என்ன இப்படி டவுன் ஆயிருச்சு... 'டல்' அடிக்கும் கியா செல்டோஸ் கார் விற்பனை... ஓஹோ இதுதான் காரணமா?

இந்தியாவில் கியா செல்டோஸ் காரின் விற்பனை மிக கடுமையான சரிவை சந்தித்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

என்ன இப்படி டவுன் ஆயிருச்சு... 'டல்' அடிக்கும் கியா செல்டோஸ் கார் விற்பனை... ஓஹோ இதுதான் காரணமா?

இந்திய சந்தையில் அதிக கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்களின் பட்டியலில் சமீப காலமாக ஒவ்வொரு மாதமும் டாப்-4 இடத்திற்குள் கியா வந்து விடுகிறது. இதற்கு கியா நிறுவனத்தின் செல்டோஸ் மற்றும் சொனெட் ஆகிய இரண்டு கார்கள்தான் முக்கியமான காரணம். இதில், கியா செல்டோஸ் எஸ்யூவி கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு வந்தது.

என்ன இப்படி டவுன் ஆயிருச்சு... 'டல்' அடிக்கும் கியா செல்டோஸ் கார் விற்பனை... ஓஹோ இதுதான் காரணமா?

இந்திய சந்தையில் கியா நிறுவனத்தின் முதல் தயாரிப்பு இதுதான். விற்பனைக்கு வந்த உடனேயே ஹூண்டாய் கிரெட்டாவை வீழ்த்தி தனது செக்மெண்ட்டில் அதிகம் விற்பனையாகும் கார் என்ற பெருமையை கியா செல்டோஸ் பெற்றது. ஆனால் புதிய தலைமுறை மாடலின் அறிமுகத்திற்கு பின் மீண்டும் ஹூண்டாய் கிரெட்டா விற்பனை பட்டியலில் முதலிடத்திற்கு வந்தது எல்லாம் தனிக்கதை.

என்ன இப்படி டவுன் ஆயிருச்சு... 'டல்' அடிக்கும் கியா செல்டோஸ் கார் விற்பனை... ஓஹோ இதுதான் காரணமா?

புதிய தலைமுறை ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி கடந்த மார்ச் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதன்பின் கியா செல்டோஸ் எஸ்யூவியின் விற்பனை கொஞ்சம் 'டல்' அடிக்கிறது. இருந்தாலும் ஒவ்வொரு மாதமும் மிக சிறப்பான விற்பனை எண்ணிக்கையை கியா செல்டோஸ் பதிவு செய்ய தவறுவதில்லை.

என்ன இப்படி டவுன் ஆயிருச்சு... 'டல்' அடிக்கும் கியா செல்டோஸ் கார் விற்பனை... ஓஹோ இதுதான் காரணமா?

கியா நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் 9,205 செல்டோஸ் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த எண்ணிக்கை 14,005 ஆக இருந்தது. இது 34 சதவீத வீழ்ச்சியாகும். விற்பனையில் சரிவை கண்டிருக்கும் அதே நேரத்தில், அதிகம் விற்பனையாகும் கியா நிறுவன கார்களின் பட்டியலில் செல்டோஸ் இரண்டாவது இடத்தை மட்டுமே பிடித்துள்ளது.

என்ன இப்படி டவுன் ஆயிருச்சு... 'டல்' அடிக்கும் கியா செல்டோஸ் கார் விற்பனை... ஓஹோ இதுதான் காரணமா?

விற்பனைக்கு வந்தது முதல் கியா சொனெட் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்து வருவது இதற்கு முக்கியமான காரணமாக உள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் விற்பனைக்கு வந்த கியா சொனெட், மிகவும் சவால் நிறைந்த சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் முழுமையாக ஆதிக்கம் செலுத்த தொடங்கியுள்ளது.

என்ன இப்படி டவுன் ஆயிருச்சு... 'டல்' அடிக்கும் கியா செல்டோஸ் கார் விற்பனை... ஓஹோ இதுதான் காரணமா?

மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் ஹூண்டாய் வெனியூ போன்ற இந்த செக்மெண்ட்டின் முக்கியமான கார்களுக்கு மிக வலுவான போட்டியாளராக கியா சொனெட் உருவெடுத்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் கியா நிறுவனம் 11,417 சொனெட் கார்களை கியா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இது உண்மையிலேயே மிகவும் சிறப்பான விற்பனை எண்ணிக்கைதான்.

என்ன இப்படி டவுன் ஆயிருச்சு... 'டல்' அடிக்கும் கியா செல்டோஸ் கார் விற்பனை... ஓஹோ இதுதான் காரணமா?

இந்த சிறப்பான விற்பனை எண்ணிக்கை மூலமாக கடந்த நவம்பர் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கியா நிறுவன கார் என்ற பெருமையை சொனெட் தனதாக்கியுள்ளது. இது நடப்பாண்டுதான் விற்பனைக்கு வந்த கார் என்பதால், கடந்த 2019ம் ஆண்டு நவம்பருடன் கியா சொனெட்டின் விற்பனை எண்ணிக்கையை ஒப்பிட முடியாது.

என்ன இப்படி டவுன் ஆயிருச்சு... 'டல்' அடிக்கும் கியா செல்டோஸ் கார் விற்பனை... ஓஹோ இதுதான் காரணமா?

கடந்த நவம்பர் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட கியா நிறுவன கார்களின் பட்டியலில் மூன்றாவது மற்றும் கடைசி இடத்தை கார்னிவல் பிடித்துள்ளது. கடந்த நவம்பர் மாதம் 400 கார்னிவல் கார்களை கியா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற 2020 ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த பிரீமியம் எம்பிவி காரும் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

என்ன இப்படி டவுன் ஆயிருச்சு... 'டல்' அடிக்கும் கியா செல்டோஸ் கார் விற்பனை... ஓஹோ இதுதான் காரணமா?

ஒட்டுமொத்தமாக கியா நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் 21,022 கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் இந்த எண்ணிக்கை வெறும் 14,005 ஆக மட்டுமே இருந்தது. இது 50 சதவீத வளர்ச்சியாகும். தற்போதைய நிலையில் செல்டோஸ், சொனெட், கார்னிவல் ஆகிய மூன்று கார்களை மட்டுமே கியா நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Kia Motors Model Wise Sales November 2020. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X