பிரதமர் முதல் சூப்பர் ஸ்டார் வரை பயன்படுத்தும் விலையுயர்ந்த எஸ்யூவி கார்... சிறப்பு தகவல்..!
இந்தியாவின் பிரபலங்கள் மற்றும் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் பயன்படுத்தும் எஸ்யூவி கார்கள் பற்றிய சிறப்பு தகவலை இந்த பதிவில் காணலாம்.

அரசியல் பிரபலங்கள் மட்டுமின்றி இந்தியாவின் பல தொழிலதிபர்கள் மத்தியில் எஸ்யூவி ரக கார்களே மிகவும் பிரபலமானதாக காட்சியளிக்கின்றது. அதிலும், குறிப்பாக டொயோட்டா மற்றும் ரேஞ்ச் ரோவர் நிறுவனங்களின் விலையுயர்ந்த எஸ்யூவி கார்களே அவர்களின் விருப்பமான தேர்வுகளில் ஒன்றாக இருக்கின்றது.
இருப்பினும், ஒரு சிலர் மட்டும் பென்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூ நிறுவனங்களின் எஸ்யூவி ரக கார்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில், இந்தியாவின் முக்கியமான அரசியல் கட்சி தலைவர்களான பிரதமர் மோடி முதல் ராகுல் காந்தி வரை மற்றும் திரைப்பிரபலம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என பல முக்கிய தலைவர்கள் பயன்படுத்தும் எஸ்யூவி ரக கார்களைப் பற்றிய சுவாரஷ்ய தகவலை இந்த பதிவில் காணலாம்.
முதலில் பாரத பிரமதர் நரேந்திர மோடி பயன்படுத்தும் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் தொடங்கி மற்ற அரசியல் கட்சி தலைவர்கள் பயன்படுத்தும் கார்களைப் பற்றி பார்க்கலாம்.

நரேந்திர மோடி - டொயோட்டா லேண்ட் க்ரூஸர்
பிரதமர் நரேந்திர மோடி முன்னதாக பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 7 செரீஸ் காரைப் பயன்படுத்தி வந்தார். இதையடுத்து, அதிக பாதுகாப்பு நிறைந்த காராக இருக்கும் லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் காருக்கு மாற்றப்பட்டார். ஆனால், மிக விரைவிலேயே உயர் அடுக்கு பாதுகாப்பு கொண்ட டொயோட்டா லேண்ட் ரோவர் க்ரூஸர் கார் அவரது பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. ஆகையால், தற்போது பிரதமர் நரேந்திர மோடியின் பயன்பாட்டில் கருப்பு நிற டொயோட்டா லேண்ட் க்ரூஸர் கார் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த கார் துப்பாக்கியின் தோட்டக்கள் மட்டுமின்றி குண்டு வெடிப்பைக்கூட தாங்கிக் கொள்ளும் சக்தியைக் கொண்டுள்ளது. இந்த காரையே மோடி தினமும் அவரின் கான்வாயின் பயன்படுத்தி வருகின்றார். இதுமட்டுமின்றி சில நேரங்களில் தேர்தல் பரப்புரைக்குச் செல்லும்போதும் இந்த கார் பயன்படுத்தப்படுகின்றது.
இவர் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு முக்கிய பிரபலங்கள் இதே காரைதான் பயன்படுத்தி வருகின்றனர். தொடர்ச்சியாக அவற்றையும் கீழே காணலாம்.

சோனியா காந்தி - லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர்
இந்தியாவில் பிரதமர் மோடிக்கு அடுத்தபடியாக காணப்படும் முக்கிய தலைவர்களில் ஒருவராக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக சோனியா காந்தி இருக்கின்றார். இவரின் பாதுகாப்பு கருதி லேண்ட் ரோவர் ரேஞ்ச் ரோவர் கார் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதுவும் கருப்பு நிறம் கொண்ட காராகும். டெல்லியின் இவரை இந்த காரிலேயே காண முடியும். இது மட்டுமுன்றி டாடா நிறுவனத்தின் உயர்பாதுகாப்பு வசதிக் கொண்ட சஃபாரி காரையும் அவர் பயன்படுத்தி வருகின்றார். இதனை நகரத்தின் வெளிப்புறங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

ராகுல் காந்தி - டொயோட்டா லேண்ட் க்ரூஸர்
டொயோட்டா லேண்ட் க்ரூஸர் எஸ்யூவி ரக காரை பயன்படுத்தும் அரசியல் தலைவர்களில் ராகுல் காந்தியும் ஒருவர் ஆவார். இவர் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஆவார். ஆகையால், இவரின் பாதுகாப்பை கருத்தில் இந்த கார் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.
ஆகையால், அவர் பெரும்பாலும் வெளியே செல்லும்போது இந்த காரையேப் பயன்படுத்தி வருகின்றனர்.

ரஜினிகாந்த் - பிஎம்டபிள்யூ எக்ஸ்5
பல காலங்களாக அரசியல் களத்தில் குதிப்பேன் என தனது ரசிகர்களின் ஆவலைத் தூண்டிக் கொண்டிருக்கும் திரை நட்சத்திரம் ரஜினிகாந்த், பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எக்ஸ்-5 காரை பயன்படுத்தி வருகின்றார். இதுதவிர, டொயோட்டா இன்னோவா எம்பிவி ரக காரையும் அவர் பயன்படுத்தி வருகின்றார்.
இவர், பெரும்பாலும் தமிழ் திரைப்படங்களிலேயே அதிகம் நடித்தாலும் இந்தியா முழுவதும் பிரபலமானவராக இருக்கின்றார். இதன்காரணமாகவே, பல அடுக்கு பாதுகாப்பு நிறைந்த பிஎம்டபிள்யூ எக்ஸ்5 காரை பயன்படுத்தி வருகின்றார்.

ஹேம மாலினி - மெர்சிடிஸ் பென்ஸ் எம்எல் கிளாஸ்
திரைத்துறை பிரபலம், அரசியல் பிரமுகர், தர்மேந்திராவின் இரண்டாவது மனைவி என பல்வேறு பட்டங்களைக் கொண்டவர் ஹேம மாலினி. இவர், பல மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர், மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் எம்எல் கிளாஸ் காரை பயன்படுத்தி வருகின்றார். இந்த கார் இந்தியாவில் முன்பே விளக்கிக் கொள்ளப்பட்டு விட்டது.

கிரண் பேடி - மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல் கிளாஸ்
யூனியன் பிரதேசமான புதுச்சேரியின் கவர்னராக செயல்பட்டுக் கொண்டிருக்கும் கிரண்பேடி, மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல் கிளாஸ் காரைப் பயன்படுத்தி வருகின்றார். இவர், முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தகுந்தது. இவரின் பயன்பாட்டிற்கு இந்த கார் வழங்கப்பட்டிருந்தாலும், பெரும்பாலும் சோதனைச் செய்வதற்காக உதவியாளரின் இரு சக்கர வாகனத்திலேயே பயணிக்கின்றார்.

பவன் கல்யாண் - மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜி55
தெலுங்கு திரையுலகின் பிரபலங்களில் ஒருவரான பவன் கல்யாண், திரைப்படங்கள் மட்டுமின்றி அரசியலில் ஈடுபட்டு வருகின்றார். இவர் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஜி-வேகன் காரை வைத்துள்ளார். இதே காரைதான் பாலிவுட் திரைப்பட நடிகர் ரன்பீர் வைத்திருக்கின்றார்.

ராஜ் தாக்கரே - டொயோட்டா லேண்ட் க்ரூஸர்
மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருக்கும் உத்தவ் தாக்கரேவின் குடும்பத்தைச் சேர்ந்தவர் ராஜ் தாக்கரே. இவர் இந்தியாவில் நன்கு அறியப்பட்ட அரசியல் கட்சி தலைவர்களில் ஒருவர் ஆவார். இவரின் கராஜில் பல்வேறு விலையுயர்ந்த சொகுசு கார்கள் பல காணப்பட்டாலும், டொயோட்டா லண்ட் க்ரூஸர் காரையே அதிகம் பயன்படுத்துகின்றார். இவர் மட்டுமின்றி தாக்கரே குடம்பத்தைச் சேர்ந்த பலர் இந்த மாடல் காரையே பயன்படுத்தி வருகின்றனர்.

பல்வேறு முக்கிய அரசியல் பிரமுகர்கள் பயன்படுத்தும் கார்களைப் பற்றிய தகவலை மேலே பார்த்தோம். தொடர்ந்து, மாநிலத்தின் முதலமைச்சர்களுக்கு வழங்கப்படும் கார்களின் புல்லட் ப்ரூஃப் போன்று பாதுகாப்பு அம்சங்கள் குறித்த தகவலை கீழே காணலாம்.

பெரும்பாலான இந்திய அரசியல்வாதிகள் மற்றும் பிரபல மனிதர்கள், பாதுகாப்பு காரணங்களை முன்னிட்டு புல்லட் புரூஃப் வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதில், பெரும்பாலான வாகனங்கள் OEM (Original Equipment Manufacturer) எனப்படும் அசல் உபகரண உற்பத்தியாளர் மூலமாகவே தயாரிக்கப்படுகின்றன.

ஆனால் வேறு வழிகள் மூலமாக தங்கள் வாகனத்தை புல்லட் புரூஃப் வசதி கொண்டதாக மாற்றி கொள்வதையும் பலர் விரும்புகின்றனர். அதாவது வெளியிடங்களில் கொடுத்து புல்லட் புரூஃப் வசதியை ஏற்படுத்தி கொள்வதில் அவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இதில், இரண்டாவது வழி செலவு குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.

ரெகுலர் வெர்ஷன்களிடம் இருந்து எளிதாக வேறுபடுத்தி பார்க்க முடியாத வகையில்தான் பெரும்பாலும் புல்லட் புரூஃப் வாகனங்கள் டிசைன் செய்யப்படுகின்றன. காருக்கு உள்ளே இருப்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே இதன் நோக்கம். ஆனால் உண்மையில் ரெகுலர் வாகனத்துடன் ஒப்பிடும்போது புல்லட் புரூஃப் வாகனங்கள் பல்வேறு வகைகளில் வேறுபட்டவை.

டர்போ எக்ஸ்ட்ரீம் என்ற யூ-டியூப் சேனலில் தற்போது வெளியிடப்பட்டுள்ள வீடியோ ஒன்று புல்லட் புரூஃப் டொயோட்டா லேண்ட் க்ரூஸர் எல்சி200 (Toyota Land Cruiser LC200) நாம் நெருக்கமாக காண உதவி செய்கிறது. இந்த வாகனம் முதல் அமைச்சர் ஒருவருக்கு சொந்தமானது என அந்த வீடியோவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த முதல்வரின் பெயரை வீடியோவில் குறிப்பிடவில்லை.

ஃபேஸ்லிஃப்ட் வேலைக்காக வாகனம் வந்திருந்தபோது இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது எல்சி200 காரின் 2009 மாடல் ஆகும். ஆனால் ஆஃப்டர் மார்க்கெட் தயாரிப்புகள் மூலம் லேட்டஸ்ட் ஜென்ரேஷன் லுக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது. இருப்பினும் புல்லட் புரூஃப் வாகனத்தில் சரியாக என்ன வித்தியாசம்? என்பதை இந்த வீடியோ காட்டுகிறது.

இந்த எஸ்யூவியின் முன்பக்க விண்டுஷீல்டு மற்றும் சைடு விண்டோஸ் ஆகியவற்றை காட்டுவதன் மூலம் வீடியோ தொடங்குகிறது. கார்களில் பயன்படுத்தப்படும் வழக்கமான ஆட்டோமொபைல் கண்ணாடிகளை காட்டிலும் இந்த கண்ணாடிகள் தடிமனாக உள்ளன. எல்சி200 காரின் எடை தோராயமான 2,600 கிலோ என இந்த வீடியோவில் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் புல்லட் புரூஃப் பணிகள் முடிவடைந்த பிறகு இதன் எடை 4,500 கிலோவாக அதிகரித்து விட்டதாக கூறப்பட்டுள்ளது!! இந்த காரில் 5,700 சிசி வி8 பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 381 பிஎச்பி பவரை உருவாக்க கூடியது. இந்த வாகனம் மிகவும் பவர்ஃபுல்லானது என இந்த வீடியோவில் தோன்றும் நபர் கூறுகிறார்.

ஆனால் கூடுதல் எடை காரணமாக, ரெகுலர் எல்சி200 அளவிற்கு இது ரெஸ்பான்ஸிவ்-ஆக இருக்காது எனவும் அவர் தெரிவிக்கிறார். அத்துடன் எடை அதிகரிப்பின் காரணமாக இந்த காரில் பாடி ரோலும் அதிகரித்து விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் இந்த காரின் கதவுகளை திறப்பது கொஞ்சம் கடினமான விஷயம்தான்.

டோர்களில் மேற்கொள்ளப்பட்ட கவச பணிகளே இதற்கு காரணமாகின்றன. அதே சமயம் பஞ்சர் அல்லது புல்லட் துளைகளிடம் இருந்து பாதுகாக்கும் வகையில் இந்த காரின் டயர்கள் சிறப்பு திரவத்தை கொண்டுள்ளன. இந்த காரின் இன்ஜின் பே கூட புல்லட் புரூஃப் வசதியை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த காரின் அன்டர்பாடியிலும் முழுமையான புல்லட் புரூஃப் வசதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இது கெவ்லர் பாதுகாப்பையும் பெற்றுள்ளது. ஐஇடி குண்டு வெடிப்புகளில் இருந்து காரில் பயணம் செய்பவர்களை பாதுகாப்பதற்காக இந்த வசதி செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








