டாடாவின் ஓட்டுநரில்லா தானியங்கி மின்சார வாகனம்... இந்தியாவில் அறிமுகமாகின்றதா..?

டாடா நிறுவனத்திற்கு சொந்தமான ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் ஓட்டுநரில்லாமல் பயணிக்கும் காரின் கான்செப்ட் மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் சிறப்பு தகவலை இந்த பதிவில் காணலாம்.

டாடாவின் ஓட்டுநரில்லா தானியங்கி மின்சார வாகனம்... இந்தியாவில் அறிமுகமாகின்றதா..?

உலக நாடுகள் முழுவதிலும் மின்சார வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகின்றது. ஆகையால், வாகன உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் எதிர்காலத்திற்கான மின்சார வாகனங்களை வடிவமைக்கத் தொடங்கியுள்ளன.

அந்தவகையில், நாட்டின் ஜாம்பவான் நிறுவனங்களில் ஒன்றான டாடா நிறுவனத்திற்கு சொந்தமான ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் புதிய எதிர்கால எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகம் செய்துள்ளது.

டாடாவின் ஓட்டுநரில்லா தானியங்கி மின்சார வாகனம்... இந்தியாவில் அறிமுகமாகின்றதா..?

இந்த மின்சார வாகனத்திற்கு ஓட்டுநர் தேவையில்லை. அது தானாகவே இயங்கும் தன்மைக் கொண்ட தானியங்கி காராகும். இந்த ஓட்டுநர் தேவைப்படாத மின்சார வாகனத்தை அந்நிறுவனம் கான்செப்ட் மாடலாக தற்போது தயார் அறிமுகம் செய்துள்ளது. விரைவில் விற்பனைக்கான தொடங்கப்படும் என கூறப்படுகின்றது.

ஸ்பின்-ஆஃப் என்னும் திட்டத்தின்கீழ் இந்த எதிர்கால தானியங்கி காரை அது தயாரித்துள்ளது. இது மத்திய இங்கிலாந்தில் உள்ள வார்விக் பல்கலைகழகத்தின் புதிய கண்டுபிடிப்புகளுக்கான மையமாகும்.

டாடாவின் ஓட்டுநரில்லா தானியங்கி மின்சார வாகனம்... இந்தியாவில் அறிமுகமாகின்றதா..?

இந்த மின்சார தானியங்கி வாகனம் அட்வான்ஸ்டு தொழில்நுட்பங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆகையால், இது ஓர் துறையை மட்டுமே சார்ந்தில்லாமல் அனைத்து துறைகளிலும் பயனளிக்கும் என நம்பப்படுகின்றது.

தற்போது இந்த வாகனத்திற்கு 'புராஜெக்ட் வெக்டர்' என்ற பெயரை ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் வைத்திருக்கின்றது.

டாடாவின் ஓட்டுநரில்லா தானியங்கி மின்சார வாகனம்... இந்தியாவில் அறிமுகமாகின்றதா..?

இந்த வாகனத்தின் அறிமுகத்தைத் தொடர்ந்து, ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் சிஇஓ-வாக பணியாற்றி வரும் ரால்ஃப் ஸ்பெட்ச் உரையாற்றினார். அப்போது அவர், "இந்த புராஜெக்ட் வெக்டர் அறிமுகத்தினால் ஜாகுவார் லேண்ட் ரோவர் எதிர்கால வாகன தயாரிப்பின் தலைவனாக காட்சியளிக்கத் தொடங்கியுள்ளது. இது, சமூகத்தில் ஆரோக்கியமானதாகவும், பாதுகாப்பானதாகவும் செயல்படும். மேலும், சுற்றுப்புறச்சூழலுக்கு நண்பனாகவும் இருக்கும்" என தெரிவித்தார்.

டாடாவின் ஓட்டுநரில்லா தானியங்கி மின்சார வாகனம்... இந்தியாவில் அறிமுகமாகின்றதா..?

இந்த தானியங்கி மின்சார வாகனத்தில் பயணிக்கும்போது அசௌகரியமான உணர்வு ஏற்படக்கூடாது என்பதற்காக அந்நிறுவனம் சில வடிவமைப்புகளை பார்த்து பார்த்து செய்துள்ளது. குறிப்பாக, அதிக இட வசதி இருக்க வேண்டும் என்பதற்காக இந்த வாகனத்தை நான்கு மீட்டர் நீளத்தில் வடிவமைத்துள்ளது. மேலும், முழுக்க முழுக்க இந்த வாகனம் நகர பயன்பாட்டைக் கருத்தில் கொண்டே தயாரிக்கப்பட்டுள்ளது.

டாடாவின் ஓட்டுநரில்லா தானியங்கி மின்சார வாகனம்... இந்தியாவில் அறிமுகமாகின்றதா..?

முக்கியமாக, வாடகை பயன்பாட்டைக் கருத்தில் கொண்டு இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆகையால் தனியார் பயன்பாட்டிற்கு இது கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது. இதன் கட்டமைப்பும் வாடகை வாகனங்களுக்கு இணையதாக உள்ளது.

டாடாவின் ஓட்டுநரில்லா தானியங்கி மின்சார வாகனம்... இந்தியாவில் அறிமுகமாகின்றதா..?

தொடர்ந்து, இந்த வாகனம் தானியங்கி (ஓட்டுநர் இல்லா) வாகனம் என்பதால் இதன் மேற்கூரைப் பகுதியில் தனித்துவமான ஆண்டனா வசதி வழங்கப்பட்டுள்ளது. இது இணையத்துடன் இணைந்து நேவிகேஷனைப் பயன்படுத்தி குறிப்பிட்ட இடத்திற்கு மட்டும் சென்று திரும்பி வரும். அதற்கேற்ப பல்வேறு ஆட்டோ இன்டலிஜென்ஸ் தொழில்நுட்பங்கள் இந்த வாகனத்தில் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகின்றது.

டாடாவின் ஓட்டுநரில்லா தானியங்கி மின்சார வாகனம்... இந்தியாவில் அறிமுகமாகின்றதா..?

தொடர்ந்து, இந்த வாகனத்திற்கான எஞ்ஜின் மற்றும் பேட்டரி போன்றவை காரின் தரை தளத்தில் நிறுவப்பட்டுள்ளன. ஆகையால், வாகனத்தின் கேபின் முழுக்க முழுக்க பயணிகளுக்கான இட வசதியைக் கொண்டதாக காட்சியளிக்கின்றது. தொடர்ந்து, இது பயணிகள் வாகனமாக மட்டுமின்றி டெலிவரி சேவை அல்லது பார்சல் சர்வீஸ் போன்ற துறைகளிலும் பயனளிக்கின்ற வகையில் அது வடிவமைக்கப்பட்டுள்ளது.

டாடாவின் ஓட்டுநரில்லா தானியங்கி மின்சார வாகனம்... இந்தியாவில் அறிமுகமாகின்றதா..?

இந்த வாகனம் 2021ம் ஆண்டிற்கு பின் சர்வதேச சந்தையில் பயன்பாட்டிற்கு வரவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்திய வருகைப் பற்றிய தகவல் எதுவும் இல்லை.

இந்த ஓட்டுநர் தேவைப்படாத புராஜெக்ட் வெக்டர் மின்சார வாகனம் ஒரு முழுமையான சார்ஜில் 160 கிமீ ரேஞ்சை வழங்கும் திறனைப் பெற்றிருக்கின்றது.

டாடாவின் ஓட்டுநரில்லா தானியங்கி மின்சார வாகனம்... இந்தியாவில் அறிமுகமாகின்றதா..?

இதேபோன்று, இந்த மின்சார வாகனம் தானியங்கியாக இருந்தாலும் ஸ்டியரிங் வீல் கொடுக்கப்பட்டுள்ளது. எந்திரம் அல்லது தொழில்நுட்ப கோளாறு ஏற்படும்போது இது பயனளிக்கும்.

தற்போது, கான்செப்ட் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், விரைவில் உற்பத்தியை தொடங்குவதற்கான தீவிரம் செய்யப்பட உள்ளது. ஆகையால், மிக விரைவில் இந்த மின்சார வாகனம் சர்வதேச சந்தையில் புரட்சியை செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, February 21, 2020, 18:44 [IST]
English summary
Jaguar Land Rover Unveils Driverless Electric Concept Car. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+