ஜீப் எஸ்யூவிகளுக்கு சிறப்பு கடன் திட்டங்கள் அறிமுகம்

கொரோனா பிரச்னையால் ஆட்டோமொபைல் துறை பெரும் கஷ்ட காலத்தில் உள்ளது. கடந்த இரு மாதங்களாக வருவாய் அடியோடு பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது அதிலிருந்து மீண்டு வருவதற்கான வழிகளை கையில் எடுத்து வருகின்றன.

ஜீப் எஸ்யூவிகளுக்கு சிறப்பு கார் கடன் திட்டங்கள் அறிமுகம்

அதன்படி, பொருளாதார நெருக்கடியில் சிக்கி இருக்கும் வாடிக்கையாளர்கள் அல்லது வேலை இழப்பு, சம்பள குறைப்பு பிரச்னையில் சிக்கி இருக்கும் வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் சிறப்பு கார் கடன் திட்டங்களை அறிமுகம் செய்து வருகின்றன. இந்த வரிசையில் ஜீப் கார் நிறுவனமும் இணைந்துள்ளது.

MOST READ: பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

ஜீப் எஸ்யூவிகளுக்கு சிறப்பு கார் கடன் திட்டங்கள் அறிமுகம்

அனைவருக்கும் ஜீப் என்ற அடைமொழியுடன் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் இந்த திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்கள் தங்களது தற்போதைய பொருளாதார சூழலை பொறுத்து கார் கடனை தேர்வு செய்து கொள்ள முடியும்.

ஜீப் எஸ்யூவிகளுக்கு சிறப்பு கார் கடன் திட்டங்கள் அறிமுகம்

மாதச் சம்பளதாரர்கள் அதிகபட்சமாக 7 ஆண்டுகளில் கடனை மாதத் தவணைகளில் திருப்பிச் செலுத்தும் கால அளவுடன் சிறப்பு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல் மூன்று மாதங்களுக்கு குறைவான மாதத் தவணையை செலத்தும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது. அதன்பிறகு, ஆண்டுதோறும் மாதத் தவணை குறிப்பிட்ட சதவீதம் அதிகரித்துக் கொண்டே செல்லும்.

MOST READ: புதிய ஸ்கோடா ரேபிட் விற்பனைக்கு அறிமுகம்... நம்ப முடியாத விலை... மிரண்டு நிற்கும் போட்டியாளர்கள்

ஜீப் எஸ்யூவிகளுக்கு சிறப்பு கார் கடன் திட்டங்கள் அறிமுகம்

பாரத ஸ்டேட் வங்கி மற்றும் பேங்க் ஆஃப் பரோடோ வங்கி மூலமாக கடன் வசதியை பெறும் தனது வாடிக்கையாளர்களுக்கு குறைவான வட்டி வீதத்தில் பெறும் வாய்ப்பு உள்ளதாகவும் ஜீப் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆன்ரோடு விலையில் 90 சதவீதம் வரை கடனாக பெறும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.

ஜீப் எஸ்யூவிகளுக்கு சிறப்பு கார் கடன் திட்டங்கள் அறிமுகம்

ஸ்டெப் அப் கடன் வசதி திட்டம் மூலமாக அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை மாத் தவணைகளை திருப்பிச் செலுத்தலாம். அதேபோன்று, முதல் 24 மாதங்களுக்கு குறைவான மாதத் தவணையை கட்டும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.

MOST READ:8 கோடி ரூபாய் ரோல்ஸ் ராய்ஸ் கோஸ்ட்... நம்ப முடியாத குறைந்த விலையில் வாங்கிய தொழிலதிபர்

ஜீப் எஸ்யூவிகளுக்கு சிறப்பு கார் கடன் திட்டங்கள் அறிமுகம்

அடுத்து பெண் வாடிக்கையாளர்களுக்கு அதிகபட்சமாக 7 ஆண்டுகளில் மாதத் தவணையை திருப்பிச் செலுத்தும் வாய்ப்பு வழங்கப்படுவதுடன், ஆன்ரோடு விலையில் 100 சதவீதம் கடன் பெறும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.

ஜீப் எஸ்யூவிகளுக்கு சிறப்பு கார் கடன் திட்டங்கள் அறிமுகம்

இந்த சிறப்பு கார் கடன் திட்டங்கள் வாடிக்கையாளர்களுக்கு தற்காலிகமாக தீர்வுடன் கூடிய சீக்கிரமே ஜீப் எஸ்யூவியை வாங்கும் வாய்ப்பை பெற முடியும் என்று கருதப்படுகிறது. கூடுதல் விபரங்களுக்கு அருகாமையிலுள்ள ஜீப் கார் ஷோரூமை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Most Read Articles

மேலும்... #ஜீப் #jeep
English summary
FCA India has announced special car loan schemes for Jeep SUV buyers to more accessible than ever before.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X