2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் முதன்முறையாக சோதனை ஓட்டம்...

எஃப்சிஏ நிறுவனம் இந்த மாதத்தில் உலகளாவிய சந்தையில் அறிமுகப்படுத்திய 2021மை ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் மாடல் இந்திய சாலையில் முதன்முறையாக சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டிருந்த போது கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து ரஷ்லேன் செய்தி தளம் வெளியிட்டுள்ள ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் முதன்முறையாக சோதனை ஓட்டம்...

2021ஆம் ஆண்டிற்காக ஜீப் காம்பஸ் மாடலில் ப்ரீ-ஃபேஸ்லிஃப்ட் வெர்சனை காட்டிலும் பெரிய அளவில் எந்த அப்டேட்டும் கொண்டுவரப்படவில்லை. இதனால் மொத்த தோற்ற அடிப்படையில் பார்க்கும்போது தற்போதைய தலைமுறை காரை காட்டிலும் இந்த 2021 மாடல் மிகவும் நுட்பமான மாற்றங்களையே ஏற்றுள்ளது.

2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் முதன்முறையாக சோதனை ஓட்டம்...

இதில் திருத்தியமைக்கப்பட்ட மெஷ் பேட்டர்ன் உடன் 7-ஸ்லாட்களில் க்ரில் அமைப்பு, கிட்டத்தட்ட அதே டிசைனில் எல்இடி ஃபாக் விளக்குகள், புதிய சக்கர தேர்வுகள், கூடுதலான நிறத்தேர்வுகள், ட்யூல்-டிப் எக்ஸாஸ்ட் உள்ளிட்டவை அடங்குகின்றன.

2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் முதன்முறையாக சோதனை ஓட்டம்...

உட்புறத்தில் நவீன யுகனெக்டட் 5.0 மென்பொருள் வசதியுடன் 8.4 இன்ச் தொடுத்திரை பொருத்தப்பட்டுள்ளது. இந்த திரையின் மூலமாக ஆப்பிள் கார்ப்ளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் அமேசான் அலெக்ஸா போன்றவற்றை இணைக்க முடியும்.

2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் முதன்முறையாக சோதனை ஓட்டம்...

ஸ்மார்ட்போன் உடன் காரை இணைக்கும் யுகனெக்டட் ஸ்மார்ட்போன் செயலி மூலமாக வாடிக்கையாளர்கள், ரிமோட் என்ஜின்-ஸ்டார்ட் மற்றும் ப்ரீ-அட்ஜெஸ்டிங் க்ளைமேட் கண்ட்ரோல் உள்ளிட்ட வசதிகளை அனுபவிக்க முடியும்.

2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் முதன்முறையாக சோதனை ஓட்டம்...

தற்போது வெளியாகியுள்ள ஸ்பை படங்களில் கார் முழுவதும் மறைக்கப்பட்டு நிலையில் தற்காலிகமான 5-ஸ்போக் அலாய் சக்கரங்களுடன் சில காஸ்மெட்டிக் மாற்றங்களை ஏற்றுள்ளது. ஆனால் அவை என்னென்ன என்பதை இந்த படங்களின் மூலமாக கொஞ்சம் கூட அறிய முடியவில்லை.

2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் முதன்முறையாக சோதனை ஓட்டம்...

இதுவே இந்த 2021 காரில் எந்தளவிற்கு நுட்பமாக அப்கிரேட் பணிகள் கொண்டுவரப்பட்டுள்ளது என்பதற்கான சாட்சி. சர்வதேச சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் ஜீப் காம்பஸ் மாடலில் புதிய 1.3 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டு வருகிறது.

2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் முதன்முறையாக சோதனை ஓட்டம்...

இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் 128 பிஎச்பி/270 என்எம் டார்க் திறனையும், 9-ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் உடன் 148 பிஎச்பி/270 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. 2021 காம்பஸ் மாடலின் இந்திய வெர்சனில் ஜீப் நிறுவனம் ஏற்கனவே அப்டேட் செய்துள்ள பழைய 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜினை அப்படியே வழங்கும் என தெரிகிறது.

2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் முதன்முறையாக சோதனை ஓட்டம்...

பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாக உள்ள இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 161 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் காருக்கு வழங்குகிறது. இதேபோல் பெட்ரோல் வேரியண்ட்களில் முன்-சக்கர ட்ரைவ் சிஸ்டமும், டாப் டீசல் வேரியண்ட்களில் ஆல்-வீல் ட்ரைவ் சிஸ்டமும் வழங்கப்படவுள்ளது.

2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் முதன்முறையாக சோதனை ஓட்டம்...

தற்போதைய காம்பஸ் மாடலில் பிஎஸ்6 தரத்தில் உள்ள 2.0 லிட்டர் டீசல் என்ஜின் 170 பிஎச்பி மற்றும் 350 என்எம் டார்க் திறனை வழங்கும் ஆற்றல் கொண்டதாக உள்ளது. வேறுப்பட்ட ட்யூனில் இதே டீசல் என்ஜின் அமைப்பு தான் டாடா ஹெரியர் மற்றும் எம்ஜி ஹெக்டர் மாடல்களிலும் வழங்கப்பட்டு வருகிறது.

2021 ஜீப் காம்பஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் முதன்முறையாக சோதனை ஓட்டம்...

மேலும் இவை தான் ஜீப் காம்பஸ் எஸ்யூவி மாடலுக்கு முக்கியமான போட்டி மாடல்களாக விளங்குகின்றன. ஜீப் இந்தியா நிறுவனம் அப்டேட் செய்யப்பட்ட காம்பஸ் எஸ்யூவி மாடலை வரும் நவம்பர் மாதத்தில் சந்தைக்கு கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 24, 2020, 21:30 [IST]
English summary
2021 Jeep Compass facelift spied in India ahead of launch
மேலும்... #ஜீப் #jeep
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+