விரைவில் கார்களுக்கு இணையான வசதியை பெறும் அரசு பேருந்துகள்..! என்ன வசதி தெரிஞ்சா அசந்துருவீங்க!

உயர் ரக கார்களில் மட்டுமே காணப்படக் கூடிய அதி நவீன தொழில்நுட்பத்தை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய பேருந்துகளில் பொருத்த இருப்பதாக கர்நாடகா மாநிலத்தின் துணை முதலமைச்சர் அறிவித்துள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

கார்களுக்கு இணையான அம்சத்தை பெறும் கர்நாடகா அரசு பேருந்துகள்... என்ன வசதினு தெரிஞ்சா அசந்துருவீங்க!

விபத்து, யாருமே விரும்பாத ஒன்று. இருப்பினும் அழையா விருந்தாலியாக சிலருடைய வாழ்க்கையில் இது விளையாடிவிட்டு சென்று விடுகின்றது. இதனால் ஏற்படும் இழப்புகளும், கசப்பான அனுபவங்களும் குறிப்பிட்ட அந்த நபரின் வாழ்க்கையில் அழிக்க முடியாத வடுவை ஏற்படுத்துகின்றது. இது, விபத்தைச் சந்திப்பவருக்கு மட்டுமின்றி போக்குவரத்துத்துறைக்கும் மிகப் பெரிய தலைவலியாக அமைந்துவிடுகின்றது.

கார்களுக்கு இணையான அம்சத்தை பெறும் கர்நாடகா அரசு பேருந்துகள்... என்ன வசதினு தெரிஞ்சா அசந்துருவீங்க!

எனவேதான், அத்துறைச் சார்ந்தோர் விபத்தைக் குறைக்கும் நோக்கில் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். இருப்பினும், விபத்தின் எண்ணிக்கைக் குறையாமல் மிக தீவிரமாக அதிகரித்துக் கொண்ட வருகின்றது. இந்நிலையில், கர்நாடகா அரசு மக்களை விபத்தில் இருந்து காப்பாற்றும் விதமாகவும், விபத்துகளை முழுமையாகக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் தனித்துவமான முயற்சியை மேற்கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கார்களுக்கு இணையான அம்சத்தை பெறும் கர்நாடகா அரசு பேருந்துகள்... என்ன வசதினு தெரிஞ்சா அசந்துருவீங்க!

மாநில அரசின்கீழ் இயங்கும் அனைத்து பேருந்துகளிலும் விபத்தைக் குறைக்கும் விதமாக உயர் தொழில்நுட்பம் அடங்கிய செக்யூரிட்டி கருவிகளைப் பொருத்த இருப்பதாக கர்நாடகா அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்த தகவலை அம்மாநிலம் கடந்த புதன் அன்று வெளியிட்டதாக ஆங்கில செய்தி தளம் நியூஸ்18 தகவல் வெளியிட்டுள்ளது.

கார்களுக்கு இணையான அம்சத்தை பெறும் கர்நாடகா அரசு பேருந்துகள்... என்ன வசதினு தெரிஞ்சா அசந்துருவீங்க!

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நீடித்து வந்த பொதுமுடக்கம் அண்மைக் காலங்களாக தளர்த்தப்பட்டு வருகின்றது. இதைத்தொடர்ந்து, பொதுப் போக்குவரத்துத்துறை மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளது. இதனால், வழக்கம்போல் போக்குவரத்து நெரிசல் ஏற்பட ஆரம்பித்துள்ளது. இதேபோன்று, விபத்துகளின் எண்ணிக்கையும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

கார்களுக்கு இணையான அம்சத்தை பெறும் கர்நாடகா அரசு பேருந்துகள்... என்ன வசதினு தெரிஞ்சா அசந்துருவீங்க!

பூட்டுதல் காலத்தில் மிகவும் குறைவாக காணப்பட்ட விபத்துகளின் எண்ணிக்கை தற்போது அதிகரிக்க ஆரம்பித்திருக்கின்றது. எனவேதான் குறிப்பிட்ட சில மாநிலங்கள் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட ஆரம்பித்துள்ளன. அந்தவகையில், கேரளா மாநில மோட்டார்வாகனத்துறை விதிமீறல்களைக் களையெடுக்க வேண்டும் என்பதற்காக தீவிர கண்கானிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கார்களுக்கு இணையான அம்சத்தை பெறும் கர்நாடகா அரசு பேருந்துகள்... என்ன வசதினு தெரிஞ்சா அசந்துருவீங்க!

இந்த நிலையிலேயே அதிகரித்து வரும் விபத்துகளைக் குறைக்கும் நோக்கில் கர்நாடகா மாநிலம், அதன் போக்குவரத்து பேருந்துகளில் அதிக தொழில்நுட்பங்கள் அடங்கிய சிறப்பு செக்யூரிட்டி கருவிகளைப் பொருத்தும் நடவடிக்கையில் இறங்கியிருக்கின்றது. இந்த தகவலை அம்மாநிலத்தின் துணை முதல்வரும், போக்குவரத்துத்துறையைக் கண்கானித்து வரும் லக்ஷ்மன் ஸ்வாடி உறுதிச் செய்துள்ளார்.

கார்களுக்கு இணையான அம்சத்தை பெறும் கர்நாடகா அரசு பேருந்துகள்... என்ன வசதினு தெரிஞ்சா அசந்துருவீங்க!

அதிக சென்சார்களைக் கொண்டிருக்கும் இந்த புதிய பாதுகாப்பு கருவி, பீப் ஒலி மற்றும் சிவப்பு மின் விளக்குகள் மூலம் எச்சரிக்கையை வழங்கும் லக்ஷமன் கூறினார். மேலும், ஒரு வேலை ஓட்டுநர் உறங்கிவிட்டாலோ அல்லது ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருப்பதை உணர்ந்தாலும்கூட அந்த கருவி எச்சரிக்கை ஒலியை வழங்குமாம். எச்சரிக்கையை மட்டுமின்றி வாகனத்தின் வேகத்தைக் குறைத்து, அவசரகால பிரேக்கையும் அக்கருவியே தானே ஆக்டிவேட் செய்துவிடும்.

கார்களுக்கு இணையான அம்சத்தை பெறும் கர்நாடகா அரசு பேருந்துகள்... என்ன வசதினு தெரிஞ்சா அசந்துருவீங்க!

குறிப்பிட்டு கூற வேண்டுமானால் உயர் ரக தானியங்கி கார்களைப் போன்று இக்கருவி பொருத்தப்படும் பேருந்துகள் செயல்படும். ஆகையால், விரைவில் கர்நாடகா அரசின்கீழ் இயங்கும் அனைத்து பேருந்துகளும் அதிக பாதுகாப்பு நிறைந்த பேருந்துகளாக மாற இருக்கின்றன.

கார்களுக்கு இணையான அம்சத்தை பெறும் கர்நாடகா அரசு பேருந்துகள்... என்ன வசதினு தெரிஞ்சா அசந்துருவீங்க!

தற்போது, கர்நாடகா அரசிற்கு பல்வேறு வழித்தடங்களில் ஏற்படும் விபத்துக்களின் காரணமாக ரூ. 100 கோடிக்கும் அதிகமான செலவு ஏற்படுகின்றது. இதனைக் கணிசமாக குறைக்க புதிய தொழில்நுட்ப கருவிகள் உதவும் என நம்பப்படுகின்றது. பெரும்பாலான விபத்துக்களுக்கு ஓட்டுநர்கள் தூக்க கலக்கத்துடன் பேருந்தை இயக்குவதே காரணம் என எழும்பிய தகவலின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கையைக் கர்நாடகா அரசு எடுத்துள்ளது.

கார்களுக்கு இணையான அம்சத்தை பெறும் கர்நாடகா அரசு பேருந்துகள்... என்ன வசதினு தெரிஞ்சா அசந்துருவீங்க!

"பொதுவாக விபத்து என்பது கர்நாடகாவில் மட்டுமே நிலவக்கூடிய ஓர் பிரச்சினை அல்ல. இது உலகளாவிய தலை வலியை ஏற்படுத்தக்கூடிய நிகழ்வாகும். அதனால்தான் பல தொழில்நுட்ப நிறுவனங்கள் சிறப்பு சென்சார் அடிப்படையிலான சாதனங்களைக் கொண்டு வந்திருக்கின்றன. இது போன்ற சாதனங்களை பயன்படுத்துவதன் மூலம், அரசு நடத்தும் நிறுவனங்கள் கூடுதல் செலவுகளை மிச்சப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் ஊழியர்கள் மற்றும் பயணிகளுக்கும் பாதுகாப்பான பயணத்தை வழங்க முடியும்" என கர்நாடகா துணை முதல்வர் விளக்கினார்.

கார்களுக்கு இணையான அம்சத்தை பெறும் கர்நாடகா அரசு பேருந்துகள்... என்ன வசதினு தெரிஞ்சா அசந்துருவீங்க!

கர்நாடகா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகங்கள், வடகிழக்கு கர்நாடக சாலை போக்குவரத்துக் கழகம் மற்றும் வடமேற்கு கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் வாயிலாக மாநிலத்தின் அனைத்து பகுதிகளையும் இணைத்து வருகின்றது. பெங்களூரு பெருநகரத்திற்காக பெங்களூரு போக்குவரத்துக் கழகம் உள்ளூர் பேருந்துகளை இயக்கி வருகின்றது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Karnataka State Govt To Install High Tech Security Equipment In Bus For Reduce Accidents. Read In Tamil.
Story first published: Friday, October 9, 2020, 15:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X