முகம் தெரியாத நபருக்காக தன் உயிரை பணயம் வைத்த போலீஸ்... இவரின் செயலை பார்த்து உலகமே பாராட்டுது...

முகம் தெரியாத ஓர் நபரின் உயிருக்காக இத்தாலி நாட்டு போலீஸ்காரர் ஒருவர் அவர் உயிரை பயணம் வைத்து துணிச்சலான காரியத்தைச் செய்திருக்கின்றார். இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

முகம் தெரியாத நபருக்காக தன் உயிரை பணயம் வைத்த போலீஸ்... இவரின் செயலை பார்த்து உலகமே பாராட்டுது...

சட்டம் ஒழுங்கு மற்றும் பொதுமக்களைப் பாதுகாக்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். பல்வேறு உண்ணதமான பணிகளை இவர்கள் மேற்கொண்டு வந்தாலும் ஒரு சில போலீஸாரின் முரண்பாடான செயலால் ஒட்டுமொத்த துறையின் மீது கலங்கம் ஏற்பட்டு வருகின்றது. இருப்பினும், காவல்துறையில் இருக்கும் சில நல்லுங்கள் தங்களை பொதுமக்கள் எவ்வாறு பழித்தாலும் பரவாயில்லை என நினைத்து சிறப்பான மக்கள் சேவையில் ஈடுபட்டு வருகின்றனர்.

முகம் தெரியாத நபருக்காக தன் உயிரை பணயம் வைத்த போலீஸ்... இவரின் செயலை பார்த்து உலகமே பாராட்டுது...

இதற்கான பாராட்டை அரசிடம் மட்டுமின்றி பொதுமக்களிடத்தில் அவர்கள் பெற்றுக் கொள்கின்றனர். அந்தவகையில், தற்போது உலக மக்களின் பாராட்டை போலீஸார் ஒருவர் பெற்றிருக்கின்றார். இவர், உயிருக்காக போராடிக் கொண்டிருந்த ஓர் நபருக்காக தன் உயிரைப் பணயம் வைத்து சிறுநீரகம் மாற்று சிகிச்சைக்கு உதவியுள்ளார்.

முகம் தெரியாத நபருக்காக தன் உயிரை பணயம் வைத்த போலீஸ்... இவரின் செயலை பார்த்து உலகமே பாராட்டுது...

விபத்தால் மரணித்த நபரின் சிறுநீரகத்தை வேறொரு நபருக்கு ஆம்புலன்ஸ் அல்லாமல் சூப்பர் காரைப் பயன்படுத்தி உரிய நேரத்தில் கொண்டு சேர்த்துள்ளார். இதற்காக அவர் லம்போர்கினி ஹூராகேன் காரைப் பயன்படுத்தியிருக்கின்றார். இந்த சூப்பர் காரைப் பயன்படுத்தியே சுமார் 500 கிமீ தூரத்தில் இருந்த மருத்துவமனையை வெறும் 2 மணி நேரத்தில் சென்று சேர்ந்திருக்கின்றார்.

முகம் தெரியாத நபருக்காக தன் உயிரை பணயம் வைத்த போலீஸ்... இவரின் செயலை பார்த்து உலகமே பாராட்டுது...

இந்த உன்னதமான பணிக்காக அவரை பலர் பாராட்டி வருகின்றனர். குறிப்பாக, சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் ஆஹா, ஓஹோ என பாராட்டி வருகின்றனர். போலீஸார், சிறுநீரகத்தை லம்போர்கினி ஹூராகேன் சூப்பர் காரில் எடுத்துச் செல்லும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதுகுறித்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

போலீஸார் பயன்படுத்திய சூப்பர் காரானது லம்போர்கினி நிறுவனம், இத்தாலி போலீஸாருக்கு பரிசாக வழங்கப்பட்ட காராகும். இதனை 2015ம் ஆண்டே லம்போர்கினி நிறுவனம் வழங்கியிருக்கின்றது. இதுபோன்று மேலும் பல சூப்பர் கார்களை இத்தாலி காவல்துறை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தகுந்தது. குறிப்பாக, மருத்துவ அவசர உதவிகளுக்காக இக்கார் அந்நாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

முகம் தெரியாத நபருக்காக தன் உயிரை பணயம் வைத்த போலீஸ்... இவரின் செயலை பார்த்து உலகமே பாராட்டுது...

அதாவது உடல் உறுப்பு, மருந்து போன்றவற்றை அவசரமாகக் கொண்டு செல்ல இக்கார்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதை கையாள்வதற்கு ஏதுவாக சிறிய குளிரூட்டி பெட்டி அமைப்பு அக்கார்களில் வழங்கபட்டிருக்கின்றது. இதைக் கொண்டே இத்தாலி போலீஸார்கள் அதிவேகத்தில் உடல் உறுப்பு மற்றும் மருந்துகளை உரிய நேரத்தில் மருத்துவமனையில் கொண்டு சேர்க்கின்றனர்.

முகம் தெரியாத நபருக்காக தன் உயிரை பணயம் வைத்த போலீஸ்... இவரின் செயலை பார்த்து உலகமே பாராட்டுது...

லம்போர்கினி ஹூராகேன் காரில் எல்பி610-4 எனும் 5.2 லிட்டர் நேட்சுரல்லி அஸ்பயர்ட் வி10 எஞ்ஜினைப் பயன்படுத்தி வருகின்றது. இக்கார், அதிகபட்சமாக 8000 ஆர்பிஎம்மில் 602 பிஎச்பி-யையும், 6500 ஆர்பிஎம்மில் 560 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். இது உச்சபட்சமாக மணிக்கு 325 கிமீ வேகத்தில் காற்றைக் கிழித்துச் செல்லக் கூடியது.

முகம் தெரியாத நபருக்காக தன் உயிரை பணயம் வைத்த போலீஸ்... இவரின் செயலை பார்த்து உலகமே பாராட்டுது...

பொதுவாக இந்தியாவில் உடல் உறுப்புகளை ஓர் மருத்துவமனையில் இருந்து மற்றொரு மருத்துவமனைக் கொண்டு செல்ல ஆம்புலன்ஸ்களே பயன்படுத்தப்படும். ஆனால், இங்கு அதிவேக போக்குவரத்திற்காக சூப்பர் கார்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதுதவிர, உடல் உறுப்பைக் கொண்டு செல்லும் வாகனத்திற்கு தடையில்லா போக்குவரத்து வழங்கும் நடவடிக்கையையும் பிற போலீஸார் எடுக்கின்றனர்.

முகம் தெரியாத நபருக்காக தன் உயிரை பணயம் வைத்த போலீஸ்... இவரின் செயலை பார்த்து உலகமே பாராட்டுது...

இத்தாலி போலீஸார் பயன்படுத்தும் சூப்பர் கார்கள் வெள்ளை மற்றும் நீல நிறத்தில் காட்சியளிக்கின்றது. இதில், 'போலிஸியா' (Polizia) எனும் எழுத்துக்கள் ஒட்டப்பட்டிருக்கும். இதற்கு இத்தாலி மொழியின்படி காவல் என்று அர்த்தம் ஆகும். தொடர்ந்து காரின் மேற்கூரையில் சைரன் மற்றும் ஃபிளாஷர் மின் விளக்குகளும் ஒட்டப்பட்டிருக்கும். இக்கார்களை சில நேரங்களில் உயர் வேகத்தில் செல்லும் குற்றவாளிகளைப் பிடிக்கவும் இத்தாலி போலீஸார் பயன்படுத்துகின்றனர்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Italian Police Use Lamborghini Huracan To Transport Kidney To Hospital: Video. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X