கனவில்கூட நினைத்து பார்க்க முடியாத ஹம்மர் லிமோசைன் காரில் பயணித்த இந்தியர்கள்... எப்படி தெரியுமா..?

இந்தியாவைச் சேர்ந்த நடுத்தர குடும்பத்தினர் கனவில்கூட நினைத்து பார்க்கமுடியாத விலையுயர்ந்த ஆடம்பர காரில் பயணித்துள்ளனர். இதுகுறித்த கூடுதல் சுவாரஷ்ய தகவலை இந்த பதிவில் காணலாம்.

கனவில்கூட நினைத்து பார்க்க முடியாத ஹம்மர் லிமோசைன் காரில் பயணித்த இந்தியர்கள்... எப்படி தெரியுமா..?

வளர்ந்த பணக்கார நாடுகளுக்கு இணையாக இந்தியாவிலும் மிக மிக விலையுயர்ந்த ஆடம்பர கார்களின் பயன்பாடு அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. அதிலும், கடந்த சில ஆண்டுகளாக ஆடம்பரக் கார்களின் விற்பனை முந்தையக் காலகட்டங்களைக் காட்டிலும் சற்றே அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்று.

ஆனால், இந்த கார்களை அவ்வளவு எளிதில் இந்தியா சாலைகளில் நம்மால் பார்க்க முடிவதில்லை. பொதுவாக மாலை நேரங்கள் அல்லது வார இறுதி நாட்களில் மட்டுமே அந்த கார்களை காண முடிகின்றது.

கனவில்கூட நினைத்து பார்க்க முடியாத ஹம்மர் லிமோசைன் காரில் பயணித்த இந்தியர்கள்... எப்படி தெரியுமா..?

அவ்வாறு, அந்த கார்கள் சாலையில் பயணிக்கும்போது நம்மை அதன் கவர்ச்சியால் கவர தவிர்வதில்லை. மேலும், ஒரு முறையாவது அந்த காரில் பயணித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தை நம் மனத்தில் அவை விதைத்துவிட்டு செல்கின்றன. ஆனால், அதன் விலையோ மலையளவு இருப்பதால் நம்மால் அதனை கனவில்கூட நினைத்துகூட பார்க்க முடிவதில்லை.

கனவில்கூட நினைத்து பார்க்க முடியாத ஹம்மர் லிமோசைன் காரில் பயணித்த இந்தியர்கள்... எப்படி தெரியுமா..?

ஆனால், இந்த நிலை இப்போது முழுவதும் மாறிவிட்டது. ஏனென்றால், பல வாடகை வாகன நிறுவனங்கள் விலையுயர்ந்த ஆடம்பர ரக கார்களை வாடகைக்கு விட ஆரம்பித்துள்ளன. கிமீ மற்றும் நாள் கணக்குகளின் அடிப்படையில் அவை வாடகைக்கு கிடைக்கின்றன. ஆகையால், நம்மால் இந்த காரை வாங்கவே முடியாது என்று எண்ணிய கார்களைக்கூட மிக எளிதாக வாடகைக்கு எடுத்து பயன்படுத்தக்கூடிய சூழல் உருவாகியிருக்கின்றது.

கனவில்கூட நினைத்து பார்க்க முடியாத ஹம்மர் லிமோசைன் காரில் பயணித்த இந்தியர்கள்... எப்படி தெரியுமா..?

இந்தியா மட்டுமின்றி உலக நாடுகள் பலவற்றில் இந்த நிலையே காணப்படுகின்றது. எனவே, உலக நாடுகள் பலவற்றில் விலையுயர்ந்த ஆடம்பர ரக கார்களை வாடகைக்கு எடுப்பது மிக சுலபமான ஒன்றாக மாறிவிட்டது.

கனவில்கூட நினைத்து பார்க்க முடியாத ஹம்மர் லிமோசைன் காரில் பயணித்த இந்தியர்கள்... எப்படி தெரியுமா..?

இருப்பினும், வாடகைக்கு கிடைக்கும் ஆடம்பர கார்கள் ஒரு மாத சம்பளத்தை அடக்கிக் கொள்ளும் வகையிலான கட்டணத்தைப் பெற்றிருக்கின்றன. ஆகையால், சொகுசு வாகனங்கள் அடித்தட்டு மக்களால் பயன்படுத்த முடியாத ஒன்றாகவே எப்போதும் இருக்கின்றது.

இந்நிலையில், இந்தியாவின் நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்த குடும்பத்தினர் லிமோசைன் எனப்படும் அதிக நீளமுடைய ஆடம்பர காரில் பயணித்துள்ளனர்.

கனவில்கூட நினைத்து பார்க்க முடியாத ஹம்மர் லிமோசைன் காரில் பயணித்த இந்தியர்கள்... எப்படி தெரியுமா..?

வழக்கமான எஸ்யூவி, ஹேட்ச்பேக், எம்யூவி, எம்பிவ மற்றும் செடான் ரக கார்களில் பயணிப்பதைக் காட்டிலும் லிமோசைன் ரக கார்களில் பயணிப்பது என்பது புதுவிதமான அனுபவத்தை வழங்கும். சாதரணமாக சொகுசு கார்களில் பயணிப்பதே தனித்துவமான அனுபவத்தை வழங்கும். அதிலும், லிமோசைன் மாதிரியான ஆடம்பர கார்களில் பயணிப்பது என்பது கூடுதல் அலாதியான பயண அனுபவத்தை வழங்கும்.

கனவில்கூட நினைத்து பார்க்க முடியாத ஹம்மர் லிமோசைன் காரில் பயணித்த இந்தியர்கள்... எப்படி தெரியுமா..?

அவ்வாறு, நடுத்தர குடும்பத்தினர் ஹம்மர் நிறுவனத்தின் லிமோசைன் காரில் பயணித்தபோது எம்மாதிரியான அனுபவித்தைப் பெற்றனர் என்பதுகுறித்த தகவலைதான் இந்த பதிவில் நாம் காணவிருக்கின்றோம். இதுகுறித்த வீடியோ வட இந்திய மொழியான இந்தி மற்றும் ஆங்கிலத்தில் எடுத்துள்ளார் வீடியோவின் உரிமையாளர். அதேசமயம், இந்த வீடியோ இந்தியாவில் நிகழ்ந்தது அல்ல.

கனவில்கூட நினைத்து பார்க்க முடியாத ஹம்மர் லிமோசைன் காரில் பயணித்த இந்தியர்கள்... எப்படி தெரியுமா..?

நியூசிலாந்து நாட்டில் உள்ள ஆக்லாந்து எனப்படும் பகுதியில் எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த வீடியோவை கிஷ்ணாநெல் என்ற யுடியூப் தளம் வெளியிட்டுள்ளது.

குறிப்பிட்ட அந்த இளைஞர், அவரின் பெற்றோர்களை ஆச்சரியப்படுத்தவும், லக்சூரி காரின் பயண அனுபவத்தின்போது வெளிப்படும் அளவுகடந்த மகிழ்ச்சியையும் கண்டு மகிழ்வதற்காகவே மிக விலையுயர்ந்த காரை வாடகைக்கு எடுத்து பயன்படுத்தியுள்ளார்.

கனவில்கூட நினைத்து பார்க்க முடியாத ஹம்மர் லிமோசைன் காரில் பயணித்த இந்தியர்கள்... எப்படி தெரியுமா..?

சொகுசு வசதிகளுக்குப் பெயர்போன கார்களில் ஒன்று ஹம்மர் நிறுவனத்தின் தயாரிப்புகள். இந்த கார்களின் கேபினுக்குள் பல நட்சத்திர விடுதிகளில்கூட காணக்கிடைக்காத வசதிகள் வழங்கப்பட்டிருக்கும். இதனாலயே பல தொழிலதிபர்களின் விருப்பமான தேர்வுகளில் ஒன்றாக ஹம்மர் இருக்கின்றது.

இந்நிறுவனம், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உற்பத்தியை நிறுத்தியிருந்தநிலையில், விரைவில் மின்சார காருடன் மீண்டும் உலகில் களமிறங்க இருக்கின்றது.

மிக நீளமான தோற்றத்தில் காணப்படும் ஹம்மர் லிமோசைன் கார் பார்ப்பதற்கு மட்டுமின்றி பயன்படுத்துவதிலும் பிரம்மிப்பை ஏற்படுத்தும் வகையில் இருக்கும். இத்தகைய காரில்தான் இந்தியாவைச் சேர்ந்த குடும்பத்தினர் தற்போது பயணித்திருக்கினறனர்.

கனவில்கூட நினைத்து பார்க்க முடியாத ஹம்மர் லிமோசைன் காரில் பயணித்த இந்தியர்கள்... எப்படி தெரியுமா..?

இந்த கார்களில் அவர்கள் பயணித்தபோது வெளிநாட்டவர்கள் பலரே அந்த காரை ஆச்சரியத்துடன் பார்த்ததை நம்மால் காண முடிகின்றது.

ஒரு சிலர் ஹம்மர் லிமோசன் முன்பாக நின்று செல்ஃபி எடுத்ததையும் காரை வாடகைக்கு எடுத்த இளைஞர் கேமிராவில் படமாக்கியுள்ளார். தொடர்ந்து, இந்த ஆனந்த பயணத்தின் பங்காக அவர்கள் சில சுற்றுலாத் தளங்களைக் கண்டு மகிழ்கின்றனர். இவையனைத்தும் அந்த வீடியோவில் இடம்பெற்றிருக்கின்றது.

கனவில்கூட நினைத்து பார்க்க முடியாத ஹம்மர் லிமோசைன் காரில் பயணித்த இந்தியர்கள்... எப்படி தெரியுமா..?

இதுபோன்ற கார்கள் இந்தியாவிலும் வாடகைக்கு கிடைக்கின்றன. குறிப்பாக, கிரிஸ்லர் 300சி லிமோசைன் கார்கள் இந்தியாவில் வாடகை கார் சேவையில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதுமட்டுமின்றி ஒரு சில சாதாரண கார்களை வாடகை மாடிஃபை நிறுவனங்கள் லிமோசைன் கார்களாக மாடிஃபை செய்து பயன்படுத்தி வருகின்றனர். பஞ்சாப் மாநிலத்தில் இத்தகைய வாகனத்தை ஒருவர் பயன்படுத்தி வருகின்றார்.

More from DriveSpark

Article Published On: Thursday, March 19, 2020, 14:58 [IST]
English summary
Indian Youngsters Taking His Parents Out With Hummer Limousine. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+