மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவிற்கு போட்டியாக வருகிறது ஜீப்பின் புதிய காம்பெக்ட் எஸ்யூவி...

சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்துவதற்காக புதிய எண்ட்ரீ-லெவல் ஜீப் காம்பெக்ட் எஸ்யூவி காரின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருவதாக ஃபியாட் க்ரேஸ்லெர் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. இதனால் விரைவில் ஜீப் நிறுவனத்தில் இருந்து புதிய காம்பெக்ட் எஸ்யூவி மாடலின் அறிமுகத்தை இந்திய சந்தையில் எதிர்பார்க்கலாம்.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவிற்கு போட்டியாக வருகிறது ஜீப்பின் புதிய காம்பெக்ட் எஸ்யூவி...

இதுகுறித்து வெளிவந்துள்ள தகவலின்படி, இந்த எண்ட்ரீ-லெவல் சப்-4 மீட்டர் எஸ்யூவி மாடலானது, ஜீப்பின் வெளிநாட்டு கார்கள் லைன்-அப்பில் ரெனிகேட் ஆஃப்-ரோடு எஸ்யூவி காருக்கு கீழே நிலைநிறுத்தப்படவுள்ளது. அதிநவீன தொழிற்நுட்பங்களால் நிரம்பி வழியவுள்ள ஜீப் காம்பேக்ட் எஸ்யூவி காரில் ஆஃப் ரோடு திறன் வழங்கப்பட்டுள்ளது என்பதை வெளிப்படுத்தும் விதமாக தயாரிப்பு நிறுவனத்தின் ட்ரைல் ரேட்டட் முத்திரை பொருத்தப்படவுள்ளது.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவிற்கு போட்டியாக வருகிறது ஜீப்பின் புதிய காம்பெக்ட் எஸ்யூவி...

மற்ற தொழிற்நுட்ப வசதிகளாக, குறைந்த விகித கியர்பாக்ஸ் உடன் உள்ள 4 வீல் ட்ரைவ் சிஸ்டம் மற்றும் கரடுமுரடான பாதைகளில் பயண செய்வதற்கு தேவையான அனைத்து சக்கரங்களையும் ஒரே நேரத்தில் லாக் செய்யும் வசதி உள்ளிட்டவை இந்த எஸ்யூவி காரில் எதிர்பார்க்கப்படுகிறது.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவிற்கு போட்டியாக வருகிறது ஜீப்பின் புதிய காம்பெக்ட் எஸ்யூவி...

இந்த 4-மீட்டர் எஸ்யூவி கார் குறித்து ஜீப் நிறுவனத்தின் ஐரோப்பிய கண்டத்திற்கான ப்ராண்ட் மார்க்கெட்டிங்கின் முதன்மை அதிகாரி மார்கோ பிகோஸி முன்னதாக கூறுகையில், விரைவில் சந்தைக்கு வரவுள்ள இந்த காம்பெக்ட் எஸ்யூவி கார் ஜீப் நிறுவனத்தின் ஆஃப்-ரோடு டிஎன்ஏ-வை பெறவுள்ளது மட்டுமில்லாமல் அன்றாட செயல்பாட்டிற்கு பயன்படுத்தும் விதத்திலும் இருக்கும் என்றார்.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவிற்கு போட்டியாக வருகிறது ஜீப்பின் புதிய காம்பெக்ட் எஸ்யூவி...

பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு விதமாக என்ஜின் தேர்வுகளுடன் சந்தைப்படுத்தப்படவுள்ள இந்த எஸ்யூவி கார் அறிமுகத்திற்கு சில மாதங்கள் கழித்து, முழுவதும் எலக்ட்ரிக் மாடலாக அல்லது ப்ளக்-இன் ஹைப்ரீட் எலக்ட்ரிக் வெர்சனாக கொண்டுவரப்படவுள்ளது.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவிற்கு போட்டியாக வருகிறது ஜீப்பின் புதிய காம்பெக்ட் எஸ்யூவி...

இந்திய சந்தையில் தற்சமயம் உள்ள எந்தவொரு காம்பெக்ட் எஸ்யூவி மாடலும் ஆல்-வீல் ட்ரைவ் என அழைக்கப்படும் 4-வீல் ட்ரைவ் சிஸ்டத்தை பெற்றிருக்கவில்லை. இதனால் ஜீப் நிறுவனத்தின் இந்த புதிய காம்பெக்ட் எஸ்யூவி மாடல் இந்தியாவில் அறிமுகமான பிறகு பெரும்பான்மையான ஆஃப்-ரோடு பிரியர்களின் முதன்மையான தேர்வாக விளங்கும்.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவிற்கு போட்டியாக வருகிறது ஜீப்பின் புதிய காம்பெக்ட் எஸ்யூவி...

மாருதி சுசுகி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ, டாடா நெக்ஸான் மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் உள்ளிட்ட பிரபலமான மாடல்களுடன் அறிமுகத்திற்கு பிறகு போட்டியிடவுள்ள இந்த புதிய ஜீப் 4-மீட்டர் எஸ்யூவி காரானது விரைவில் மாருதி சுசுகி நிறுவனத்தில் இருந்து அறிமுகமாகவுள்ள ஜிம்னி மாடலுக்கும் போட்டியாக விளங்கவுள்ளது. இருப்பினும் மாருதி ஜிம்னியின் விலை ஜீப்பின் இந்த எஸ்யூவி மாடலை விட சற்று குறைவாகவே இருக்கும்.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவிற்கு போட்டியாக வருகிறது ஜீப்பின் புதிய காம்பெக்ட் எஸ்யூவி...

இந்திய சந்தையில் காம்பெக்ட் எஸ்யூவி ரக கார்களுக்கான தேவை அதிகரித்து கொண்டே வருகிறது. ஏனெனில் எஸ்யூவி கார்கள் ஹேட்ச்பேக் மாடல்களை விட மிகவும் சவுகரியமானதாக தோற்றமளிக்கின்றன. இவ்வாறான பிரிவில் புதிய காம்பெக்ட் எஸ்யூவி மாடலை களமிறக்குவதால் ஜீப் நிறுவனம் தனது முழு திறமையை இதன் தயாரிப்பில் காட்டும்.

மாருதி விட்டாரா பிரெஸ்ஸாவிற்கு போட்டியாக வருகிறது ஜீப்பின் புதிய காம்பெக்ட் எஸ்யூவி...

ஜீப் நிறுவனம் ஏற்கனவே இந்திய சந்தையில் எஸ்யூவி பிரிவில் காம்பஸ் மாடலின் மூலம் போட்டியிட்டு வருகிறது. ஜீப் காம்பஸின் ஆரம்ப விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.16.49 லட்சமாகவும், டாப்-எண்ட் ட்ரைல்ஹாவ்க் ட்ரிம் ரூ.27.6 லட்சத்திலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, March 30, 2020, 16:31 [IST]
English summary
Jeep To Introduce A Compact SUV In Indian Market: Will Rival Hyundai Venue
மேலும்... #ஜீப் #jeep
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+