டாடா, மஹிந்திராவை ஓவர்டேக் செய்த கியா... இந்தியாவின் 3-வது பெரிய கார் நிறுவனமாக மாறியது!

கடந்த மாதம் கார் விற்பனையில் மஹிந்திரா, டாடாவை பின்னுக்குத் தள்ளி இந்தியாவின் 3வது பெரிய கார் நிறுவனம் என்ற பெருமையை கியா மோட்டார்ஸ் பெற்றிருக்கிறது.

டாடா, மஹிந்திராவை ஓவர்டேக் செய்த கியா... இந்தியாவின் 3-வது பெரிய நிறுவனமாக மாறியது!

தென்கொரியாவை சேர்ந்த கியா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் கார் வர்த்தகத்தை துவக்கியது. முதல் மாடலாக வந்த செல்டோஸ் கார் விற்பனையில் சக்கை போடு போடுகிறது. இந்தியாவில் எதிர்பாராத அளவிற்கு செல்டோஸ் காரின் விற்பனை அமைந்துள்ளது.

டாடா, மஹிந்திராவை ஓவர்டேக் செய்த கியா... இந்தியாவின் 3-வது பெரிய நிறுவனமாக மாறியது!

மாதத்திற்கு மாதம் கியா செல்டோஸ் காரின் விற்பனை அதிகரித்து வந்த நிலையில், கடந்த ஜனவரி மாதம் 15,450 செல்டோஸ் கார்கள் விற்பனையாகி அசத்தியது. இதனால், ஒரே கார் மாடலை வைத்து இந்தியாவின் டாப் -5 கார் நிறுவனங்களின் பட்டியலில் நுழைந்தது கியா மோட்டார்ஸ்.

டாடா, மஹிந்திராவை ஓவர்டேக் செய்த கியா... இந்தியாவின் 3-வது பெரிய நிறுவனமாக மாறியது!

இந்த நிலையில், கடந்த மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் தனது இரண்டாவது மாடலாக கார்னிவல் எம்பிவி காரை கியா மோட்டார்ஸ் களமிறக்கியது. இந்த காரின் டெலிவிரி பணிகளும் கடந்த மாதம் பிற்பாதியில் துவங்கப்பட்டன. செல்டோஸ், கார்னிவல் கார்களின் விற்பனையின் மூலமாக கியா மோட்டார்ஸ் இந்திய கார் மார்க்கெட்டில் மிக முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

டாடா, மஹிந்திராவை ஓவர்டேக் செய்த கியா... இந்தியாவின் 3-வது பெரிய நிறுவனமாக மாறியது!

அதாவது, மாருதி சுஸுகி, ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனங்களுக்கு அடுத்து விற்பனையில் இந்தியாவின் மூன்றாவது பெரிய கார் நிறுவனம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. கடந்த மாதம் மொத்தமாக 15,644 கார்களை கியா மோட்டார்ஸ் விற்பனை செய்துள்ளது.

டாடா, மஹிந்திராவை ஓவர்டேக் செய்த கியா... இந்தியாவின் 3-வது பெரிய நிறுவனமாக மாறியது!

அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கும் செய்திக் குறிப்பில், கடந்த மாதம் 14,024 செல்டோஸ் எஸ்யூவிகளையும், 1,620 கார்னிவல் கார்களையும் கடந்த பிப்ரவரியில் விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

டாடா, மஹிந்திராவை ஓவர்டேக் செய்த கியா... இந்தியாவின் 3-வது பெரிய நிறுவனமாக மாறியது!

மஹிந்திரா மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி மிக குறுகிய காலத்தில் இந்தியாவின் மூன்றாவது பெரிய கார் நிறுவனம் என்ற பெருமையை கடந்த மாதம் பெற்றிருக்கிறது கியா மோட்டார்ஸ்.

டாடா, மஹிந்திராவை ஓவர்டேக் செய்த கியா... இந்தியாவின் 3-வது பெரிய நிறுவனமாக மாறியது!

இந்த சூழலில், தனது வர்த்தகத்தை ஸ்திரமாக கொண்டு செல்ல ஏதுவாக புதிய கார் மாடல்களை கொண்டு வருவதற்கும் கியா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. அதன்படி, வரும் பண்டிகை காலத்தில் சொனெட் என்ற புதிய காம்பேக்ட் எஸ்யூவி மாடலை கியா மோட்டார்ஸ் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கிறது.

டாடா, மஹிந்திராவை ஓவர்டேக் செய்த கியா... இந்தியாவின் 3-வது பெரிய நிறுவனமாக மாறியது!

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியின் அடிப்படையில் இந்த புதிய சொனெட் காம்பேக்ட் எஸ்யூவி உருவாக்கப்பட்டு இருக்கிறது. ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியின் எஞ்சின் தேர்வுகள்தான் இதிலும் பயன்படுத்தப்படும். இந்த மாடலும் வாடிக்கையாளர் மத்தியில் அதிக ஆவலை ஏற்படுத்தி உள்ளது.

Most Read Articles
மேலும்... #கியா #kia motors
English summary
Kia Motor India, wholly owned subsidiary of Kia Motors Corporation, has gained the position of India’s third largest auto manufacturer.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X