ரவிசாஸ்திரி வெளியிட்ட வீடியோ! ஆச்சரியத்தில் உறைந்த கிரிக்கெட் உலகம்! அப்படி என்ன இருக்கு வீடியோவில்!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளாரன ரவி சாஸ்திரி வெளியிட்ட வீடியோவால் அவரின் ரசிகர்கள் ஆச்சரியத்தில் உறைந்திருக்கின்றனர். இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

ரவி சாஸ்திரி வெளியிட்ட வீடியோ... ஆச்சரியத்தில் உறைந்த கிரிக்கெட் ரசிகர்கள்... அப்படி என்ன இருக்கு வீடியோவில்!

இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் இன்று வரை மறக்க முடியாத நபராக ரவி சாஸ்திரி இருக்கின்றார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான இவரே, தற்போது உலகின் அதிகம் சம்பளம் பெறும் பயிற்சியாளராக இருந்து வருகின்றார். இவரே தற்போது தனக்காக பிரத்யேகமாக சகல வசதிகளுடன் தயாராகியிருக்கும் விலையுயர்ந்த கார் பற்றிய வீடியோவை சமூக வலைதளம் வாயிலாக வெளியுலகிற்கு தெரியப்படுத்தியுள்ளார்.

ரவி சாஸ்திரி வெளியிட்ட வீடியோ... ஆச்சரியத்தில் உறைந்த கிரிக்கெட் ரசிகர்கள்... அப்படி என்ன இருக்கு வீடியோவில்!

ரவி சாஸ்திரி இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனாக மட்டுமின்றி, தலைமை பயிற்சியாளர், தொகுப்பாளர், போட்டி ஒருங்கிணைப்பாளர் என பல்வேறு ரோல்களை அவர் மேற்கொண்டு வருகின்றார். எனவேதான் தற்போதும் பிசிசிஐ-இல் அதிக செல்வாக்கு உள்ள நபராக ரவி சாஸ்திரி இருந்து வருகின்றார்.

ரவி சாஸ்திரி வெளியிட்ட வீடியோ... ஆச்சரியத்தில் உறைந்த கிரிக்கெட் ரசிகர்கள்... அப்படி என்ன இருக்கு வீடியோவில்!

இந்த நிலையிலேயே தன்னுடைய விலையுயர்ந்த காரில் தனக்கு தேவையான வசதிகளை கஸ்டமைசேஷன் வாயிலாக பெற்றிருக்கின்றார். இந்த கார் புதிதாக அவருடைய கராஜில் சேர்க்கப்பட்டிருக்கும் குறிப்பிடத்தகுந்தது. ரவி சாஸ்திரி மிகப்பெரிய வாகன ஆர்வலர் ஆவார். இதற்கு அவரிடம் இருக்கும் விலையுயர்ந்த மற்றும் ஆடம்பர கார்களே சான்று.

ரவி சாஸ்திரி வெளியிட்ட வீடியோ... ஆச்சரியத்தில் உறைந்த கிரிக்கெட் ரசிகர்கள்... அப்படி என்ன இருக்கு வீடியோவில்!

இந்த ஆல் ரவுண்டரிடத்தில் முன்னணி நிறுவனங்களான ஆடி, மெர்சிடிஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ மற்றும் ஃபோர்டு ஆகிய நிறுவனங்களின் அதி சொகுசு மற்றும் சூப்பர் திறன் கொண்ட கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இந்த நிலையிலேயே சிறப்பு வசதிகளுடன் உருவாகியிருக்கும் ஆடி ஆர்எஸ்5 கார் பற்றிய தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.

ரவி சாஸ்திரி வெளியிட்ட வீடியோ... ஆச்சரியத்தில் உறைந்த கிரிக்கெட் ரசிகர்கள்... அப்படி என்ன இருக்கு வீடியோவில்!

அந்த வீடியோவில் ரவி சாஸ்திரி கூறியதாவது, "இந்திய துணைக் கண்டத்தில் முதல் ஆடி கார்களில் ஒன்றை வைத்திருந்தேன். 35 ஆண்டுகள் கடந்துவிட்டன தற்போதும் நான் ஆடி நிறுவனத்தின் கார்களில்தான் பயணித்துக் கொண்டிருக்கின்றேன். இது நான் எதிர்பார்க்காத ஒன்று. தற்போது என்னுடைய பெயரின் முன் எழுத்துக்களை தன் பெயராகக் கொண்டிருக்கும் (ஆர்எஸ்5) காரில் வலம் வந்துக் கொண்டிருக்கின்றேன்" என பெறுமிதம் கொண்டார்.

வீடியோவைக் காண இங்கே க்ளிக் செய்யவும்.

ரவி சாஸ்திரி வெளியிட்ட வீடியோ... ஆச்சரியத்தில் உறைந்த கிரிக்கெட் ரசிகர்கள்... அப்படி என்ன இருக்கு வீடியோவில்!

1985ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ரவி சாஸ்திரி சாம்பியன் பட்டத்தை வென்றதற்காக ஆடி6 செடான் ரக காரை பரிசாக பெற்றார். இதன் இறுதிப் போட்டியில் பரம எதிரியான பாகிஸ்தானை இந்தியா வீழ்த்தி, கிரிக்கெட் உலக சாம்பியன்ஷிப்பை வென்றது குறிப்பிடத்தகுந்தது.

ரவி சாஸ்திரி வெளியிட்ட வீடியோ... ஆச்சரியத்தில் உறைந்த கிரிக்கெட் ரசிகர்கள்... அப்படி என்ன இருக்கு வீடியோவில்!

ரவிசாஸ்திரி போட்டியின் மூலம் கார்களை மட்டுமின்றி சிலி வீட்டு உபயோகப் பொருட்களையும் வென்றிருக்கின்றார். அதாவது, அப்போதைய கால கட்டத்தில் மிகப்பெரிய விஷயமாகப் பார்க்கப்பட்டு வந்த ஏசி, ஃபிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை வென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையிலேயே ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் ஆடி செடான் ரக காரை அவர் வென்றார்.

ரவி சாஸ்திரி வெளியிட்ட வீடியோ... ஆச்சரியத்தில் உறைந்த கிரிக்கெட் ரசிகர்கள்... அப்படி என்ன இருக்கு வீடியோவில்!

இதைத்தொடர்ந்தே அவரின் ஆடி நிறுவன கார்களின் மிகப்பெரிய ரசிகராக மாறியிருக்கின்றார். இந்த காரை தனது சிறப்பு விளையாட்டு திறன் மூலம் வென்ற காரணத்தினால் பிற போட்டியாளர்களுடன் பகிர்ந்துக்கொள்ளப் போவதில்லை என போட்டி முடிவுக்கு பின்னர் நடைபெற்ற டிவி நிகழ்ச்சி கலந்துரையாடலில் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ரவி சாஸ்திரி வெளியிட்ட வீடியோ... ஆச்சரியத்தில் உறைந்த கிரிக்கெட் ரசிகர்கள்... அப்படி என்ன இருக்கு வீடியோவில்!

இந்த புதிய ஆடி ஆர்எஸ்5 காரில் ரவி சாஸ்திரி என்ன மாதிரியான கஸ்டமைசேஷனைச் செய்திருக்கின்றார் என்பது பற்றிய தகவல் வெளியாகவில்லை. மேலும், அக்காருக்காக அவர் எவ்வளவு செய்துள்ளார் என்ற தகவலும் வெளியிடப்படவில்லை. இக்கார் பல்வேறு புதுப்பில்களுடன் மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வரவிருக்கின்றது. ரூ. 1 கோடி என்ற விலையில் இக்கார் எதிர்பார்க்கப்படுகின்றது.

ரவி சாஸ்திரி வெளியிட்ட வீடியோ... ஆச்சரியத்தில் உறைந்த கிரிக்கெட் ரசிகர்கள்... அப்படி என்ன இருக்கு வீடியோவில்!

ஆடி ஆர்எஸ்5 கூப் மற்றும் ஸ்போர்ட் பேக் மாடல்களில் எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், 444 எச்பி எனும் அதீத திறன் கொண்ட காராக இது இந்தியாவில் அறிமுகமாக இருப்பதாகவும் கூறப்படுகின்றது. எனவேதான் ரவி சாஸ்திரி போன்ற கார் ஆர்வலர்கள் இக்காரின் வருகையை எதிர்நோக்கிக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ரவி சாஸ்திரி வெளியிட்ட வீடியோ... ஆச்சரியத்தில் உறைந்த கிரிக்கெட் ரசிகர்கள்... அப்படி என்ன இருக்கு வீடியோவில்!

இக்காரில், 2.9 லிட்டர் டர்போசார்ஜ் வி6 பெட்ரோல் எஞ்ஜின் எதிர்பார்க்கப்படுகின்றது. இது, 444 எச்பி திறனை மட்டுமின்றி 600 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனையும் கொண்டிருக்கும். இந்த சூப்பர் ஃபாஸ்ட் திறனை 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உதவியுடன் அது வெளிப்படுத்தும். எஞ்ஜின் திறன் மட்டுமில்லைங்க இந்த காரின் ஸ்டைலும் மதி மயக்கும் வகையில் இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Indian Head Coach Ravi Shastri Revealed About His Latest Audi RS5. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X