ஓவரா ஆட்டம் போட்ட தொழிலதிபர்! 8 லாரிகள் உட்பட பென்ஸ் காரையும் தூக்கிய போலீஸ்... சிரிப்ப அடக்க முடியல

இணையத்தில் வைரலாகிய வீடியோவால் தொழிலதிபர் ஒருவர் சிக்கலில் சிக்கியிருக்கின்றார். இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

ஓவரா ஆட்டம் போட்ட தொழிலதிபர்! 8 லாரிகள் உட்பட பென்ஸ் காரையும் தூக்கிய போலீஸ்... வீடியோவை பார்த்து சிரிக்கும் மக்கள்!

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் பொதுமுடக்கும் தற்போதும் நீடித்த வண்ணமே இருக்கின்றது. லேசான தளர்வுகளுடன் நடைமுறையில் இருக்கும் இந்த பொதுமுடக்க காலத்தில் மக்கள் அத்தியாவசிய தேவை மற்றும் முக்கிய பணிகளுக்காக மட்டுமே வெளியில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இருப்பினும், ஒரு சிலர் அரசின் உத்தரவை மீறி ஜாலி பயணம் மற்றும் கேலிக்கைகளை நிகழ்த்தி வருகின்றனர்.

ஓவரா ஆட்டம் போட்ட தொழிலதிபர்! 8 லாரிகள் உட்பட பென்ஸ் காரையும் தூக்கிய போலீஸ்... வீடியோவை பார்த்து சிரிக்கும் மக்கள்!

அந்தவகையில், பொதுமுடக்கத்தை மீறியதற்காகவே கேரள மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ராய் குரியன் காவல்துறையிடம் சிக்கியிருக்கின்றார். இவர், அண்மையில் தனது நண்பர்களுடன் மது விருந்து நடத்தி சமூக இடைவெளி விதியை மீறியதற்காக போலீஸாரிடம் சிக்கினார். இந்த நிலையில் தற்போது மீண்டும் ராய் குரியன் போலீஸாரிடம் சிக்கியிருக்கின்றார். இம்முறை பொது முடக்கம் விதியை மீறியதற்காக செய்திகளில் இடம் பெற்றிருக்கின்றார்.

ஓவரா ஆட்டம் போட்ட தொழிலதிபர்! 8 லாரிகள் உட்பட பென்ஸ் காரையும் தூக்கிய போலீஸ்... வீடியோவை பார்த்து சிரிக்கும் மக்கள்!

கேரள மாநிலம், இடுக்கியை மையமாகக் கொண்டே ராய் குரியன் தனது தொழிலை புரிந்து வருகின்றார். இவர் மார்பல் மற்றும் டைல் கற்கள் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றார். உள் மாநிலம் மட்டுமின்றி சில வெளி மாநிலங்களுக்கும் அவற்றை விற்பனைச் செய்து வருகின்றனர். இதன் பயன்பாட்டிற்காக புதிதாக எட்டு பாரத் பென்ஸ் டிரக்குகளை அண்மையில் ஆர்டர் செய்திருந்தார்.

ஓவரா ஆட்டம் போட்ட தொழிலதிபர்! 8 லாரிகள் உட்பட பென்ஸ் காரையும் தூக்கிய போலீஸ்... வீடியோவை பார்த்து சிரிக்கும் மக்கள்!

இந்த நிலையில் நேற்றைய (ஜீலை 28) தினம் ராய் குரியன் முன் பதிவு செய்திருந்த எட்டு பாரத் பென்ஸ் டிரக்குகளும் அவர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனைக் கைகளில் பெற்ற ராய் குரியன், மக்களுக்கு காட்டும் விதமாக டிரக்குகளின் அணிவகுப்பை நிகழ்த்தினார். அப்போது, அவரது பென்ஸ் ஜிஎல்இ காரின் மேற்கூரையில் அமர்ந்தவாறு அவர் பயணித்தார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளத்தில் மிக வேகமாக வைரலாகியது.

ஓவரா ஆட்டம் போட்ட தொழிலதிபர்! 8 லாரிகள் உட்பட பென்ஸ் காரையும் தூக்கிய போலீஸ்... வீடியோவை பார்த்து சிரிக்கும் மக்கள்!

இதனாலயே ராய் குரியன் தற்போது சட்டத்தின்பிடியில் சிக்கியிருக்கின்றார். வைரலாகிய வீடியோ சமூக ஊடகத்தின் வாயிலாக பத்திரிக்கை மற்றும் போலீஸார்களின் கண்களிலும் சிக்கியது. இதனடிப்படையிலேயே தொழிலதிபர் ராய் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், எந்த மாதிரியான பிரிவுகளின்கீழ் போலீஸார் ராய் மீது வழக்கினை பதிய இருக்கின்றனர் என்பது பற்றிய தகவல் வெளியாகவில்லை.

ஓவரா ஆட்டம் போட்ட தொழிலதிபர்! 8 லாரிகள் உட்பட பென்ஸ் காரையும் தூக்கிய போலீஸ்... வீடியோவை பார்த்து சிரிக்கும் மக்கள்!

ராய் குரியன் இதற்கு முன்பாகவும் இந்தியாவின் ஒட்டுமொத்த ஊடகத்திலும் இடம்பெற்றிருந்தார். கடந்த மே மாதம் வாங்கப்பட்ட விலையுயர்ந்த பென்ஸ் ஜிஎல்இ சொகுசு காரை பதிவு செய்ய முடியாத காரணத்தால் அவர் நாடு முழுவதும் பரவலாக அறியப்பட்டார்.

ஓவரா ஆட்டம் போட்ட தொழிலதிபர்! 8 லாரிகள் உட்பட பென்ஸ் காரையும் தூக்கிய போலீஸ்... வீடியோவை பார்த்து சிரிக்கும் மக்கள்!

இந்த புதிய சொகுசு கார் பிஎஸ்-4 தரத்திலானது ஆகும். பிஎஸ்4 வாகனங்கள் மீதான தடை கடந்த ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து மாடு முழுவதும் நடைமுறைக்கு வந்தது குறிப்பிடத்தகுந்து. இதன் காரணத்தினாலேயே கேரள மாநிலம் ஆர்டிஓ பிஎஸ்4 பென்ஸ் காரின் பதிவு விண்ணப்பத்தை நிராகரித்தனர்.

ஓவரா ஆட்டம் போட்ட தொழிலதிபர்! 8 லாரிகள் உட்பட பென்ஸ் காரையும் தூக்கிய போலீஸ்... வீடியோவை பார்த்து சிரிக்கும் மக்கள்!

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் சொகுசு கார்களில் ஜிஎல்இ மாடலும் ஒன்று. இந்த கார் இந்தியாவில் ரூ. 73.70 லட்சத்தில் இருந்து ரூ. 1.25 கோடி வரையிலான விலையில் விற்கப்பட்டு வருகின்றது. இந்த விலையுயர்ந்த காரைதான் ராய் பதிவு செய்ய முடியாமல் தற்போதும் தவித்து வருகின்றார். மேலும், இந்த கார் தற்போதும் மஞ்சள் நிற தற்காலிக பதிவெண்ணைக் கொண்டே இயங்கிக் கொண்டிருக்கின்றது.

ஓவரா ஆட்டம் போட்ட தொழிலதிபர்! 8 லாரிகள் உட்பட பென்ஸ் காரையும் தூக்கிய போலீஸ்... வீடியோவை பார்த்து சிரிக்கும் மக்கள்!

இந்த சம்பவத்திற்காகவே ராய் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஊடகத்தின் வாயிலாக அறியப்பட்டார். தற்போது மீண்டும் செய்திகளில் பேசப்படக் கூடிய நபராக அவர் மாறியிருக்கின்றார். ஆனால், இம்முறை பொது முடக்கத்தை மீறியதற்காக அவர் தோன்றியிருக்கின்றார். சர்ச்சைக்குரிய செயலை அவர் பூதாத்தன் கெட்டு அணைக்கு அருகில் மேற்கொண்டதாகக் கூறப்படுகின்றது. அப்போது அவ்வழியாக பயணித்த பெரும்பாலானோர் ராய் குரியனின் முரண்பாடான செயலை செல்போனில் படம் பிடித்திருக்கின்றனர்.

ஓவரா ஆட்டம் போட்ட தொழிலதிபர்! 8 லாரிகள் உட்பட பென்ஸ் காரையும் தூக்கிய போலீஸ்... வீடியோவை பார்த்து சிரிக்கும் மக்கள்!

அந்த வீடியோக்கள்தான் தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. மேலும் அவரை சர்ச்சையிலும் சிக்க வைத்திருக்கின்றது. வைரலாகிக் கொண்டிருக்கும் அந்த வீடியோவில், ராய் குரியன் சன் ரூஃப் வாயிலாக வெளி வந்து மேற்கூரை மீது அமர்ந்திருப்பதைப் போலவும், கைகளை அசைத்தவாறு மகிழ்ச்சியுடன் இருந்ததையும் வெளிக்காட்டும் வகையில் உள்ளது.

ஓவரா ஆட்டம் போட்ட தொழிலதிபர்! 8 லாரிகள் உட்பட பென்ஸ் காரையும் தூக்கிய போலீஸ்... வீடியோவை பார்த்து சிரிக்கும் மக்கள்!

ஆனால், இந்த மகிழ்ச்சிக்கு ஆப்பு வைக்கும் விதமாக கேரள போலீஸார் அவர் மீது நடவடிக்கை எடுக்க ஆரம்பித்துள்ளனர். தற்போது நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, திருமணம் போன்ற விசேஷங்களுக்குகூட குறைந்தபட்ச ஆட்கள் மட்டுமே பங்கேற்க வேண்டும்ம என அரசு அறிவுறுத்தி வருகின்றது.

ஓவரா ஆட்டம் போட்ட தொழிலதிபர்! 8 லாரிகள் உட்பட பென்ஸ் காரையும் தூக்கிய போலீஸ்... வீடியோவை பார்த்து சிரிக்கும் மக்கள்!

இந்நிலையிலேயே தொழிலதிபர் குரியன் அண்மையில் கேளிக்கை நிகழ்ச்சியை நிகழ்த்தினார். இதைத்தொடர்ந்து , வாகன கண்காட்சியை அரங்கேற்றியிருக்கின்றார். இத்துடன், ராய் குரியன் மாஸ்க் அணியாமல் காரின் மேற்கூரையில் அமர்ந்திருப்பதை நம்மால் காண முடிகின்றது. பொது இடத்தில் மாஸ்க் இன்றி சுற்றி திரிவதும் தற்போது குற்றமாகும். ஆகையால், பல்வேறு பிரிவுகளின்கீழ் ராய்குரியன் மீது காவல்துறை வழக்கு பதியலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Kerala Cops Busted Kerala Businessman For Doing RoadShow With Bharat Benz trucks. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X