மேகி நூடுல்ஸைபோல் விரைவாக சார்ஜாகும் மின்சார கார்.. 5 நிமிஷம் போதும் 50 கிமீ ஊர் சுற்றலாம்..

மேகி நூடுல்ஸைபோல் மிக விரைவாக சார்ஜ் ஏற்றிக்கொள்ளும் மின்சார காரை ஃபியட் நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

மேகி நூடுல்ஸைபோல் விரைவாக தயாராகும் மின்சார கார்.. 5 நிமிஷம் போதும் 50 கிமீ ஊர் சுற்றலாம்.. இந்திய அறிமுகம் எப்போது!

இத்தாலி நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் எஃப்சிஏ (FCA) குழுமத்தின் அங்கமாக ஃபியட் ஆட்டோமொபைல்ஸ் (Fiat Automobiles) நிறுவனம் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்நிறுவனம், சில கடுமையான கெடுபிடி காரணமாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு இந்தியா சந்தையை விட்டே வெளியேறியது.

ARE YOU ON INSTAGRAM? FOLLOW TAMIL DRIVESPARK ON INSTAGRAM - CLICK HERE!

மேகி நூடுல்ஸைபோல் விரைவாக தயாராகும் மின்சார கார்.. 5 நிமிஷம் போதும் 50 கிமீ ஊர் சுற்றலாம்.. இந்திய அறிமுகம் எப்போது!

இந்நிலையில், அந்நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையின்படி மீண்டும் இந்தியாவில் அது களமிறங்க இருப்பது உறுதியாகியுள்ளது.

இந்தியாவில் புத்துயிர் பெறும் விதமாக ஃபியட் 500 என்ற மின்சார காரை களமிறக்கவும் அது திட்டமிட்டுள்ளது. இது, ஃபியட் 500 மாடலின் மூன்றாம் தலைமுறை மாடலாக கடந்த சில மாதங்களுக்கு முன்பே அறிமுகம் செய்யப்பட்ட மாடல் ஆகும்.

MOST READ: அடுத்தடுத்து 3 புதிய எஸ்யூவி மாடல்கள்... இந்தியாவில் சந்தையை விரிவுப்படுத்தும் ஜீப்...

மேகி நூடுல்ஸைபோல் விரைவாக தயாராகும் மின்சார கார்.. 5 நிமிஷம் போதும் 50 கிமீ ஊர் சுற்றலாம்.. இந்திய அறிமுகம் எப்போது!

இந்த மாடலே ஃபியட் நிறுவனத்தின் முதல் மின்சார காராகும். இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்து வரும்நிலையில் ஃபியட் நிறுவனம் இந்த காரை இங்கு அறிமுகம் செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே, பல நிறுவனங்கள் தங்களின் புதிய மின்சார கார்களைப் போட்டி போட்டுக் கொண்டு அறிமுகம் செய்து வருகின்றன.

மேகி நூடுல்ஸைபோல் விரைவாக தயாராகும் மின்சார கார்.. 5 நிமிஷம் போதும் 50 கிமீ ஊர் சுற்றலாம்.. இந்திய அறிமுகம் எப்போது!

தற்போது கொரோனா வைரஸ் பீதியின் காரணமாக வாகனங்களின் அறிமுகத்தில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இந்த கசப்பான காலம் நிறைவடைந்த பின்னர் ஏராளமான கார்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இதற்காகவே சில நிறுவனங்கள் கழுகைப் போல் காத்துக் கொண்டிருக்கின்றன.

அந்தவகையில், ஃபியட் நிறுவனத்தின் 500 இ மின்சார கார் விரைவில் அறிமுகமாக இருக்கின்றது.

MOST READ: ஆம்புலன்ஸ் பற்றாக்குறை: பைக்குகளையே உயிர்காக்கும் வாகனமாக மாற்றிய ஹீரோ... ரியல் ஹீரோ சார் நீங்க..

மேகி நூடுல்ஸைபோல் விரைவாக தயாராகும் மின்சார கார்.. 5 நிமிஷம் போதும் 50 கிமீ ஊர் சுற்றலாம்.. இந்திய அறிமுகம் எப்போது!

இந்த காரை உருவாக்குவதற்காக ஃபியட் நிறுவனம் தனித்துவமான பிளாட்பாரத்தை உருவாக்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, புது டிசைன் தாத்பரியங்கள் மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் இந்த காரில் எதிர்பார்க்கப்படுகின்றன.

அதேசமயம், இந்த கார் முந்தைய 500 மாடலைக் காட்டிலும் சற்று அதிக இடவசதிக் கொண்டதாக உருவாக்கப்பட்டிருக்கின்றது.

மேகி நூடுல்ஸைபோல் விரைவாக தயாராகும் மின்சார கார்.. 5 நிமிஷம் போதும் 50 கிமீ ஊர் சுற்றலாம்.. இந்திய அறிமுகம் எப்போது!

இந்த காரின் வீல் பேஸ் 2 செமீ நீளமுடையதாக உள்ளது. மேலும், இந்த மின்சார காரில் அதிக திறனை வெளிப்படுத்தும் விதமாக 87kW திறனுடைய மின் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கின்றது. இதற்கு தேவையான மின்னாற்றலை 4 kWh லித்தியம்-அயன் பேட்டரி வழங்கும்.

MOST READ: பிஎஸ்4 வாகனங்களை பதிவு செய்வதற்கு காலக்கெடு மீண்டும் நீட்டிக்க வாய்ப்பு!

மேகி நூடுல்ஸைபோல் விரைவாக தயாராகும் மின்சார கார்.. 5 நிமிஷம் போதும் 50 கிமீ ஊர் சுற்றலாம்.. இந்திய அறிமுகம் எப்போது!

இந்த பேட்டரியை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 320 கிமீ தூரம் வரை செல்ல முடியுமாம். அந்த அளவிற்கு திறன் கொண்டது என ஃபியட் தெரிவிக்கின்றது.

இதேபோன்று, 500இ காரில் இடம்பெற்றிருக்கும் மின் மோட்டார் வெறும் 9.0 செகண்டுகளில் 0-100 கிமீ என்ற வேகத்தை எட்டும் அதீத திறனைக் கொண்டதாக உள்ளது. அதுமட்டுமின்றி, இது மணிக்கு 150கிமீ வேகத்தில் செல்லும்.

மேகி நூடுல்ஸைபோல் விரைவாக தயாராகும் மின்சார கார்.. 5 நிமிஷம் போதும் 50 கிமீ ஊர் சுற்றலாம்.. இந்திய அறிமுகம் எப்போது!

இந்த திறனைக் காட்டிலும் இதன் சார்ஜிங் திறன் நம்மை ஆச்சரியத்தில் மூழ்க வைக்கின்ற வகையில் இருக்கின்றது. 500 மின்சார காரில் 85kW ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டிருக்கின்றது. இது வெறும் 5 நிமிட சார்ஜில் 50 கிமீ தூரம் வரை செல்லுகின்ற அளவிற்கு திறனை மிக விரைவில் சேகரித்துக்கொள்ளும்.

MOST READ: ஃபோக்ஸ்வேகன் டி ராக் எஸ்யூவி விலை கணிசமாக குறைய வாய்ப்பு!

மேகி நூடுல்ஸைபோல் விரைவாக தயாராகும் மின்சார கார்.. 5 நிமிஷம் போதும் 50 கிமீ ஊர் சுற்றலாம்.. இந்திய அறிமுகம் எப்போது!

தொடர்ந்து, வெறும் 35 நிமிடங்களில் 80 சதவீத சார்ஜை பெற்றுவிடும். எனவே, இந்த காரை சார்ஜ் செய்ய நீண்ட நேரம் காத்திருக்க வேண்டும் என்ற அவலநிலை தவிர்க்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த அம்சமானது ஃபாஸ்ட் சார்ஜிங் நிலையங்களில் மட்டுமே வேலை செய்யும். சாதாரண சார்ஜிங் போர்ட்டில் இது எடுபடாது. உதாரணாக 7.4 கிலோவாட் திறன் கொண்ட பிளக் பாயிண்டில் வைத்து இந்த காரை சார்ஜ் செய்தோமேயானால், ஏறக்குறைய 6 மணி நேரங்கள் வரை எடுத்துக் கொள்ளுமாம் முழு சார்ஜடைய..

மேகி நூடுல்ஸைபோல் விரைவாக தயாராகும் மின்சார கார்.. 5 நிமிஷம் போதும் 50 கிமீ ஊர் சுற்றலாம்.. இந்திய அறிமுகம் எப்போது!

எனவே, மிக வேகமாக சார்ஜ் செய்ய எப்போதும் ஃபாஸ்ட் சார்ஜிங் பாயிண்டுகளைப் பயன்படுத்த ஃபியட் நிறுவனம் அறிவுறுத்துகின்றது. இந்த காருடன் வீட்டிலேயே சார்ஜ் செய்துகொள்ள ஏதுவாக ஈசி வால்பாக்ஸ் என்ற சார்ஜிங் கிட்டையும் அந்நிறுவனம் வழங்க இருக்கின்றது. இதனை எஞ்ஜி இபிஎஸ் உதவியுடன் அந்நிறுவனம் தயார் செய்திருக்கின்றது. இது 2.3 கிலோவாட் திறன் கொண்டதாகும். இதனை 7.4 கிலோவாட்டிற்கு நம்மால் அப்கிரேட் செய்துகொள்ள முடியும்.

மேகி நூடுல்ஸைபோல் விரைவாக தயாராகும் மின்சார கார்.. 5 நிமிஷம் போதும் 50 கிமீ ஊர் சுற்றலாம்.. இந்திய அறிமுகம் எப்போது!

இதுதவிர தொழில்நுட்ப அம்சங்களாக இந்த காரில் யு கன்னெக்ட் என்ற அம்சத்தைக் கொண்ட 5 இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட இருக்கின்றது. இத்துடன், 7 இன்ச் டிஎஃப்டி டிஸ்பிளே மற்றும் 10.25 இன்ச் எச்டி தொடு திரை உள்ளிட்டவை வழங்கப்பட இருக்கின்றது. இந்த தொடு திரை நேவிகேஷன், ஒயர்லெஸ் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ ஆகிய அம்சங்களைக் கொண்டிருக்கும்.

மேகி நூடுல்ஸைபோல் விரைவாக தயாராகும் மின்சார கார்.. 5 நிமிஷம் போதும் 50 கிமீ ஊர் சுற்றலாம்.. இந்திய அறிமுகம் எப்போது!

தற்போது இந்த காரின் உற்பத்தி இத்தாலியில் உள்ள மிரஃபியோரி ஆலையில் தொடங்கப்பட்டுள்ளது. எனவே, இந்த கார் சிபியூ வாயிலாக இந்தியாவிற்கு விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், எப்போது என்ற அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகவில்லை. இருப்பினும், இந்த வருடத்தின் இறுதிக்குள் இது அறிமுகம் செய்யப்பட்டுவிடலாம் என சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேகி நூடுல்ஸைபோல் விரைவாக தயாராகும் மின்சார கார்.. 5 நிமிஷம் போதும் 50 கிமீ ஊர் சுற்றலாம்.. இந்திய அறிமுகம் எப்போது!

அவ்வாறு, ஃபியட்500 மின்சார இந்தியாவில் விற்பனைக்கு வரும்போது அதிகபட்ச விலையாக இந்த கார் 40 லட்சம் ரூபாய் என்ற விலையில் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தளவிற்கு உச்சபட்ச அளவில் இதன் விலை நிர்ணயிக்கப்பட்டிருப்பதற்கு, காரில் காணப்படும் வேறலெவல் தொழில்நுட்ப அம்சங்களும், ரெட்ரோ ஸ்டைல் தோற்றமுமே முக்கிய காரணமாக இருக்கின்றது.

Source: IAB

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Italian Brand Fiat 500 EV Launch Confirmed In India. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X