வேலையில்லா இந்திய பட்டதாரிக்கு இங்கிலாந்தில் அடித்த ஜாக்பாட்... திக்குமுக்காடிபோன குடும்பத்தினர்...

இங்கிலாந்து நாட்டில் அண்மையில் குடியேறிய இந்திய பட்டதாரி இளைஞருக்கு ஜாக்பாட் அடித்த சம்பவம் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை தொடர்ச்சியாக காணலாம்.

வேலையில்லா இந்திய பட்டதாரிக்கு இங்கிலாந்தில் அடித்த ஜாக்பாட்... திக்குமுக்காடிபோன குடும்பத்தினர்...

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் ஷிபு பவுல் (Shibu Paul). 32 வயது நிரம்பிய இவர் சவுண்ட் இன்ஜினியர் ஆவார். இவர் தற்போது அவரது மனைவியுடன் இங்கிலாந்து நாட்டில் வசித்து வருகின்றார். இவர்கள் இருவருமே கடந்த வருடம்தான் இந்தியாவில் இருந்து இங்கிலாந்துக்கு புறப்பட்டுச் சென்றிருக்கின்றனர்.

வேலையில்லா இந்திய பட்டதாரிக்கு இங்கிலாந்தில் அடித்த ஜாக்பாட்... திக்குமுக்காடிபோன குடும்பத்தினர்...

ஷிபுவின் மனைவி லின்னெட் ஜோசப் (28) இங்கிலாந்தில் உள்ள நாட்டிங்காம் சிட்டி மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகின்றனர். ஆனால், ஷிபு பவுலுக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை. தொடர்ந்து, அவர் இங்கிலாந்தில் வேலை தேடி வந்துக் கொண்டிருந்திருக்கின்றார்.

வேலையில்லா இந்திய பட்டதாரிக்கு இங்கிலாந்தில் அடித்த ஜாக்பாட்... திக்குமுக்காடிபோன குடும்பத்தினர்...

தற்போது கொரோனா வைரஸ் பதற்றம் இங்கிலாந்திலும் நீடித்து வருகிறது. இதனால்தான் ஷிபு நீண்ட நாட்களாக தேடியும் வேலை கிடைக்காத சூழலே நிலவி வருகின்றது. அதேசமயம், விடா முயற்சியாக இணையத்தின் வாயிலாக பல்வேறு நிறுவனங்களைத் தொடர்பு கொண்டு பணிக்காக அவர் விண்ணப்பித்து வருகின்றார்.

வேலையில்லா இந்திய பட்டதாரிக்கு இங்கிலாந்தில் அடித்த ஜாக்பாட்... திக்குமுக்காடிபோன குடும்பத்தினர்...

இந்நிலையில்தான் ஷிபுவிற்கு ரூ. 2 கோடி மதிப்புள்ள லம்போர்கினி உருஸ் கார் பரிசாக கிடைத்துள்ளது. இதனை, பிஓடிபி (Best of the Best) எனும் அமைப்பே அவருக்கு வழங்கியிருக்கின்றது. இது அண்மையில் லக்கி டிராவ் நிகழ்வினை விமான நிலையம் மற்றும் ஆன்லைன் வாயிலாக நிகழ்த்தியது. இதில், ஷிபு பவுல் கலந்துக் கொண்டதாகக் கூறப்படுகின்றது.

வேலையில்லா இந்திய பட்டதாரிக்கு இங்கிலாந்தில் அடித்த ஜாக்பாட்... திக்குமுக்காடிபோன குடும்பத்தினர்...

இந்தநிலையிலேயே ஷிபு தேர்ந்தெடுக்கப்பட்டு தற்போது இரண்டு கோடி ரூபாய் மதிப்பிலான லம்போர்கினி உருஸ் காரைப் பெற்றிருக்கின்றார். இந்த காருடன் அந்நாட்டு மதிப்பில் 20,000 யூரோக்கள் ஷிபுவிற்கு வழங்கப்பட்டுள்ளது. இது இந்திய மதிப்பில் ரூ. 17 லட்சத்திற்கும் அதிகம் ஆகும். இது தோராயமாக வழங்கப்பட்டுள்ள மதிப்பாகும்.

வேலையில்லா இந்திய பட்டதாரிக்கு இங்கிலாந்தில் அடித்த ஜாக்பாட்... திக்குமுக்காடிபோன குடும்பத்தினர்...

காரை ஷிபுவின் கையில் கொடுத்த பின்னரும் அவர் அதை நம்பவே இல்லை. பல முறைய நெறியாளர்களிடம் உண்மையாக இந்த கார் எனக்குதானா என பல முறைக் கேட்பதை வீடியோவில் நம்மால் காண முடிகின்றது. ஆரம்பத்தில் பிஓடிபி குழுவினர், உங்களுக்கு சர்ப்ரைஸ் காத்து இருக்கு என கூறியதில் இருந்து, காரை ஒப்படைத்தது வரை, ஷிபு பரவசத்துடனே காணப்பட்டார்.

வேலையில்லா இந்திய பட்டதாரிக்கு இங்கிலாந்தில் அடித்த ஜாக்பாட்... திக்குமுக்காடிபோன குடும்பத்தினர்...

ஷிபு-லின்னெட் தம்பதியினர் இதற்கு முன்பு வரை மிகவும் வழக்கமான கார்களில் ஒன்ரான டொயோட்டா யாரிஸ் காரையே பயன்படுத்தி வந்தனர். இனி இவர்களின் பயணம் லம்போர்கினி உருஸ் எஸ்யூவி காரிலேயே இருக்கும். இது ஒரு மிகப்பெரிய அப்கிரேஷன் ஆகும். இந்த கார் பல இளைஞர்களின் கனவு வாகனமாக இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதைத்தான் பிஓடிபி ஷிபுவிற்கு பரிசாக வழங்கியுள்ளது.

வேலையில்லா இந்திய பட்டதாரிக்கு இங்கிலாந்தில் அடித்த ஜாக்பாட்... திக்குமுக்காடிபோன குடும்பத்தினர்...

பிஓடிபி ஓர் கார் மற்றும் லைஃப் ஸ்டைல் குறித்த போட்டிகளை நிகழ்த்தி வரும் இங்கிலாந்து நிறுவனம் ஆகும். இது கடந்த 1999ம் ஆண்டில் இருந்து இப்போட்டியை நடத்தி வருகின்றது. இந்த போட்டியில் இந்தியர்கள் பலர் இதற்கு முன்பாக பல விலையுயர்ந்த பரிசைத் தட்டிச் சென்றிருக்கின்றனர். இந்த வரிசையில் தற்போது கேரளத்தை பூர்வீகமாகக் கொண்டு ஷிபு இடம்பிடித்திருக்கின்றார்.

வேலையில்லா இந்திய பட்டதாரிக்கு இங்கிலாந்தில் அடித்த ஜாக்பாட்... திக்குமுக்காடிபோன குடும்பத்தினர்...

இந்நிறுவனம், இங்கிலாந்தில் மட்டுமின்றி அரபு போன்ற நாடுகளிலும் இப்போட்டியை நடத்தி வருகின்றது. அங்கும் ஒரு சில இந்தியர்கள் அதன் பரிசுகளை வென்றிருக்கின்றனர். இது பலரின் வாழ்க்கையை ஓர் நிறுவனமாக இருந்து வருகின்றது. உருஸ் எஸ்யூவி காருக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகின்றது.

குறிப்பாக, திரை நட்சத்திரங்கள் இக்காருக்கு நல்ல வரவேற்பு உள்ளது. இக்கார், இந்தியாவில் ரூ. 3.1 கோடி மதிப்பில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலையாகும். இதுவே, ஆன்-ரோடு மதிப்பில் வாங்கினால் அதன் விலை ரூ. 4 கோடியைத் தொட்டுவிடும்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Kerala Couple Wins Lamborghini Urus & 20000 Euros In UK. Read In Tamil.
Story first published: Friday, July 10, 2020, 17:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X