கொரோனா வைரஸ் பரவல் என்ற பேச்சுக்கே இடமில்லை... மீண்டும் மீண்டும் ரோல் மாடலாக மாறும் கேரளா..!
கொரோனா வைரஸ் பரவலுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக புதுவிதமான நடவடிக்கை கால் டாக்சிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

மனித உயிர்கள் பலவற்றை உயிர்கொல்லி கொரோனா வைரஸ் பறித்து வந்தாலும், அதனால் உலகில் உருவாகியிருக்கும் நன்மைகள் ஏராளம். இது நாம் மறுக்க முடியாத உண்மை ஆகும். ஆம், உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் இயற்கை புத்துயிர் பெற்றிருக்கின்றது. குறிப்பாக மாசுபடுதலில் இருந்து தற்காலிக விடுதலையை சுற்றப்புறச் சூழலக்கு அது பெற்றுக் கொடுத்துள்ளது.

இதனால், முன்பெப்போதும் இல்லாத அளவில் காற்று மாசுபாடு குறைந்துள்ளது. அதுமட்டுமின்றி, மக்கள் நடமாட்டம் இல்லாத காரணத்தால் நீர் நிலைகளும் தூய்மையுடன் காணப்படுகின்றது. என்னதான் இதுபோன்று கொரோனா வைரஸ் உலகிற்கு நன்மையை ஏற்படுத்தி வந்தாலும், அது மனித குலத்திற்கு பேராபத்தை விளைவிக்கின்ற வகையில் முன்பைக் காட்டிலும் அதி தீவிரமாக பரவி வருகின்றது.

இந்த அதி தீவிர பரவலுக்கு கொரோனா வைரசை மட்டுமே காரணமாக கூறிவிட முடியாது. ஏனென்றால் அது பரவுவதற்கு மனிதர்களாகிய நாமும்தான் ஓரு வகையில் காரணமாக இருக்கின்றோம். அரசு எம்மாதிரியான உதவியை நமக்கு செய்ததோ, ஆனால் வைரசால் மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக ஊரடங்கு உத்தரவை அமலுக்குக் கொண்டு வந்தது.

ஆனால், நாமோ வைரஸ் மீது துளியளவும் அச்சமின்றி வழக்கம்போல் நடமாடினோம். இதன் விளைவாக தற்போது கொரோனா வைரஸ், பரவலில் புதிய உச்சத்தை எட்டியிருக்கின்றது.
எனவே, தூக்கத்தில் இருந்து விழித்ததைப் போன்று தற்போது இந்த பரவலுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக மக்கள் ஒரு சிலர் செயலாற்றத் தொடங்கியிருக்கின்றனர். ஆனால், கொரோனா வைரசோ விடாப்பிடியாக பரவல் விகிதத்தை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

இருப்பினும், இதனை தடுக்கும் முயற்சியில் இருந்து அரசும், மக்களும், பொது நிறுவனங்களும் பின் வாங்கவில்லை. அந்தவகையில், நாட்டின் அனைத்து மாநிலங்களுக்கும் முன்னோடியாக திகழும் வகையில் கொரோனா தடுப்பில் புதிய யுக்தியைக் கையாளத் தொடங்கியிருக்கின்றனர், கேரளாவின் வாடைக வாகன ஓட்டுநர்கள்.

ஆம், கேரள வாடகை வாகன ஓட்டுநர்கள் தங்களையும், தங்களின் பயணிகளையும் வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்கும் விதமாக காரை பகுதியாக பிரிக்கும் கண்ணாடிகளைப் பொருத்தியிருக்கின்றனர். இது, காரை இரு பகுதியாக பிரிப்பது மட்டுமின்றி தனியறை அமைப்பையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும். இதுகுறித்த வீடியோ மற்றும் தகவலை மலையாள செய்தி ஊடகமான ஏசியாநெட் நியூஸ் வெளியிட்டுள்ளது.

கேரளாவில் இதுபோன்று முன்னுதாரணமான சம்பவங்கள் நடைபெறுவது முதல் முறையல்ல. சமீபத்தில் கூட சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக அம்மாநில அரசு, மக்களை மாஸ்க் மற்றும் சானிட்டைசர்கள் போன்று குடைகளையும் பயன்படுத்து வேண்டும் அறிவுறுத்தியிருந்தது.

அதாவது, ஓர் நபர் குடையைப் பயன்படுத்தும்போது கட்டாயம் மற்றொரு நபரிடம் இருந்தது குறைந்தது 3 அடி தள்ளி நிற்க வேண்டிய சூழல் ஏற்படும். இது, ஒருவரிடம் மற்றொருவருக்கு கொரோனா வைரஸ் பரவுவதைத் தவிர்க்க உதவும்.

கேரள அரசின் இந்த கூற்றுக்கு மரியாதைச் செய்யும் விதமாக மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவங்களில் ஒன்றான மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, கேரளாவில் இலவசமாக குடை வழங்கும் வீடியோ ஒன்றை பதிவிட்டு, அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்.
அவரின் இந்த ட்வீட்டிலேயே, தற்போது டாக்சிகளில் உருவாக்கப்பட்டிருக்கும் சமூக இடைவெளி கண்ணாடிகுறித்த வீடியோவை டுவிட்டர் பயனர் ஒருவர் பகிர்ந்துள்ளார்.
அதில், பயணி மற்றும் டிரைவருக்கு இடையே ஃபைபர் கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருப்பது மிகத் தெளிவாக தெரிகின்றது.


Click it and Unblock the Notifications








