மயிரிழையில் 2020 பாதுக்காப்பான கார் விருதை இழந்த கியா செல்டோஸ்... காரில் இதுதான் வீக்கா...?

அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்டு வரும் கியா செல்டோஸ் க்ராஸ்ஓவர் மாடல் நெடுஞ்சாலை பாதுகாப்பு காப்பீட்டு நிறுவனத்தால் சமீபத்தில் விபத்து மற்றும் பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் தெரிய வந்துள்ள சுவாரஸ்யமான விஷயங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

மயிரிழையில் 2020 பாதுக்காப்பான கார் விருதை இழந்த கியா செல்டோஸ்... காரில் இதுதான் வீக்கா...?

தென்கொரியாவை சேர்ந்த கியா மோட்டார்ஸ் இந்திய சந்தையில் செல்டோஸ் எஸ்யூவி கார் மூலம் நுழைந்தது. கியா நிறுவனம் எதிர்பார்த்ததை போலவே வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுவரும் செல்டோஸ் இதற்கு முன்பும் பல்வேறு விதமான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

மயிரிழையில் 2020 பாதுக்காப்பான கார் விருதை இழந்த கியா செல்டோஸ்... காரில் இதுதான் வீக்கா...?

இந்த வகையில் தற்போது ஈடுப்படுத்தப்பட்டுள்ள சோதனையில் செல்டோஸ் கார்களை ஓட்டுனர் மற்றும் பயணிகளின் பக்கங்களில் ஒன்றுடன் ஒன்று மோத செய்தும், சற்று குறைவான வேகத்தில் எதிரெதிர் மோத செய்தும், பக்கவாட்டு மற்றும் மேற்கூரை பகுதிகளின் வலிமையை சோதனை செய்தும் உள்ளனர்.

மயிரிழையில் 2020 பாதுக்காப்பான கார் விருதை இழந்த கியா செல்டோஸ்... காரில் இதுதான் வீக்கா...?

இதில் வாகனத்துடன் வாகனம் மோத செய்தலிலும், பயணிகள் மீது வாகனத்தை மோத செய்தலிலும் சிறப்பான மதிப்பெண்களை செல்டோஸ் பெற்றுள்ளது. செல்டோஸ் கார்களில் கேமிராவுடன் உள்ள கார் செயலிழப்பு தடுப்பு அமைப்பு மோதல்களின்போது சிறப்பாக செயல்பட்டதாக நெடுஞ்சாலை பாதுகாப்பு காப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

மயிரிழையில் 2020 பாதுக்காப்பான கார் விருதை இழந்த கியா செல்டோஸ்... காரில் இதுதான் வீக்கா...?

செல்டோஸின் விலை அதிகமான வேரியண்ட்கள் மோதல் தடுப்பு நடவடிகைகளுக்காக கேமிரா மற்றும் ரேடார் உடன் இந்த சோதனைகளில் பங்கேற்றன. வடிவத்தில் நல்ல மதிப்பெண்ணை பெற்றுள்ள செல்டோஸ் ஓட்டுனருக்கு பெரிய அளவிலான விபத்துகளை தடுப்பதிலும் அதிக மதிப்பெண்களையே பெற்றுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள வீடியோ இதோ...

இவ்வாறு பெரிய அளவிலான விபத்துகளை தடுப்பதில் சிறப்பாக செயல்பட்டாலும், செல்டோஸின் இதர பாகங்களின் தரம் குறிப்பிடப்படும் அளவில் இல்லை என நெடுஞ்சாலை காப்பீட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனால் தான் 2020 சிறந்த பாதுகாப்பு கார் என்ற விருதை செல்டோஸிற்கு வழங்க இந்நிறுவனம் மறுத்துள்ளது.

மயிரிழையில் 2020 பாதுக்காப்பான கார் விருதை இழந்த கியா செல்டோஸ்... காரில் இதுதான் வீக்கா...?

செல்டோஸில் ஹெட்லைட்கள் ஹாலோஜன் மற்றும் எல்இடி என இரு விதமான தேர்வுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் இவை இரண்டும் வளைவுகளில் திரும்பும்போது அவ்வளவு பிரகாசமான ஒளியை வெளிப்படுத்தவில்லை என பாதுகாப்பு நிறுவனம் கடுமையாக சாடியுள்ளது.

மயிரிழையில் 2020 பாதுக்காப்பான கார் விருதை இழந்த கியா செல்டோஸ்... காரில் இதுதான் வீக்கா...?

இதனால் தான் ஹெட்லைட் தரத்தில் ஏதாவது ஒரு சிறப்பான மதிப்பெண்ணை பெற்றிருந்தால் பாதுகாப்பிற்கான விருதிற்கு தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டிய கார் அத்தகைய கார்களுள் ஒன்றாக இடம் பெறவில்லை. இந்த சோதனைகளில் உட்படுத்தப்பட்டிருப்பது கியா செல்டோஸின் அமெரிக்க வெர்சன் தானே தவிர்த்து இந்திய வெர்சனின் சோதனை மதிப்பீடு தற்போது கிடைக்க பெறவில்லை.

மயிரிழையில் 2020 பாதுக்காப்பான கார் விருதை இழந்த கியா செல்டோஸ்... காரில் இதுதான் வீக்கா...?

இரு வெர்சன்களுக்கும் இடையே சில வேறுபாடுகள் உள்ளன. பாதுகாப்பு விஷயத்தில் முக்கியமானதாக அமெரிக்க வெர்சனுக்கு கூடுதல் தேர்வாக வழங்கப்படும் நெடுஞ்சாலை பாதுகாப்பு காப்பீட்டு நிறுவனத்தால் புகழப்பட்ட முன்புற மோதலை தடுக்கும் அமைப்பு நமது இந்திய வெர்சனுக்கு கொடுக்கப்படுவதில்லை.

மயிரிழையில் 2020 பாதுக்காப்பான கார் விருதை இழந்த கியா செல்டோஸ்... காரில் இதுதான் வீக்கா...?

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் செல்டோஸில் முக்கிய பாதுகாப்பு அம்சங்களாக 6 காற்றுப்பைகள், ஏபிஎஸ், ஹில் ஸ்டார்ட் அசிஸ்ட், எலக்ட்ரானிக் ஸ்டேபிளிட்டி கண்ட்ரோல், வாகன நிலைப்பாட்டு மேலாண்மை, டயரின் அழுத்தத்தை அளவிடும் அமைப்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகின்றன.

Most Read Articles

English summary
2021 Kia Seltos scores Top Rating in IIHS Crash Tests – But headlamps are poor
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X