400 கோடி ரூபாயை 4% வட்டிக்கு கடன் வாங்கும் கேரள அரசு... கடன் வாங்கி நாட்டிற்கே உதாரணமாக மாறும் கேரளா

மிகப் பெரிய தொகையை 4 சதவீத வட்டியில் கேரள அரசு கடன் வாங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான காரணத்தை இந்த பதிவில் காணலாம்.

400 கோடி ரூபாயை 4% வட்டிக்கு கடன் வாங்கும் கேரள அரசு... இத வச்சு பினராயி விஜயன் என்ன செய்ய போகிறார் தெரியுமா?

காற்று மாசு, சுற்றுச்சூழல் சீர்கேடு, புவி வெப்ப மயமாதல் என பல்வேறு பிரச்னைகளுக்கு வாகனங்களில் இருந்து வெளிவரும் புகையே முக்கிய காரணி என கூறப்படுகின்றது. இதற்கு இன்னும் சில காரணங்கள் இருந்தாலும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் குற்றச்சாட்டில் பெட்ரோல், டீசல் வாகனங்களே முன்னிலையில் இருக்கின்றன.

400 கோடி ரூபாயை 4% வட்டிக்கு கடன் வாங்கும் கேரள அரசு... இத வச்சு பினராயி விஜயன் என்ன செய்ய போகிறார் தெரியுமா?

இந்த நிலையின் காரணமாகவே உலக நாடுகள் பல தங்களின் மக்களை மின்சார வாகன பயன்பாட்டை நோக்கி நகர்த்தும் முயற்சியில் களமிறங்கியிருக்கின்றன. இதே முயற்சியை இந்திய அரசும் மேற்கொண்டு வருகின்றது. இதில், கேரள மாநில அரசு அதன பங்கினை வகிக்கும் விதமாக தனித்துவமான நடவடிக்கையை மேற்கொள்ள ஆரம்பித்துள்ளது.

400 கோடி ரூபாயை 4% வட்டிக்கு கடன் வாங்கும் கேரள அரசு... இத வச்சு பினராயி விஜயன் என்ன செய்ய போகிறார் தெரியுமா?

அது, அதன் மாநில மக்களை மாசற்ற வாகன பயன்பாட்டிற்கு மாற்ற நினைப்பது மட்டுமின்றி, அதுவும் மக்களுக்கு உதாரணமாக மாறத் தொடங்கியுள்ளது. அதாவது, சுற்றுச்சூழலுக்கு நண்பனாக விளங்கும் வாகனங்களின் பயன்பாட்டிற்கு கேரள அரசும் மாற தொடங்கியிருக்கின்றது.

400 கோடி ரூபாயை 4% வட்டிக்கு கடன் வாங்கும் கேரள அரசு... இத வச்சு பினராயி விஜயன் என்ன செய்ய போகிறார் தெரியுமா?

இதன்படி, மாநிலத்தின் முக்கிய அரசு அதிகாரிகள் சிலரின் பயன்பாட்டிற்காக மின்சார வாகனங்களை அரசு அண்மையில் களமிறக்கியது. இதைத்தொடர்ந்து, தனது பொது பேருந்துகள் சிலவற்றை இயற்கை எரிவாயுவில் (எல்என்ஜி) இயங்கும் வாகனங்களாக மாற்றும் முயற்சியில் அது களமிறங்கியுள்ளது.

400 கோடி ரூபாயை 4% வட்டிக்கு கடன் வாங்கும் கேரள அரசு... இத வச்சு பினராயி விஜயன் என்ன செய்ய போகிறார் தெரியுமா?

கேரள அரசின் இந்த திட்டத்திற்கு மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் கிடைத்துவிட்டதாகவும், மேலும் மத்திய அரசு சார்பில் உதவி வழங்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனை மாநில போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ளது. இந்த வாக்குறுதியைத் தொடர்ந்து, மாநில அரசு அதன் 400 டீசல் பேருந்துகளை சிஎன்ஜி வாகனங்களமாக திட்டமிட்டுள்ளது.

400 கோடி ரூபாயை 4% வட்டிக்கு கடன் வாங்கும் கேரள அரசு... இத வச்சு பினராயி விஜயன் என்ன செய்ய போகிறார் தெரியுமா?

டீசல் வாகனத்தில் இருந்து எல்என்ஜி வாகனமாக மாற்றப்படுவதற்கு, ஒரு பேருந்திற்கு ஆகக்கூடிய செலவு ரூ. 25 லட்சங்கள் என கணிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 400 பேருந்துகளுக்கு சுமார் ரூ.100 கோடிகள் வரை செலவாகும் என கூறப்படுகின்றது. இந்த அதிகபட்ச தொகையையே 4 சதவீத வட்டியுடன் கடன் பெற கேரள அரசு திட்டமிட்டிருக்கின்றது.

400 கோடி ரூபாயை 4% வட்டிக்கு கடன் வாங்கும் கேரள அரசு... இத வச்சு பினராயி விஜயன் என்ன செய்ய போகிறார் தெரியுமா?

எல்என்ஜி பேருந்துகளுக்கான உடல் அமைப்பை கேஎஸ்ஆர்டிசி சுயமாக தயாரித்துள்ளது. ஆனால், இதற்கு இந்திய தானியஙஹ்கி ஆராய்ச்சி சங்கத்திடம் (ARAI) இருந்து இன்னும் ஒப்புதல் பெறவில்லை. முன்னதாக, 2016ம் ஆண்டில் இதேமாதிரியான ஓர் முயற்சியை கேரள அரசு மேற்கொண்டது. மாநிலத்தின் பொது பேருந்து துறையில் இயற்கை எரிபொருளல் இயங்கும் பஸ் ஒன்று சோதனை அடிப்படையில் இயக்கப்பட்டது.

400 கோடி ரூபாயை 4% வட்டிக்கு கடன் வாங்கும் கேரள அரசு... இத வச்சு பினராயி விஜயன் என்ன செய்ய போகிறார் தெரியுமா?

மாநிலத்தில் இயற்கை எரிவாயு நிரப்பும் பங்குகள் அப்போகு குறைவு என்பதால் அதனைத் தொடர்ச்சியாக பயன்படத்துவதில் பல்வேறு சிக்கல்கள் நிலவின. இந்த நிலையிலேயே தற்போது மீண்டும் இயற்கை எரிபொருளில் இயங்கும் வாகன பயன்பாட்டில் கேரள அரசு களமிறங்க திட்டமிட்டுள்ளது.

400 கோடி ரூபாயை 4% வட்டிக்கு கடன் வாங்கும் கேரள அரசு... இத வச்சு பினராயி விஜயன் என்ன செய்ய போகிறார் தெரியுமா?

முதலில், 50 பேருந்துகளை இயற்கை எரிவாயு திறனுக்கு மாற்றிவிட்டு, அதனைச் சோதனையோட்டம் செய்ய கேரள அரசு திட்டமிட்டுள்ளது. பெசோ ஒப்புதல் மற்றும் தடையின்றி எல்என்ஜி பேருந்துகளை இயக்க முடியுமானால் அடுத்தடுத்த டீசல் பேருந்துகள் இயற்கை எரிபொருளால் இயங்கும் வாகனமாக மாற்றப்பட்டு அவை பொது போக்குவரத்தில் ஈடுபடுத்தப்பட இருக்கின்றன.இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து சுற்று சூழல் பாதுகாப்பு விவகாரத்தில் நாட்டிற்கு முன்னுதாரணமான மாநிலமாக கேரள அரசு மாறியுள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Kerala Planning To Convert Diesel Buses Into Liquefied Natural Gas Vehicle. Read In Tamil.
Story first published: Monday, November 9, 2020, 15:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X