கியா செல்டோஸ் காரின் விலை குறைவான வேரியண்ட்டுகளில் கூடுதல் வசதிகள் அறிமுகம்!

கியா செல்டோஸ் காரின் விலை குறைவான வேரியண்ட்டுகளில் கூடுதல் வசதிகள் சேர்க்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கூடுதல் வசதிகள் குறித்த விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

கியா செல்டோஸ் காரின் விலை குறைவான வேரியண்ட்டுகளில் கூடுதல் வசதிகள் அறிமுகம்!

இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி மாடல் என்ற பெருமையை மிக குறுகிய காலத்தில் பெற்றுவிட்டது கியா செல்டோஸ். டிசைனாகட்டும், தொழில்நுட்ப வசதிகளாகட்டும், விலையாகட்டும், அனைத்திலும் மிகச் சிறந்த மதிப்பை இந்த கார் வழங்கி வருகிறது.

கியா செல்டோஸ் காரின் விலை குறைவான வேரியண்ட்டுகளில் கூடுதல் வசதிகள் அறிமுகம்!

இந்த மதிப்பை உயர்த்தும் வகையில் கியா செல்டோஸ் காரின் வேரியண்ட்டுகளில் கூடுதல் சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. கூடுதலாக 10 விதமான புதிய வசதிகளுடன் இந்த கார் வந்துள்ளது.

கியா செல்டோஸ் காரின் விலை குறைவான வேரியண்ட்டுகளில் கூடுதல் வசதிகள் அறிமுகம்!

அதன்படி, செல்டோஸ் காரில் எமெர்ஜென்சி ஸ்டாப் சிக்னல், சில்வர் பூச்சுடன் அலங்கார பாகங்கள், இரட்டை வண்ண சன்ரூஃப் ஆப்ஷன், புதிய ஆரஞ்ச் மற்றும் வெள்ளை வண்ண கூரையுடன் இரட்டை வண்ணத் தேர்வு, 7 கூடுதல் வசதிகளை வழங்கும் யுவோ கனெக்ட்டிவிட்டி செயலி ஆகியவை முக்கியமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கியா செல்டோஸ் காரின் விலை குறைவான வேரியண்ட்டுகளில் கூடுதல் வசதிகள் அறிமுகம்!

தற்போது எமெர்ஜென்ஸி ஸ்டாப் சிக்னல் மற்றும் பின் இருக்கை பயணிகளுக்கான யுஎஸ்பி சார்ஜர் வசதிகளானது கியா செல்டோஸ் காரின் அனைத்து வேரியண்ட்டுகளிலும் வழங்கப்படுகிறது. ஸ்மார்ட் கீ மூலமாக ரிமோட் முறையில் எஞ்சினை ஸ்டார்ட் செய்யும் வசதி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட அனைத்து வேரியண்ட்டுகளிலும் இனி கிடைக்கும்.

கியா செல்டோஸ் காரின் விலை குறைவான வேரியண்ட்டுகளில் கூடுதல் வசதிகள் அறிமுகம்!

செல்டோஸ் காரின் நடுத்தர விலை கொண்ட HTX, HTX Plus, GTX, GTX Plus ஆகிய வேரியண்ட்டுகளில் யுவோ செயலியில் கூடுதலாக ஸ்மார்ட் வாட்ச்சை இணைத்துக் கொள்ளும் வசதி, கன்ட்ரோல் ஏர் பியூரிஃபயர், இந்திய விடுமுறை தினங்கள் குறித்த வாய் மொழி தகவல் அளிக்கும் வசதி, கிரிக்கெட் ஸ்கோர் குறித்த விபரங்களை பெறும் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளன.

கியா செல்டோஸ் காரின் விலை குறைவான வேரியண்ட்டுகளில் கூடுதல் வசதிகள் அறிமுகம்!

மேலும், இந்த வேரியண்ட்டுகளில் கூடுதலாக சில்வர் அலங்கார பாகங்கள், ஆரஞ்ச் மற்றும் வெள்ளை வண்ணக் கூரையுடன் இரட்டை வெளிப்புற வண்ணத் தேர்வு, இரட்டை வண்ணத்திலான சன்ரூஃப் மற்றும் இரட்டை புகைப்போக்கி குழல்கள் அமைப்பு ஆகியவை வழங்கப்படுகின்றன.

கியா செல்டோஸ் காரின் விலை குறைவான வேரியண்ட்டுகளில் கூடுதல் வசதிகள் அறிமுகம்!

கியா செல்டோஸ் கார் டெக் லைன் மற்றும் ஜிடி லைன் ஆகிய இரண்டு விதமான மாடல்களில் பல்வேறு விதமான வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. இந்த காரில் வழங்கப்படும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 114 பிஎச்பி பவரையும், 144 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 138 பிஎச்பி பவரையும், 242 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

கியா செல்டோஸ் காரின் விலை குறைவான வேரியண்ட்டுகளில் கூடுதல் வசதிகள் அறிமுகம்!

டீசல் மாடலில் இருக்கும் 1.5 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 114 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். மூன்று எஞ்சின் தேர்வுகளிலுமே மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

கியா செல்டோஸ் காரின் விலை குறைவான வேரியண்ட்டுகளில் கூடுதல் வசதிகள் அறிமுகம்!

கியா செல்டோஸ் காரின் உயர் வேரியண்ட்டுகளில் கிடைத்த வசதிகள் தற்போது விலை குறைவான வேரியண்ட்டுகளிலும் வழங்கப்படுகிறது. இது கூடுதல் மதிப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கியா செல்டோஸ் கார் ரூ.9.89 லட்சம் முதல் ரூ.17.34 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. ஆரம்ப விலையில் மாற்றம் இல்லை என்பது வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக அமைந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, June 1, 2020, 15:20 [IST]
English summary
Kia Motors India has launched the 2020 Seltos SUV with a host of new updates and added equipment. The new (2020) Kia Seltos now comes with a host of updates to both its exterior and interior, along with the addition of new safety equipment and connected technology as well.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+