வைரஸ் பிறந்த ஊரிலிருந்தே வரவிருக்கும் பாதுகாப்பு உபகரணங்கள்.. மக்களை கொரோனாவில் இருந்து காக்க அதிரடி

கொரோனா வைரஸிடம் இருந்து மக்களைக் காப்பதற்காக சீனாவில் தயார் செய்யப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் விரைவில் உலக நாடுகள் பலவற்றிற்கு அனுப்பி வைக்கப்பட இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

வைரஸ் பிறந்த ஊரிலிருந்தே வரவிருக்கும் பாதுகாப்பு உபகரணங்கள்.. மக்களை கொரோனாவிடம் இருந்து காக்க அதிரடி..

உலகையே ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸின் பிறப்பிடமாக சீனாவின் வுஹான் நகரம் கருதப்படுகின்றது. இங்குதான் இந்த வைரஸ் தொற்று முதன் முதலில் கண்டறிப்பட்டது. ஆனால், இப்போது சீனாவில் வைரஸ் தொற்று கட்டுக்குள் வர ஆரம்பித்துள்ளது. ஆனால், உலக நாடுகள் பலவற்றில் இந்த வைரஸ் அதிகரிக்க தொடங்கியிருக்கின்றது.

வைரஸ் பிறந்த ஊரிலிருந்தே வரவிருக்கும் பாதுகாப்பு உபகரணங்கள்.. மக்களை கொரோனாவிடம் இருந்து காக்க அதிரடி..

நாள்தோறும் ஆயிரம் கணக்கானோர் இந்த வைரஸால் உயிரிழந்து வரும் அதேவேலையில், லட்சக் கணக்கானோர் தொற்றுடையவர்களாக கண்டறியப்பட்டு வருகின்றனர்.

உலக நாடுகளின் இந்த நிலைக்கு சீனாதான் காரணம் என பல வல்லரசு நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன.

வைரஸ் பிறந்த ஊரிலிருந்தே வரவிருக்கும் பாதுகாப்பு உபகரணங்கள்.. மக்களை கொரோனாவிடம் இருந்து காக்க அதிரடி..

குறிப்பாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இத்தகைய குற்றச்சாட்டைதான் முன் வைத்து வருகின்றார். மேலும், கொரோனா வைரஸை சீனா வைரஸ் என்றும் வுஹான் வைரஸ் என்றும் டுவிட்டரில் குறிப்பிட்டு வருகின்றார்.

ஆனால், சீனாவோ இதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என குற்றச்சாட்டுகள் அனைத்தையும் திட்டவட்டமாக நிராகரித்து வருகின்றது.

வைரஸ் பிறந்த ஊரிலிருந்தே வரவிருக்கும் பாதுகாப்பு உபகரணங்கள்.. மக்களை கொரோனாவிடம் இருந்து காக்க அதிரடி..

இருப்பினும், உலக நாடுகள் பல சீனாவின் பயோவார் வெப்பன் ஆராய்ச்சியினாலயே இத்தகைய நிலை ஏற்பட்டிருப்பதாக கருத்துகள் முன் வைக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறு, சீனாவை மையப்படுத்தி பல குற்றச்சாட்டுகள் எழந்து வருகின்ற வேலையில், அந்நாட்டிலிருந்து வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கான உபகரணங்கள் உலக நாடுகள் பலவற்றிற்கு விநியோகம் செய்ய ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வைரஸ் பிறந்த ஊரிலிருந்தே வரவிருக்கும் பாதுகாப்பு உபகரணங்கள்.. மக்களை கொரோனாவிடம் இருந்து காக்க அதிரடி..

இந்த பாதுகாப்பு உபகரண தயாரிப்பு பணியில் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான கியாவும் இணைய இருக்கின்றது. கியா ஒர் தென்கொரியாவைச் சேர்ந்த வாகன உற்பத்தி நிறுவனம் ஆகும். இது, சீனாவில் இயக்கி வரும் தனது தொழிற்சாலையில் பாதுகாப்பு உபகரணமாக மாஸ்க் போன்றவற்றை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இம்மாதிரியான நடவடிக்கையை களமிறங்குவதில் கியா இரண்டாவது இடத்தைப் பிடிக்கின்றது.

வைரஸ் பிறந்த ஊரிலிருந்தே வரவிருக்கும் பாதுகாப்பு உபகரணங்கள்.. மக்களை கொரோனாவிடம் இருந்து காக்க அதிரடி..

ஏனென்றால், இதேபோல ஓர் அறிவிப்பை ஃபியட் க்ரிஸ்லர் வாகன உற்பத்தி நிறுவனம் அண்மையில் அறிவித்திருந்தது. ஆசிய கண்டத்தில் இயங்கும் அதன் அனைத்து தயாரிப்பு ஆலைகளிலும் மாதம் ஒன்றிற்கு மில்லியன் மாஸ்க்குகளை உற்பத்தி செய்ய இருப்பதாக அறிவித்தது. இதைத்தொடர்ந்து, சீன அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திய கியா, அதன் யான்செங் உற்பத்தியாலையில் வைத்து மாஸ்க் உள்ளிட்டவற்றை தயாரிக்க அனுமதி பெற்றிருக்கின்றது.

வைரஸ் பிறந்த ஊரிலிருந்தே வரவிருக்கும் பாதுகாப்பு உபகரணங்கள்.. மக்களை கொரோனாவிடம் இருந்து காக்க அதிரடி..

ஆனால், இந்த மாஸ்க்குகள் எப்போது விற்பனைக்கு வரும் என்ற தகவல் வெளியிடப்படவில்லை. இருப்பினும், வைரஸ் பரவியதாக கருதப்படும் சீனாவில் இருந்து விரைவில் உலக நாடுகள் பலவற்றிற்கு பாதுகாப்பு உபகரணங்கள் விநியோகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

வைரஸ் பிறந்த ஊரிலிருந்தே வரவிருக்கும் பாதுகாப்பு உபகரணங்கள்.. மக்களை கொரோனாவிடம் இருந்து காக்க அதிரடி..

அதேசமயம், கியா நிறுவனம் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக அதன் உற்பத்தியாலைகள் இயக்கத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. குறிப்பாக, அமெரிக்காவில் இருக்கும் ஜார்ஜியா பிளாண்ட் மற்றும் இந்தியா உற்பத்தியாலைகள் உள்ளிட்டவற்றை அது முற்றிலுமாக முடக்கியுள்ளது. இதற்கு கொரோனா வைரஸ் பரவலின் அதி தீவிரமே முக்கியமாக காரணமாக இருக்கின்றது.

வைரஸ் பிறந்த ஊரிலிருந்தே வரவிருக்கும் பாதுகாப்பு உபகரணங்கள்.. மக்களை கொரோனாவிடம் இருந்து காக்க அதிரடி..

குறிப்பாக, நேற்று ஒரே நாளில் உலகளவில் சுமார் 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை நேற்று உலகம் முழுவதும் 22 ஆயிரமாக இருந்த நிலையில், இன்று அது 24 ஆயிரமாக அதிகரித்துள்ளது. அதாவது 24,065 பேர் இதுவரை உலகம் முழுவதும் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பிறந்த ஊரிலிருந்தே வரவிருக்கும் பாதுகாப்பு உபகரணங்கள்.. மக்களை கொரோனாவிடம் இருந்து காக்க அதிரடி..

மேலும், தற்போது கொரோனா பரவாத உலக நாடுகளே இல்லை என்ற சூழல் உருவாகியிருக்கின்றது. ஏனென்றால், கொரோனாவின் தொற்று தற்போது உலகில் உள்ள 199 நாடுகளிலும் பரவி காணப்படுகின்றது. தொடர்ந்து, இதில் பாதித்தோரின் எண்ணிக்கையும் 5,31,609ஆக உயர்ந்துள்ளது. இதேபோன்று, உலகம் உழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 1,23,391 பேர் குணமடைந்துள்ளனர்.

வைரஸ் பிறந்த ஊரிலிருந்தே வரவிருக்கும் பாதுகாப்பு உபகரணங்கள்.. மக்களை கொரோனாவிடம் இருந்து காக்க அதிரடி..

கொரோனா உயிரிழப்பில் இத்தாலி முதலிடத்திலும் ஸ்பெயின் 2வது இடத்திலும், சீனா 3வது இடத்திலும், அமெரிக்கா 4வது இடத்திலும் உள்ளது. இத்தாலியில் 8,215, ஸ்பெயினில் 4,365, சீனாவில் 3,287, அமெரிக்காவில் 1,293 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பிறந்த ஊரிலிருந்தே வரவிருக்கும் பாதுகாப்பு உபகரணங்கள்.. மக்களை கொரோனாவிடம் இருந்து காக்க அதிரடி..

இதேபோன்று, இந்தியாவிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 694 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 17 ஆக உள்ள நிலையில் 45 பேர் குணமடைந்திருப்பதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. அதேசமயம், இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 724ஆக உயர்ந்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, March 27, 2020, 13:55 [IST]
English summary
Kia Motors Plans To Make Face Masks At China Factory. Read In Tamil.
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+