இந்தியாவிற்கே முன்னோடியாக மாறும் கேரளா... பினராயி விஜயன் அரசு அதிரடி... சும்மா தூள் கௌப்புங்க சாரே

இந்தியாவிற்கே முன்னோடியாக கேரளா மாறவுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவிற்கே முன்னோடியாக மாறும் கேரளா... பினராயி விஜயன் அரசு அதிரடி... சும்மா தூள் கௌப்புங்க சாரே

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில், பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தீவிரமாக உள்ளது. காற்று மாசுபாடு மற்றும் கச்சா எண்ணெய் இறக்குமதி ஆகிய இரண்டு முக்கியமான பிரச்னைகளுக்கு எலெக்ட்ரிக் வாகனங்கள் நல்ல தீர்வாக இருக்கும். எனவேதான் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.

இந்தியாவிற்கே முன்னோடியாக மாறும் கேரளா... பினராயி விஜயன் அரசு அதிரடி... சும்மா தூள் கௌப்புங்க சாரே

இதுதவிர பல்வேறு மாநில அரசுகளும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் தீவிரமாக உள்ளன. இதில், கேரளாவும் ஒன்று. கேரள அரசின் எலெக்ட்ரிக் வாகன கொள்கை கடந்த 2018ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இதன்படி வரும் 2022ம் ஆண்டிற்குள் கேரள மாநிலத்தில், 10 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களை சாலைக்கு கொண்டு வர இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கே முன்னோடியாக மாறும் கேரளா... பினராயி விஜயன் அரசு அதிரடி... சும்மா தூள் கௌப்புங்க சாரே

முதற்கட்டமாக நடப்பாண்டு இறுதிக்குள், 2 லட்சம் எலெக்ட்ரிக் டூவீலர்கள், 50 ஆயிரம் எலெக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஸாக்கள், ஆயிரம் எலெக்ட்ரிக் சரக்கு வாகனங்கள், 3 ஆயிரம் எலெக்ட்ரிக் பஸ்கள் மற்றும் மின்சாரம் மூலம் இயங்கும் 100 பயணிகள் படகுகள் ஆகியவற்றை சேவைக்கு கொண்டு வர கேரள அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.

இந்தியாவிற்கே முன்னோடியாக மாறும் கேரளா... பினராயி விஜயன் அரசு அதிரடி... சும்மா தூள் கௌப்புங்க சாரே

இந்த சூழலில், அடுத்த நிதியாண்டு முதல் அரசு துறைகளுக்கு வாகனங்களை வாங்குவது மற்றும் வாடகைக்கு எடுப்பது தொடர்பான தனது திட்டங்களில் கேரள அரசு தற்போது முக்கிய கொள்கை மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இதன்படி அரசு துறைகள் மற்றும் துறை தலைவர்களுக்காக பணியமர்த்தப்பட்ட பெட்ரோல், டீசல் வாகனங்கள் அனைத்தையும் வெளியேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கே முன்னோடியாக மாறும் கேரளா... பினராயி விஜயன் அரசு அதிரடி... சும்மா தூள் கௌப்புங்க சாரே

அதற்கு பதிலாக எலெக்ட்ரிக் கார்களை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கடந்த மார்ச் 7ம் தேதி, நிதித்துறை சார்பில் ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதன்படி இஇஎஸ்எல் (EESL-Energy Efficiency Services Limited) நிறுவனத்திடம் இருந்து அனைத்து அரசு துறைகளும் எலெக்ட்ரிக் வாகனங்களை மட்டுமே பணியமர்த்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கே முன்னோடியாக மாறும் கேரளா... பினராயி விஜயன் அரசு அதிரடி... சும்மா தூள் கௌப்புங்க சாரே

இஇஎஸ்எல் என்பது மத்திய அரசின் நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. ''வருகின்ற ஏப்ரல் 1ம் தேதி முதல், பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களுக்கு மாற்றாக எலெக்ட்ரிக் வாகனங்களை தேர்வு செய்யும்படி அரசு துறைகளின் தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது'' எனவும் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கே முன்னோடியாக மாறும் கேரளா... பினராயி விஜயன் அரசு அதிரடி... சும்மா தூள் கௌப்புங்க சாரே

அத்துடன் வாகனங்களை வாங்குவதிலும் அதிரடியான மாற்றங்கள் செய்யப்படவுள்ளன. இதன்படி இனிமேல் வாகனங்களை வாங்குவதற்கு பதிலாக லீசுக்கு எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வீண் செலவை குறைக்க முடியும் என்பதால், அரசு இந்த விஷயத்தில் ஆர்வமாக உள்ளது. பட்ஜெட்டிலேயே அரசு இதனை அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிற்கே முன்னோடியாக மாறும் கேரளா... பினராயி விஜயன் அரசு அதிரடி... சும்மா தூள் கௌப்புங்க சாரே

இதன்படி இஇஎஸ்எல் நிறுவனத்திடம் இருந்து எலெக்ட்ரிக் கார்கள் பணியமர்த்தப்பட்டால், தற்போதைய லீஸ் உடன் ஒப்பிடும்போது, மாநில அரசால் 1,000 கார்களுக்கு 7.50 கோடி ரூபாயை சேமிக்க முடியும். அத்துடன் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. எலெக்ட்ரிக் வாகனங்களை அதிகளவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர முயலும் கேரள அரசின் முயற்சி பாராட்டுக்குரியது.

இந்தியாவிற்கே முன்னோடியாக மாறும் கேரளா... பினராயி விஜயன் அரசு அதிரடி... சும்மா தூள் கௌப்புங்க சாரே

தற்போதைய நிலையில் டெல்லி உள்பட இந்தியாவின் பல நகரங்கள் காற்று மாசுபாடு பிரச்னையால் மிகவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு பெட்ரோல், டீசல் வாகனங்கள் முக்கியமான காரணமாக உள்ளன. இதுதவிர கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா செலவிட்டு வரும் தொகை மிக அதிகமாக இருப்பதும், பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்துகிறது.

இந்தியாவிற்கே முன்னோடியாக மாறும் கேரளா... பினராயி விஜயன் அரசு அதிரடி... சும்மா தூள் கௌப்புங்க சாரே

எனவேதான் இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதில் பிரதமர் மோடி மிகவும் ஆர்வமாக உள்ளார். மாநில அரசுகளும் அதற்கேற்ப செயல்பட்டு வருகின்றன. கேரள அரசு இந்தியாவிற்கே முன்னோடியாக பல திட்டங்களை செயல்படுத்துகிறது. அந்த வரிசையில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதிலும் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு தீவிரமாக செயலாற்ற தொடங்கியுள்ளது.

Note: Images used are for representational purpose only.

Most Read Articles
English summary
Kerala State Govt Departments To Hire Only Electric Vehicles. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X