கியா கார்னிவல் காருக்கு தீபாவளி சலுகைகள் அறிவிப்பு!! ரூ.2.5 லட்சம் வரையில் தள்ளுபடிகளை பெறலாம்

கார்னிவல் எம்பிவி காரை எளிய முறையில் சொந்தமாக்குவதற்கான கவர்ச்சிகரமான நிதி சலுகைகளை கியா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. அவற்றை இந்த செய்தியில் பார்ப்போம்.

கியா கார்னிவல் காருக்கு தீபாவளி சலுகைகள் அறிவிப்பு!! ரூ.2.5 லட்சம் வரையில் தள்ளுபடிகளை பெறலாம்

தீபாவளி பண்டிகை காலத்தை முன்னிட்டு கியா நிறுவனம் அறிவித்துள்ள இந்த சலுகைகளை கார்ப்ரேட் போனஸ், எக்ஸ்சேன்ஞ் போனஸ் ஆக்ஸஸரீகள் மற்றும் வருடாந்திர பராமரிப்பு ஒப்பந்த தொகுப்புகள் ஆகிய வழிகளில் வாடிக்கையாளர்கள் பெறலாம்.

கியா கார்னிவல் காருக்கு தீபாவளி சலுகைகள் அறிவிப்பு!! ரூ.2.5 லட்சம் வரையில் தள்ளுபடிகளை பெறலாம்

இந்த பண்டிகை காலத்தில் கார்னிவலின் ப்ரீமியம் மற்றும் ப்ரெஸ்டிஜ் ட்ரிம்கள் ரூ.2.5 லட்சம் வரையிலான சலுகைகளுடன் கிடைக்கும். அதுவே லிமௌசைன் வேரியண்ட்டை ரூ.1.92 லட்சம் அளவிலான சலுகைகளுடன் வாடிக்கையாளர்கள் வாங்கலாம்.

கியா கார்னிவல் காருக்கு தீபாவளி சலுகைகள் அறிவிப்பு!! ரூ.2.5 லட்சம் வரையில் தள்ளுபடிகளை பெறலாம்

கார்னிவலை பற்றி கூற வேண்டுமென்றால், கியா பிராண்டில் இருந்து இரண்டாவது காராக வெளிவந்த இந்த எம்பிவி காரின் நீளம் 5,115 மிமீ ஆகவும், வீல்பேஸ் 3,060மிமீ மற்றும் பூட் பேஸ் 540 லிட்டர்கள் கொள்ளளவிலும் உள்ளன. காரின் வெளிப்புறத்தில் நேர்த்தியான அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய ஹெட்லைட்கள், மேற்கூரை தண்டவாளங்கள் மற்றும் கருப்பு நிறத்தில் B-பில்லர்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

கியா கார்னிவல் காருக்கு தீபாவளி சலுகைகள் அறிவிப்பு!! ரூ.2.5 லட்சம் வரையில் தள்ளுபடிகளை பெறலாம்

காரின் உள்ளே தானியங்கி க்ளைமேட் கண்ட்ரோல், சன்ரூஃப், லெதர் இருக்கைகள், பின்பக்க ஏசி துளைகள், பவர் ஸ்டேரிங் சக்கரம், 8 இன்ச்சில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் கன்சோல், ஆறு காற்றுப்பைகள், இபிடியுடன் ஏபிஎஸ், என்ஜின் இம்பொளிசர், பார்க்கிங் கேமிராக்கள் மற்றும் மோதல் சென்சார்கள் உள்ளிட்டவற்றுடன் கேபின் நன்கு விசாலமாக வழங்கப்படுகிறது.

கியா கார்னிவல் காருக்கு தீபாவளி சலுகைகள் அறிவிப்பு!! ரூ.2.5 லட்சம் வரையில் தள்ளுபடிகளை பெறலாம்

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு இந்த எம்பிவி காரில் பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமான 2.2 லிட்டர் விஜிடி டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. அதிகப்பட்சமாக 197 பிஎச்பி மற்றும் 440 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த டீசல் என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஸ்போர்ட்மேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

கியா கார்னிவல் காருக்கு தீபாவளி சலுகைகள் அறிவிப்பு!! ரூ.2.5 லட்சம் வரையில் தள்ளுபடிகளை பெறலாம்

இந்த ஆண்டு துவக்கத்தில் 2020 ஆட்டோ எக்ஸ்போவின் மூலமாக இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட கியா கார்னிவலின் ஆரம்ப விலை ரூ.24.95 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் இதன் டாப் லிமௌசைன் வேரியண்ட் ரூ.33.95 லட்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

Most Read Articles

மேலும்... #கியா #kia motors
English summary
Kia Carnival MPV offered with benefits upto Rs.2.5 lakh.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X