கியா சொனெட் எஸ்யூவி அறிமுகம்... அட இத, இதத்தானே எதிர்பார்த்து காத்திருக்கிறோம்!

வாடிக்கையாளர் மத்தியில் அதிக ஆவலை ஏற்படுத்தி உள்ள, புதிய சொனெட் எஸ்யூவி அறிமுகத்தை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது கியா மோட்டார் நிறுவனம். அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

கியா சொனெட் எஸ்யூவி அறிமுகம்... இந்த செய்தியைத்தானே எதிர்பார்த்தோம்!

காம்பேக்ட் ரக எஸ்யூவி மாடல்களுக்கு இந்தியாவில் பெரும் வரவேற்பு இருந்து வருகிறது. இந்த ரகத்தில் பல மாடல்கள் போட்டி போட்டு வரும் நிலையில், வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த தேர்வு வாய்ப்புகள் கிடைத்துள்ளது.

கியா சொனெட் எஸ்யூவி அறிமுகம்... இந்த செய்தியைத்தானே எதிர்பார்த்தோம்!

கியா மோட்டார் நிறுவனத்தின் செல்டோஸ் எஸ்யூவி சூப்பர் ஹிட் அடித்துள்ள நிலையில், அடுத்து சொனெட் எஸ்யூவியும் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அருமையான வடிவமைப்பு, நவீன தொழில்நுட்ப வசதிகள், சரியான விலை போன்றவற்றை மனதில் வைத்து, இந்த காரின் வருகையை எதிர்பார்த்து பண்டிகை காலத்தில் புதிய கார் வாங்க இருப்போர் காத்திருக்கின்றனர்.

கியா சொனெட் எஸ்யூவி அறிமுகம்... இந்த செய்தியைத்தானே எதிர்பார்த்தோம்!

இந்த நிலையில், தொடர்ந்து சொனெட் எஸ்யூவி மீதான ஆவலை அதிகரிக்கும் விதத்தில், டீசர்கள் வெளியிடப்பட்டு இருக்கின்றன. மேலும், வரும் ஆகஸ்ட் 7ந் தேதி புதிய கியா சொனெட் எஸ்யூவி உலக அளவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட உள்ளது. அன்றைய தினமே இந்தியாவில் முன்பதிவு துவங்கப்படும் என்று தெரிகிறது.

கியா சொனெட் எஸ்யூவி அறிமுகம்... இந்த செய்தியைத்தானே எதிர்பார்த்தோம்!

இந்த நிலையில், இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் புதிய சொனெட் எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதை கியா மோட்டார் நிறுவனம் உறுதி செய்துள்ளது. அதாவது, செப்டம்பரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கியா சொனெட் எஸ்யூவி அறிமுகம்... இந்த செய்தியைத்தானே எதிர்பார்த்தோம்!

கியா மோட்டார் நிறுவனத்தின் பாரம்பரிய டிசைன் அம்சங்களுடன் இந்த கார் நவீன யுக மாடலாக இருக்கும். புலிமூக்கு வடிவிலான க்ரில் அமைப்பு, நேர்த்தியான க்ரில் அமைப்பு காரின் முகப்பு வசீகரத்திற்கு வலு சேர்க்கும்.

கியா சொனெட் எஸ்யூவி அறிமுகம்... இந்த செய்தியைத்தானே எதிர்பார்த்தோம்!

இந்த காரில் 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற இருக்கிறது. அத்துடன், யுவோ கனெக்டெட் கார் தொழில்நுட்பமும் வழங்கப்படும்.

கியா சொனெட் எஸ்யூவி அறிமுகம்... இந்த செய்தியைத்தானே எதிர்பார்த்தோம்!

இந்த தொழில்நுட்பம் மூலமாக காரில் இருக்கும் இன்ஃபோடெயின்மென்ட் நேரடி இணைய வசதியுடன் உரிமையாளரின் ஸ்மார்ட்ஃபோனுடன் நேரடி இணைப்பில் இருக்கும். காரின் பல்வேறு வசதிகளை ஸ்மார்ட்ஃபோனிலிருந்தே கட்டுப்படுத்தலாம்.

கியா சொனெட் எஸ்யூவி அறிமுகம்... இந்த செய்தியைத்தானே எதிர்பார்த்தோம்!

கியா சொனெட் காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் கொடுக்கப்படும். அதேபோன்று, மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளிலும் வர இருக்கிறது.

கியா சொனெட் எஸ்யூவி அறிமுகம்... இந்த செய்தியைத்தானே எதிர்பார்த்தோம்!

ரூ.7 லட்சம் ஆரம்ப விலையில் புதிய கியா சொனெட் எஸ்யூவி எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி 300, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் உள்ளிட்ட மாடல்களுடன் போட்டி போடும். காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் மிகச் சிறந்த தேர்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles

English summary
Kia has confirmed that it will launch Sonet SUV by festive season this year.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X