கேஜிஎஃப் நாயகன் யாஷ் எத்தனை சொகுசு கார்களுக்கு சொந்தகாரர் தெரியுமா..?

யாஷ், பிரபலமான கன்னட நடிகர். 2008ல் இருந்து கன்னட சினிமா உலகில் இருந்தாலும், தமிழ் ரசிகர்களிடையே இவரை அறிமுகப்படுத்திய படம் கேஜிஎஃப் அத்தியாயம் ஒன்று. தற்சமயம் யாஷ் இதன் இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். கொரோனா வைரஸ் பரவாமல் இருந்திருந்தால் அடுத்த மாதத்தில் இந்த படம் ரிலீஸாக இருந்தது.

ஜேஜிஎஃப் முதல் பாகத்தின் மூலமாகவே அனைத்து இந்திய ரசிகர்களையும் கவர்ந்துவிட்ட இவர் படத்திற்கு 3 முதல் 4 கோடி ரூபாயை சம்பளமாக பெறுகிறார். ரூ.3 கோடியில் யாஷ்க்கு சொந்தமாக வீடு உள்ளது. இவரது லக்சரி வாழ்க்கை முறையை பார்க்கும்போது நிச்சயம் அவரது சூப்பர் கார் கலெக்‌ஷனை பார்க்காமல் இருக்க முடியாது. அவற்றில் மிகவும் விலை அதிகமானவற்றை

இந்த செய்தியில் பார்ப்போம்.

கேஜிஎஃப் நாயகன் யாஷ் எத்தனை சொகுசு கார்களுக்கு சொந்தகாரர் தெரியுமா..?

1. மெர்சிடிஸ் பென்ஸ் டிஎல்எஸ் 350டி

யாஷிடம் மிக விலை கொண்ட காராக மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் 350டி கார் உள்ளது. இதன் விலை இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.85 லட்சமாக உள்ளது. இந்த விலையில் அதிக வசதி மற்றும் சவுகரியத்துடன் மெர்டிசிஸ் டிஎல்எஸ் 350டி மாடலை மட்டும் தான் வாங்க முடியும். இந்த காரில் ஆறு நபர்கள் அமர முடியும்.

கேஜிஎஃப் நாயகன் யாஷ் எத்தனை சொகுசு கார்களுக்கு சொந்தகாரர் தெரியுமா..?

2. மெர்சிடிஸ் ஜிஎல்சி 250டி கூபே

மெர்சிடிஸ் நிறுவனத்தின் கூபே ஸ்டைல் மாடல்களுள் ஒன்றான ஜிஎல்சி 250டி காரையும் யாஷ் சொந்தமாக வைத்துள்ளார். ரூ.78 லட்சத்தை எக்ஸ்ஷோரூம் விலையாக கொண்டுள்ள இந்த ஜிஎல்சி மாடலில் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வுகளை 9ஜி-ட்ரோனிக் தொழிற்நுட்பத்துடன் மெர்சிடிஸ் நிறுவனம் வழங்கியுள்ளது.

கேஜிஎஃப் நாயகன் யாஷ் எத்தனை சொகுசு கார்களுக்கு சொந்தகாரர் தெரியுமா..?

3. ஆடி க்யூ7

ஆடி க்யூ 7, யாஷ் வைத்துள்ள லக்சரி கார்களில் ஒன்றாகும். எஸ்யூவி ரக மாடலான இதில் லக்சரி என்ற வார்த்தையை நியாயப்படுத்தும் விதமாக காற்றோட்டமான கேபின், அதிக பவர், அட்டகாசமான டிசைன், தரமான உட்புற வசதிகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.

கேஜிஎஃப் நாயகன் யாஷ் எத்தனை சொகுசு கார்களுக்கு சொந்தகாரர் தெரியுமா..?

ஆடி நிறுவனம் இந்த எஸ்யூவி காருக்கு 3.0 லிட்டர் டிஎஃப்எஸ்ஐ குவாட்ரோ பெட்ரோல், 3.0 லிட்டர் டிடிஐ குவாட்ரோ டீசல் மற்றும் 4.2 லிட்டர் டிடிஐ குவாட்ரோ என்ற மூன்று என்ஜின் தேர்வுகளை வழங்கியுள்ளது. அனைத்து சாலைகளுக்கு இந்த என்ஜின் மூலமாக சிறப்பான செயல்திறனை பெற முடியும்.

கேஜிஎஃப் நாயகன் யாஷ் எத்தனை சொகுசு கார்களுக்கு சொந்தகாரர் தெரியுமா..?

4.பிஎம்டபிள்யூ 520டி

மெர்சிடிஸ், ஆடி பார்த்துவிட்டோம் அடுத்து என்ன பிஎம்டபிள்யூ தான். யாஷிடம் பிஎம்டபிள்யூ ப்ராண்ட்டில் 520டி மாடல் உள்ளது. மாடர்ன் தோற்றத்தில் தொழிலதிபர்கள் அதிகளவில் பயன்படுத்தும் இந்த காருக்கு அதன் க்ளாஸினால் தான் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு கிடைத்து வருகிறது.

கேஜிஎஃப் நாயகன் யாஷ் எத்தனை சொகுசு கார்களுக்கு சொந்தகாரர் தெரியுமா..?

5. ரேஞ்ச் ரோவர் எவோக்

ரேஞ்ச் ரோவர் ப்ராண்டின் எவோக் மாடலும் யாஷிடம் உள்ளது. ஐந்து-கதவு காரான இது ப்யூர், எஸ்இ, எஸ்இ டைனாமிக், எச்எஸ்இ மற்றும் எச்எஸ்இ டைனாமிக் என்ற ஐந்து விதமான வேரியண்ட்களில் சந்தைப்படுத்தப்பட்டு வருகிறது.

கேஜிஎஃப் நாயகன் யாஷ் எத்தனை சொகுசு கார்களுக்கு சொந்தகாரர் தெரியுமா..?

6. பஜேரோ ஸ்போர்ட்

மிட்சுபிஷி நிறுவனத்தின் பஜேரோ மாடல் உலகளவில் பிரபலமானது. இந்த பஜேரோ மாடலின் ஸ்போர்ட் வெர்சனையும் யாஷ் வைத்துள்ளார். இந்த ஸ்போர்ட் வெர்சன் காரில் மிக முக்கிய அம்சமாக ட்யூல்-ஸ்டேஜ் எஸ்ஆர்எஸ் காற்றுப்பை சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

சொகுசு கார்களுடன் கன்னட நடிகர் யாஷ் சொந்தமாக கொண்டுள்ள ரூ.3-4 கோடி மதிப்பிலான சொகுசு பங்களா அவரது சொந்த மாநிலமான கர்நாடகாவில் தான் உள்ளது. கார் மற்றும் இந்த சொகுசு வீட்டை மட்டும் சேர்த்து பார்த்தாலே ரூ.40 கோடி வரையில் வருவது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
KGF Star Yash Car Collection
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X