக்கெட் மைதானத்தில் இருக்கும் பிட்சை சரி செய்வதற்காகவே தோனி ரோட் ரோலரை இயக்கியுள்ளார். விளையாட்டு மைதானம் சமமாக சீரான நிலையில் இருந்தாலே சிறப்பான விளையாட்டு அனுபவத்தைப் பெற முடியும்.

ஆகையால், எம்எஸ் தோனி, தானே களத்தில் இறங்கி அந்த வேலையைச் செய்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ டுவிட்டர் மட்டுமின்றி வாட்ஸ்-அப் போன்ற சமூக வலைதளங்களிலும் மிக வேகமாக பரவி வருகின்றது.

ரோட் ரோலரை இயக்கும் இந்த கிரிக்கெட் பிரபலம் யார் என்று தெரிகிறதா..? ஆச்சரியத்தில் கிரிக்கெட் உலகம்..!

தோனி இதுபோன்ற வழக்கத்திற்கு மாறான வாகனத்தை இயக்குவது முதல் முறையல்ல. அந்தவகையில், இதற்கு முன்னதாக இந்தியா மற்றும் ஆப்பிரிக்காவிற்கும் இடையிலான போட்டிக்காக ஜிம்பாப்வே சென்றபோது படாஸ் எனப்படும் போலீஸ் பைக்கை இயக்கியிருந்தார்.

அதுகுறித்த தரவுகள் அப்போது பேசும் பொருளாக மாறியது. அந்த பைக், கவாஸாகி நிறுவனத்தின் மிகப்பெரிய உருவம் கொண்ட கான்கோர்ஸ் 14 ரக பைக்காகும். பிற்காலத்தில் இதே மாதிரியான பைக்கை அவர், தனக்கு சொந்தமாக்கிக் கொண்டார்.

இது ஒரு ஸ்போர்ட்ஸ் டூரர் பைக்காகும். இதன் இசட்எக்ஸ் 14ஆர் மாடலைதான் தோனி தன் வசம் வைத்திருக்கின்றார். இந்த பைக்கில் 1,352 சிசி திறன்கொண்ட இன்லைன் 4 சிலிண்டர் எஞ்ஜின் நிறுவப்பட்டுள்ளது.

ரோட் ரோலரை இயக்கும் இந்த கிரிக்கெட் பிரபலம் யார் என்று தெரிகிறதா..? ஆச்சரியத்தில் கிரிக்கெட் உலகம்..!

இது அதிகபட்சமாக 156 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. இதுமட்டுமின்றி மிகவும் வித்தியாசமான தோற்றம் கொண்ட, பழைமை வாய்ந்த 1 டன் நிஸான் பிக்-அப் டிரக்கையும் அவர் வாங்கியுள்ளார்.

ரோட் ரோலரை இயக்கும் இந்த கிரிக்கெட் பிரபலம் யார் என்று தெரிகிறதா..? ஆச்சரியத்தில் கிரிக்கெட் உலகம்..!

இந்த டிரக்கை அவரும், அவரது செல்ல மகளும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூய்மைப்படுத்துவதைப் போன்ற வீடியோக் காட்சிகள் இணையத்தில் வைரலாகியது குறிப்பிடத்தகுந்தது.

நிஸான் நிறுவனத்தின் இந்த புகழ்வாய்ந்த 1 டன் பிக்-அப் ட்ரக் 20 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட வாகனம் ஆகும். அதாவது இந்த கார் கடந்த 1999ம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

ரோட் ரோலரை இயக்கும் இந்த கிரிக்கெட் பிரபலம் யார் என்று தெரிகிறதா..? ஆச்சரியத்தில் கிரிக்கெட் உலகம்..!

இந்த காரை ஜோங்கா வாகனம் என்றும் குறிப்பிடப்படுகின்றது. தோனி வாங்கிய நிஸான் ஜோங்கா, மிகவும் பிரகாசமான பச்சை நிறத்தில் காணப்படுகின்றது. இந்த வாகனத்துடன் சில நேரங்களில் தோனி ராஞ்சி பகுதியைச் சுற்றி வலம் வந்துக்கொண்டிருக்கின்றார்.

ரோட் ரோலரை இயக்கும் இந்த கிரிக்கெட் பிரபலம் யார் என்று தெரிகிறதா..? ஆச்சரியத்தில் கிரிக்கெட் உலகம்..!

இதுமட்டுமின்றி தோனியின் கராஜில் ஏராளமான எக்ஸ்க்ளூசிவ் வாகனங்கள் காணப்படுகின்றது. அந்தவகையில், யமஹா ஆர்டி350 மோட்டார்சைக்கிள் மற்றும் ஹம்மர் போன்றவையின் தரிசனத்திற்கு குறைச்சில்லை.

அதேசமயம், தன்னிடம் இருக்கும் ஒரு சில பிரம்மிப்பை ஏற்படுத்தும் பழங்கால பொக்கிஷ வாகனங்களை தோன அருங்காட்சியகத்திற்கு வழங்கியுள்ளார்.

ரோட் ரோலரை இயக்கும் இந்த கிரிக்கெட் பிரபலம் யார் என்று தெரிகிறதா..? ஆச்சரியத்தில் கிரிக்கெட் உலகம்..!

தோனியைப் போல் பல கிரிக்கெட் வீரர்கள் விலையுயர்ந்த சொகுசு கார்களை தங்கள் வசம் வைத்திருக்கின்றனர். ஆனால், தோனியிடும் இருக்கும் ஒரு சில வாகனங்கள் தனித்தன்மை வாய்ந்தவையாக இருக்கின்றன. இந்தியாவில் முதல் நபராக கவாஸாகி நிஞ்ஜா எச்2 என்ற பைக்கையும், உலகின் மிக அதிக வேகமான ஜீப் கிராண்ட் செரோக்கி டிராக் ஹாக் காரையும் வைத்துள்ளார்.

இதில், நிஞ்ஜா எச்2 பைக்கின் விலை ரூ. 30 லட்சம் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதேபோன்று, செரோக்கி டிராக் ஹாக் காரின் விலை ரூ. 1.6 கோடியாகும்.

More from DriveSpark

Article Published On: Thursday, February 27, 2020, 17:34 [IST]
English summary
Indian Cricketer Dhoni Rides Road Roller. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+