Just In
- 51 min ago
நடராஜன் உள்ளிட்ட இந்திய வீரர்களுக்கு மஹிந்திரா தார் பரிசு... சொந்த செலவில் வழங்குகிறார் ஆனந்த் மஹிந்திரா...
- 1 hr ago
பாரம்பரியமான தோற்றத்தை இழக்கும் பழமையான ஜாவா பைக்குகள்!! மாடர்ன் பைக்குகளை சமாளித்தாக வேண்டுமே...
- 2 hrs ago
டாடா அல்ட்ராஸ் ஐ-டர்போ மாடலின் வேரியண்ட் வாரியாக வசதிகள்!
- 2 hrs ago
முதல் முறையாக ரஃபேல் போர் விமானங்களை பயன்படுத்த திட்டம்... எப்போது தெரியுமா? தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!!
Don't Miss!
- Movies
கோடியில் புரளும் 'கார்த்தி'யின் இயக்குனர்கள்.. பின்னணி என்ன? அதிரடியாய் அலசும் இளம் விமர்சகர்!
- News
நல்ல கூட்டம் வேறு.. மாஸ்க் அணியாத மோடி.. குவியும் விமர்சனங்களும், அக்கறை அறிவுரைகளும்!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Lifestyle
உங்க இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க இந்த கசப்பு உணவுகளை சாப்பிட்டாலே போதுமாம்..!
- Sports
ஹப்பா கடைசியில் மனம் மாறிய சென்னை.. சிஎஸ்கே இறக்கிய பெரிய கேம் பிளான்.. கசிந்த தகவல்!
- Finance
வாராக் கடன்களை வசூலிக்க தனி வங்கி.. மோடி அரசின் புதிய திட்டம்..!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
மனைவிக்கு பரிசு வழங்க துருப்பிடித்த பழைய காரை புதுப்பித்த பிரபல ஹீரோ! யாருனு சொன்ன ஷாக்காயிடுவீங்க!
மிக மிக பழைய கார் ஒன்றை பிரபல ஹாலிவுட் ஹீரோ ஒருவர் மறுசீரமைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. எதற்காக என்பது பற்றிய சுவாரஷ்யத் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

பலர் 'கேம் ஆஃப் த்ரோன்' எனும் ஆங்கில வலைதொடர் பற்றி அறிந்திருப்பீர்கள் என நம்புகின்றோம். இதன் மூலம் ஹாலிவுட் திரையுலகில் பிரபலமடைந்தவரே ஜேசன் மோமோவா. இவர் வலைத்தொடரில் 'கல் ட்ரோகோ' எனும் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். இந்த தொடரைத்தொடர்ந்தே ஆக்வாமேன் (தண்ணீர் மனிதன்) எனும் ஆங்கில திரைப்படத்தில் சூப்பர் ஹீரோவாக அவர் காட்சியளித்தார்.

இதைத்தொடர்ந்து, பல்வேறு கதாபாத்திரங்களில் முன்னணி சூப்பர் ஹீரோக்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் தனது நடிப்பு திறன்மூலம் மக்களைக் கவர்ந்து வருகின்றார். இந்த புகழ்வாய்ந்த திரை நட்சத்திரமே தனது அழகிய மனைவிக்கு கவர்ச்சியான கார் ஒன்றை பரிசாக வழங்கியிருக்கின்றது. அது ஓர் மறு சீரமைக்கப்பட்டு (restored) ஃபோர்ட் முஸ்டாங் கார் ஆகும்.

இதுகுறித்த வீடியோவையைதான், ஜேசன் மோமோவா எனும் யுட்யூப் சேனலில் அவர் பதிவேற்றம் செய்திருக்கின்றார். அந்த வீடியோவில், தனது மனைவிக்கு மறு சீரமைக்கப்பட்ட, அதாவது பழைய காரை புதுப்பித்து வழங்கியது ஏன் என்பதைப் பற்றியும், அக்காரை மனைவிக்கு வழங்கியதற்கான முக்கியத்தும் மற்றும் காருடைய சிறப்புகள் பற்றிய தகவல்களையும் பகிர்ந்திருக்கின்றார். இதுகுறித்த தகவலைதான் இந்த பதிவில் நாம் பார்க்கவிருக்கின்றோம்.

வீடியோவில் முதலில் இடம்பெறும் அக்காரின் காட்சிகளை வைத்து பார்க்கையில் அது ஓர் மிக மிக பழைய தலைமுறை முஸ்டாங் மாடல் என்பது தெரியவந்துள்ளது. ஆனால், எந்த ஆண்டு தயாரிக்கப்பட்டது என்ற உறுதியான தகவல் தெரியவில்லை. இந்த கார் பல நாட்களாக பயனற்று நிறுத்தப்பட்டிருந்ததால், அதன் பெரும்பாலான பாகங்கள் துருவிற்கு இரையாகி இருக்கின்றது.

அந்தளவிற்கு பழைய காரையே தனது ஆசை மனைவிக்கு, ஜேசன் புதுப்பித்து வழங்கியிருக்கின்றார். "மிகப்பெரிய ஹீரோக்களில் ஒருவராக இருக்கும் ஓர் நபர் இந்த பழைய காரையா மாடிஃபை செய்து வழங்க வேண்டும்", என்று உங்களுக்கு கேட்கத் தோன்றலாம். ஆனால், புதுப்பித்த பின்னர் அக்கார் பெற்றிருக்கும் தோற்றத்தைப் பார்த்த பின்னால் உங்களால் இந்த கேள்வியைத் திரும்பக் கேட்கவே முடியாது.

அந்தளவிற்கும் மிகவும் கவர்ச்சிகரமான காராக அது உருவாகியிருக்கின்றது. பழைய துருப்பிடித்த பாகங்கள் அனைத்தும் நீக்கப்பட்டு அதற்கு இணையான புது பாகங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமின்றி, மேற்கூரை நீக்கப்பட்டு கூரையே இல்லாத அமைப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. இதுமட்டுமின்றி, பழைய இஞ்ஜின்களும் நீக்கப்பட்டு புத்தம் புதிய அதி-திறன் கொண்ட எஞ்ஜின் அதில் நிறுவப்பட்டிருப்பதையும் நம்மால் காண முடிகின்றது.

இதற்கிடையில், காரில் கூடுதல் பிரீமியம் அம்சங்கள் சேர்க்கும் விதமாக பழைய தொழில்நுட்ப அம்சங்கள் நீக்கப்பட்டு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அதாவது, இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், ஸ்டியரிங் வீல் மற்றும் இருக்கை என பல்வேறு அம்சங்கள் புதிதாக நிறுவப்பட்டிருக்கின்றன. இதேபோன்று, புதிதாக கருப்பு நிறம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இந்த புதிய நிறத்தால் காரே கருப்பு மயமாக மாறியுள்ளது.

இப்போது புரிகிறதா ஏன் ஜேசன் பழைய தலைமுறை ஃபோர்டு முஸ்டாங் காரை பரிசாக வழங்கியிருக்கின்றார் என்று... முதலில், இக்காரை பார்த்தவுடன் ஜேசனே ஆச்சரியத்தில் மூழ்கிவிட்டதாகக் கூறியிருக்கின்றார். அவரது மனைவியையும் அக்கார், அவ்வாறே ஆச்சரியத்தில் திணற வைத்திருக்கின்றது. அவர், பேச்சில்லாமல் உரைந்து நிற்பதை வீடியோவில் நம்மால் காண முடிகின்றது.
உண்மையில் புதிய காரை வாங்கி வழங்கியிருந்தால்கூட அவர் இந்தளவிற்கு ஆச்சரியம் அடைந்திருப்பாரா என எங்களால் உறுதியாகக் கூற முடியவில்லை. இந்த புதுப்பிக்கப்பட்ட ஃபோர்டு முஸ்டாங் அவரை அதிகளவிலேயேக் கவர்ந்துள்ளது. இதற்கு புதிய அம்சங்கள் மற்றும் கவர்ச்சியான கருப்பு நிற தோற்றமே முக்கிய காரணமாக இருக்கின்றது.