நாலு கால் பாய்ச்சலில் செல்லும் கியா செல்டோஸ்... விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டு அசத்தல்!

புத்தாண்டு மிகச் சிறப்பான துவக்கத்தை கியா செல்டோஸ் எஸ்யூவிக்கு அளித்துள்ளது. புத்தாண்டு துவங்கிய முதல் மாதமே, கியா செல்டோஸ் எஸ்யூவி விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டு அசத்தி இருக்கிறது.

நாலு கால் பாய்ச்சலில் செல்லும் கியா செல்டோஸ்... விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டு அசத்தல்!

தென்கொரியாவை சேர்ந்த கியா மோட்டார்ஸ் நிறுவனம் செல்டோஸ் எஸ்யூவியுடன் இந்தியாவில் கால் பதித்தது. கடந்த ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட கியா செல்டோஸ் எஸ்யூவி வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது.

நாலு கால் பாய்ச்சலில் செல்லும் கியா செல்டோஸ்... விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டு அசத்தல்!

விற்பனையிலும் மாதத்திற்கு மாதம் புதிய உச்சங்களை தொட்டு அசத்தி வருகிறது. கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் ஆண்டு கடைசி என்பதால் விற்பனை குறைந்தது. இந்த நிலையில், புத்தாண்டு துவக்கமே அமர்க்களமாக அமைந்துள்ளது.

நாலு கால் பாய்ச்சலில் செல்லும் கியா செல்டோஸ்... விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டு அசத்தல்!

கடந்த மாதம் 15,450 செல்டோஸ் எஸ்யூவி கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதன்மூலமாக கியா செல்டோஸ் எஸ்யூவியின் விற்பனை புதிய உச்சத்தை தொட்டு அசத்தி இருக்கிறது. மேலும், எஸ்யூவி கார் மார்க்கெட்டில் முதன்மையான மாடலாகவும் தன்னை தொடர்ந்து முன்னிறுத்தி வருகிறது.

நாலு கால் பாய்ச்சலில் செல்லும் கியா செல்டோஸ்... விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டு அசத்தல்!

அறிமுகம் செய்யப்பட்டது முதல் இதுவரை 62,000க்கும் மேற்பட்ட கியா செல்டோஸ் எஸ்யூவி கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. வாடிக்கையாளர் மத்தியில் தொடர்ந்து மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருவதற்கு பல முக்கிய காரணங்கள் உள்ளன.

நாலு கால் பாய்ச்சலில் செல்லும் கியா செல்டோஸ்... விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டு அசத்தல்!

கியா செல்டோஸ் காரின் டிசைன் இந்தியர்களை சுண்டி இழுத்து வருகிறது. அமர்க்களமான டிசைன் அம்சங்கள் எல்லோரையும் கவர்ந்துவிடுகிறது. அத்துடன், எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்வேளை விளக்குகள், எல்இடி பனி விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இரண்டு புகைப்போக்கி குழல் அமைப்பும் இதன் முக்கிய அம்சமாக உள்ளது.

நாலு கால் பாய்ச்சலில் செல்லும் கியா செல்டோஸ்... விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டு அசத்தல்!

கியா செல்டோஸ் காரில் 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 8 ஸ்பீக்கர்கள் கொண்ட போஸ் சவுண்ட் சிஸ்டம், 8 அங்குல ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே ஆகியவை இந்த காரின் மிக முக்கிய அம்சங்களாக இருக்கும்.

நாலு கால் பாய்ச்சலில் செல்லும் கியா செல்டோஸ்... விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டு அசத்தல்!

இந்த காரில் ஸ்மார்ட் ஏர் பியூரிஃபயர் சிஸ்டம், புஷ் பட்டன் ஸ்டார்ட், வென்டிலேட்டட் இருக்கைகள், ஆம்பியன்ட் மூட் லைட் சிஸ்டம், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன.

நாலு கால் பாய்ச்சலில் செல்லும் கியா செல்டோஸ்... விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டு அசத்தல்!

புதிய கியா செல்டோஸ் காரில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான மூன்று எஞ்சின் தேர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 115 பிஎஸ் பவரையும், 144 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 140 பிஎஸ் பவரையும், 242 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

நாலு கால் பாய்ச்சலில் செல்லும் கியா செல்டோஸ்... விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டு அசத்தல்!

இதுதவிர்த்து, இந்த காரில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வும் வழங்கப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 115 பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் இந்த எஞ்சின்கள் கிடைப்பதும் வாடிக்கையாளர்களை கவர்ந்த விஷயமாக இருக்கிறது.

நாலு கால் பாய்ச்சலில் செல்லும் கியா செல்டோஸ்... விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டு அசத்தல்!

கியா செல்டோஸ் கார் ரூ.9.89 லட்சம் ஆரம்ப விலையில் கிடைப்பதும் வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறப்பான அம்சமாக உள்ளது. விரைவில் வர இருக்கும் புதிய ஹூண்டாய் க்ரெட்டா, எம்ஜி ஹெக்டர், டாடா ஹாரியர் எஸ்யூவி கார்களுக்கு இது போட்டியாக இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Monday, February 3, 2020, 10:47 [IST]
English summary
South Korean car maker, Kia Motors has sold 15,450 units Seltos in January, 2020.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+