60 வருடங்களாக விற்பனையில் இருக்கும் ஜாகுவார் இ-டைப் ஸ்போர்ட்ஸ் கார்!! ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு வருகிறது

ஜாகுவார் இ-டைப் ஐகானிக் காரின் 60 வருட விற்பனை பயணத்தை நினைவுக்கூறும் விதமாக எஃப்-டைப் ஹெரிடேஜ் 60 எடிசன் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த ஸ்பெஷல் எடிசன் காரை பற்றிய கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

60 வருடங்களாக விற்பனையில் இருக்கும் ஜாகுவார் இ-டைப் ஸ்போர்ட்ஸ் கார்!! ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு வருகிறது

ஜாகுவாரின் ஸ்போர்ட்ஸ் காரான இ-டைப் 1961ல் இருந்து விற்பனையில் உள்ளது. அதிக செயல்திறன், அழகான டிசைன் மற்றும் மற்ற கார்களுக்கு சவாலான விலையினால் ஜாகுவாரின் லெஜெண்ட் காராக இ-டைப் விளங்குகிறது.

60 வருடங்களாக விற்பனையில் இருக்கும் ஜாகுவார் இ-டைப் ஸ்போர்ட்ஸ் கார்!! ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு வருகிறது

இத்தகைய சிறப்புமிக்க இ-டைப் அடுத்த 2021ஆம் ஆண்டோடு விற்பனைக்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதனை நினைவுக்கூறும் விதமாக எஃப்-டைப் என்ற ஸ்பெஷல் எடிசனை ஜாகுவார் விற்பனைக்கு கொண்டுவருகிறது.

60 வருடங்களாக விற்பனையில் இருக்கும் ஜாகுவார் இ-டைப் ஸ்போர்ட்ஸ் கார்!! ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு வருகிறது

எஃப்-டைப் ஆர் மாடலின் அடிப்படையில் உருவாகும் இந்த ஸ்பெஷல் எடிசன் காருக்கு இப்போதே உலகளவில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. வெளிப்பக்கத்தில் வழக்கமான இ-டைப் காரை போல் கவர்ச்சிகரமான ஹெர்வுட் பச்சை நிறத்தில் இந்த ஸ்பெஷல் எடிசன் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.

60 வருடங்களாக விற்பனையில் இருக்கும் ஜாகுவார் இ-டைப் ஸ்போர்ட்ஸ் கார்!! ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு வருகிறது

‘டைமண்ட் டர்ன்டு' 20-இன்ச் அலாய் சக்கரங்களை பெற்றுள்ள எஃப்-டைப் எடிசனை கூபே அல்லது மாற்றக்கூடிய உடல் ஸ்டைலில் வாடிக்கையாளர்கள் பெறும் விதத்தில் வழங்கப்படவுள்ளது. உட்புற கேபின் காரவே மற்றும் எபோனி வின்ட்சர் என்ற இரு விதமான லெதரில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

60 வருடங்களாக விற்பனையில் இருக்கும் ஜாகுவார் இ-டைப் ஸ்போர்ட்ஸ் கார்!! ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு வருகிறது

அதேநேரம் இ-டைப்பை போல் அலுமினியம் கன்சோல் ஃபினிஷ்-ஐயும் இதன் கேபின் பெற்றுள்ளது. இவற்றுடன் கூடுதலாக 60வது ஆண்டுநிறைவு எடிசன் என்பதை வெளிப்படுத்தும் முத்திரை இருக்கைகளின் மேற்புறத்தில் வழங்கப்பட்டுள்ளது.

60 வருடங்களாக விற்பனையில் இருக்கும் ஜாகுவார் இ-டைப் ஸ்போர்ட்ஸ் கார்!! ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு வருகிறது

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு எஃப்-டைப் ஹெரிடேஜ் 60 எடிசனில் சூப்பர்சார்ஜ்டு 5.0 லிட்டர் வி8 என்ஜின் எஃப்-டைப் ஆரில் இருந்து வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக வெளிப்படுத்தும் 575 பிஎஸ் மற்றும் 700 என்எம் டார்க் திறன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மூலமாக அனைத்து சக்கரங்களுக்கும் வழங்கப்படும்.

60 வருடங்களாக விற்பனையில் இருக்கும் ஜாகுவார் இ-டைப் ஸ்போர்ட்ஸ் கார்!! ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு வருகிறது

0-வில் இருந்து 96kmph வேகத்தை வெறும் 3.5 வினாடிகளில் எட்டிவிடும் இந்த ஸ்பெஷல் எடிசனை அதிகப்பட்சமாக 300kmph வேகத்தில் இயக்கலாம். உலகளவில் வெறும் 60 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்படவுள்ள எஃப்-டைப் ஹெரிடேஜ் 60 எடிசனின் விலை 122,500 ஜிபிபி-ஆக (ரூ.1.21 கோடி) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த நினைவு எடிசனை இந்தியர்களும் வாங்க வாய்ப்புள்ளதாக ஜாகுவார் நிறுவனம் வெளியிட்டுள்ள அதன் செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஜாகுவார் #jaguar
English summary
Jaguar F-Type Heritage 60 Edition Celebrates 60 Years Of The Iconic E-Type
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X