விலையுயர்ந்த காரின் பதிவு ரத்து... காரணம் என்ன தெரியுமா?.. பிரமாண்ட அரக்கனுக்கு நேர்ந்த சோகம்..!

விலையுயர்ந்த கார் ஒன்றின் பதிவை மோட்டார் வாகனத்துறை ரத்து செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடிதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

விலையுயர்ந்த காரின் பதிவு ரத்து... காரணம் என்ன தெரியுமா?.. பிரமாண்ட அரக்கனுக்கு நேர்ந்த சோகம்..!

கடந்த சில வாரங்களுக்கு முன்பு சமூக வலைதளம் வாயிலாக எழும்பியப் புகாரைத் தொடர்ந்து கேரள மாநில மோட்டார் வாகனத் துறை (MVD) விலையுயர்ந்த இசுஸு வி கிராஸ் பிக்-அப் டிரக்கை கராஜில் இருந்து பறிமுதல் செய்தது. எம்விடி-யின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு, அக்காரின் உருவம் முழுவதுமாக மாற்றியமைக்கப்பட்டது மட்டுமே முக்கிய காரணமாக அமைந்திருந்தது.

விலையுயர்ந்த காரின் பதிவு ரத்து... காரணம் என்ன தெரியுமா?.. பிரமாண்ட அரக்கனுக்கு நேர்ந்த சோகம்..!

இந்த கார் கேரள பெரு வெள்ளத்தின்போது அம்மாநில பேரிடர் மீட்புத்துறையினருக்கு பெரும் உதவியாக இருந்தது குறிப்பிடத்தகுந்து. அப்போது அக்கார்மீது நடவடிக்கை எடுக்காத எம்விடி துறையினர், சமூக வலைதளத்தின் வாயிலாக முன் வைக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் பல லட்சம் செலவில் பிரமாண்ட தோற்றத்திற்கு மாறிய கார் மீது சமீபத்தில் நடவடிக்கை எடுத்தது.

விலையுயர்ந்த காரின் பதிவு ரத்து... காரணம் என்ன தெரியுமா?.. பிரமாண்ட அரக்கனுக்கு நேர்ந்த சோகம்..!

இந்த நிலையிலேயே அக்காரின் பதிவையும் தற்காலிகமாக 6 மாதங்களுக்கு எம்விடி ரத்து செய்துள்ளது. இதற்கு அக்காரின் முரட்டுத் தனமான தோற்றம் மட்டுமே காரணமாக அமைந்துள்ளது. இந்த கார், கேரளாவைச் சேர்ந்த அபின் பாப்ஸ் ஆபிரகாம் என்பவருக்கு சொந்தமானதாகும்.

விலையுயர்ந்த காரின் பதிவு ரத்து... காரணம் என்ன தெரியுமா?.. பிரமாண்ட அரக்கனுக்கு நேர்ந்த சோகம்..!

இவரே இசுஸு நிறுவனத்தின் டி மேக்ஸ் வி-கிராஸ் எனும் பிக்-அப் டிரக்கை கண்டுபிடிக்க முடியாத வகையில் மாற்றியமைத்தவர். இதன் காரணத்தினாலேயே பல்வேறு சிக்கல்களை அவர் சந்தித்து வருகின்றார். தற்போது செய்யப்பட்டிருக்கும் ரத்து 6 மாதங்களுக்கு செல்லும் என்று எம்விடி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

விலையுயர்ந்த காரின் பதிவு ரத்து... காரணம் என்ன தெரியுமா?.. பிரமாண்ட அரக்கனுக்கு நேர்ந்த சோகம்..!

காரில் செய்யப்பட்டிருக்கும் உருமாற்றம் முழுமையாக அகற்றப்பட்டு, பழைய நிலைக்குக் கொண்டுவரப்பட்டால் மட்டுமே பதிவு செல்லுபடியாகும் என அது கூறியிருக்கின்றது. ஆகையால், அபின் பாப்ஸ் மிகவும் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். அவர், பல லட்சங்கள் செலவு செய்து அக்காரை முரட்டுத் தனமான உருமாற்றத்திற்குக் கொண்டு வந்திருப்பது குறிப்பிடத்தகுந்தது.

விலையுயர்ந்த காரின் பதிவு ரத்து... காரணம் என்ன தெரியுமா?.. பிரமாண்ட அரக்கனுக்கு நேர்ந்த சோகம்..!

எம்விடி-யின் அறிவிப்பைத் தொடர்ந்து 6 மாதங்களுக்கு உள்ளாக மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை எனில் வாகனத்தின் பதிவு நிரந்தரமாக ரத்துச் செய்யப்படும் அம்மாநில அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும், பதிவு ரத்து செய்யப்பட்டு இருக்கும் இந்த கால கட்டத்தில் கார் வெளியில் பயணிப்பதைக் கண்டால் மிக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் கூடுதலாக அரசு எச்சரித்துள்ளது.

விலையுயர்ந்த காரின் பதிவு ரத்து... காரணம் என்ன தெரியுமா?.. பிரமாண்ட அரக்கனுக்கு நேர்ந்த சோகம்..!

பிரிவு 53 (1)ன் கீழ் இந்த காரின் பதிவு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்தே, பிரிவு 54ன் கீழ் வாகனம் பழைய நிலைக்கு திரும்ப தவறுமேயானால் பதிவு நிரந்தர ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மிகக் கடுமையாக மாற்றியமைக்கப்பட்ட கார்களில் ஒன்றாகவே இந்த இசுஸு டி-மேக்ஸ் வி-கிராஸ் பிக்-அப் டிரக் உள்ளது.

விலையுயர்ந்த காரின் பதிவு ரத்து... காரணம் என்ன தெரியுமா?.. பிரமாண்ட அரக்கனுக்கு நேர்ந்த சோகம்..!

அந்த காரின் 12 இன்ச் டயர் மற்றும் சில கூறுகளைக் கொண்டு உயரம் அதிகரிக்கச் செய்யப்பட்டுள்ளது. இதன் டயர் உயரமானது மட்டுமில்லைங், கூடுதல் பெரிய உருவம் கொண்டதும்கூட. இத்துடன், பம்பர், காரின் உடற் பாகங்கள் சிலவும் சந்தைக்கு பிறகான கூறுகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. எனவேதான் இக்காரை எம்விடி பறிமுதல் செய்திருக்கின்றது.

விலையுயர்ந்த காரின் பதிவு ரத்து... காரணம் என்ன தெரியுமா?.. பிரமாண்ட அரக்கனுக்கு நேர்ந்த சோகம்..!

இந்த மாற்றத்திற்காக ஏற்கனவே ரூ. 48 ஆயிரம் வரை அபராதத்தை எம்விடி விதித்துள்ளது. இந்த நிலையிலேயே முழுமையாக மாற்றியமைக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத பாகங்களை உடனடியாக நீக்கும்படி அது அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து கேரள மாநில மோட்டார் வாகனத்துறை வெளியிட்டுள்ள புகைப்படமே தற்போது இணையத்தின் வாயிலாக வெளியாகியுள்ளது.

விலையுயர்ந்த காரின் பதிவு ரத்து... காரணம் என்ன தெரியுமா?.. பிரமாண்ட அரக்கனுக்கு நேர்ந்த சோகம்..!

கேரள எம்விடி அண்மைக் காலங்களாக வாகனம் சார்ந்த விவகாரத்தில் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில், சமீபத்தில் சமூக வலைதளம் வாயிலாக எழும்பிய புகாரைத் தொடர்ந்து சிறுமி மீது நடவடிக்கை எடுத்தது. உரிய ஓட்டுநர் உரிமம் மற்றும் தலைக்கவசம் ஏதுமின்றி சிறுமி யமஹா பைக்கை இயக்கிய காரணத்தால் இந்த நடவடிக்கை அது எடுத்தது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Kerala MVD Suspensed Modified Isuzu V-Cross Registration For Tempererly. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X