பிசுபிசுத்தது கார்னிவல் கார் விற்பனை... ரூ.2 லட்சம் வரை அதிரடி ஆஃபரை வழங்கும் கியா!

கொரோனாவால் ஏற்பட்டுள்ள மந்தமான நிலையை கருத்தில்கொண்டு, கார்னிவல் எம்பிவி காருக்கு ரூ.2 லட்சம் வரை மதிப்புடைய சேமிப்புச் சலுகைகளை வழங்குகிறது கியா மோட்டார்ஸ்.

 கியா கார்னிவல் காருக்கு ரூ.2 லட்சம் வரை அதிரடி ஆஃபர்!

கடந்த ஆண்டு செல்டோஸ் எஸ்யூவி மூலமாக இந்திய கார் சந்தையை அதகளப்படுத்தத் துவங்கிய கியா மோட்டார் நிறுவனம் இரண்டாவதாக கார்னிவல் என்ற சொகுசு எம்பிவி கார் மாடலை களமிறக்கியது. செல்டோஸ் போன்றே, கார்னிவல் காருக்கும் ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு இருந்தது.

 கியா கார்னிவல் காருக்கு ரூ.2 லட்சம் வரை அதிரடி ஆஃபர்!

ஆனால், அறிமுகம் செய்யப்பட்ட சில மாதங்களில் கொரோனா பிர்சனை காரணமாக, கார்னிவல் காரின் விற்பனை பிசுபிசுத்தது. இதனையடுத்து, கார்னிவல் காரின் விற்பனையை அதிகரிக்கும் வகையில், அதிரடி சேமிப்புச் சலுகைகளை கியா மோட்டார் அறிவித்துள்ளது.

 கியா கார்னிவல் காருக்கு ரூ.2 லட்சம் வரை அதிரடி ஆஃபர்!

இதன்படி, கார்னிவல் காருக்கு ரூ.46,000 வரை கார்ப்பரேட் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது. அதேபோன்று, பழைய காரை எக்ஸ்சேஞ்ச் செய்து புதிய கார்னிவல் காரை வாங்குவோருக்கு ரூ.80,000 கூடுதல் மதிப்பாக வழங்கப்படும்.

 கியா கார்னிவல் காருக்கு ரூ.2 லட்சம் வரை அதிரடி ஆஃபர்!

இதுதவிர்த்து, இந்த காருக்கு ரூ.48,000 மதிப்புடைய 3 ஆண்டுகள் வரை வரம்பில்லா கிலோமீட்டர்களுக்கான பராமரிப்புத் திட்டத்தையும் வழங்குவதாக கியா மோட்டார் தெரிவித்துள்ளது. இந்த காருக்கு பிரஸ்டீஜ் மற்றும் பிரிமீயம் வேரியண்ட்டுகளுக்கு ரூ.36,650 விலையில் பின் இருக்கை பயணிகளுக்கான கூடுதல் பொழுதுபோக்கு சாதனமும் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.

 கியா கார்னிவல் காருக்கு ரூ.2 லட்சம் வரை அதிரடி ஆஃபர்!

கியா கார்னிவல் காருக்கு சிறப்பு கடன் திட்டமும் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதன்படி, முதல் மூன்று மாதங்களுக்கு மாதத் தவணை கட்டும் அவசியம் இருக்காது. நான்காவது மாதத்திலிருந்து மாதத் தவணை துவங்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

 கியா கார்னிவல் காருக்கு ரூ.2 லட்சம் வரை அதிரடி ஆஃபர்!

தவிரவும், ஒரு லட்சம் கடனுக்கு ரூ.767 மட்டுமே மாதத் தவணையாக செலுத்தும் வாய்ப்பும் இருக்கிறது. மேலும், முதல் 6 மாதங்களுக்கு மாதத் தவணையில் 50 சதவீதத்தை செலுத்தும் வசதியும் வழங்கப்படும்.

 கியா கார்னிவல் காருக்கு ரூ.2 லட்சம் வரை அதிரடி ஆஃபர்!

புதிய கியா கார்னிவல் கார் பிரிமீயம், பிரஸ்டீஜ் மற்றும் லிமோசின் என மூன்று வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. இந்த கார் 7 சீட்டர், 8 சீட்டர் மற்றும் 9 சீட்டர் மாடல்களில் கிடைக்கிறது.

 கியா கார்னிவல் காருக்கு ரூ.2 லட்சம் வரை அதிரடி ஆஃபர்!

இந்த காரில் பிஎஸ்-6 தரத்திற்கு இணையான 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 200 பிஎச்பி பவரையும், 440 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது. கியா கார்னிவல் கார் லிட்டருக்கு 13.9 கிமீ மைலேஜ் தரும் என்று தெரிவிக்கப்படுகிறது.

 கியா கார்னிவல் காருக்கு ரூ.2 லட்சம் வரை அதிரடி ஆஃபர்!

புதிய கியா கார்னிவல் நப்பா லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி கொடுக்கப்பட்டுள்ளது. லெதர் உறையுடன் கூடிய ஸ்டீயரிங் வீல், கியர் நாப் ஆகியவையும் முக்கிய அம்சங்களாக உள்ளன. இந்த காரின் இரண்டாவது வரிசையில் கேப்டன் இருக்கைகளும் கொடுக்கப்படுகின்றன. டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் கேமரா மற்றும் சென்சார்களும் கொடுக்கப்பட்டுள்ளன.

 கியா கார்னிவல் காருக்கு ரூ.2 லட்சம் வரை அதிரடி ஆஃபர்!

கியா கார்னிவல் கார் ரூ.24.95 லட்சம் முதல் ரூ.33.95 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா காரைவிட மிக சொகுசான, அதிக இருக்கை வசதி கொண்ட காரை வாங்க விரும்புவோருக்கு சிறந்த தேர்வாக இருக்கும்.

Most Read Articles

English summary
Kia Motor has announced massive discount offer on Carnival MPV car in India.
Story first published: Tuesday, September 8, 2020, 17:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X