கியா செல்டோஸ் காருக்கு எளிய கடன் திட்டங்கள் அறிமுகம்... முழு விபரம் உள்ளே!

கியா செல்டோஸ் காரை மிக எளிதாக வாங்கும் விதத்தில் சிறப்பு கடன் திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதன் விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

கியா செல்டோஸ் காருக்கு எளிய கடன் திட்டங்கள் அறிமுகம்!

கடந்த ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட கியா செல்டோஸ் கார் சூப்பர் ஹிட் எஸ்யூவி மாடலாக இருந்து வருகிறது. மேலும், கியா மோட்டார் நிறுவனத்தை இந்திய கார் சந்தையில் மிக முக்கிய போட்டியாளராக மாற்றி இருக்கிறது.

கியா செல்டோஸ் காருக்கு எளிய கடன் திட்டங்கள் அறிமுகம்!

இந்த நிலையில், கொரோனாவால் கார் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. இதிலிருந்து மீண்டு கார் விற்பனையை அதிகரிக்கும் விதத்தில், செல்டோஸ் காருக்கு சிறப்பு கடன் திட்டங்களை கியா மோட்டார் அறிமுகப்படுத்தி உள்ளது.

கியா செல்டோஸ் காருக்கு எளிய கடன் திட்டங்கள் அறிமுகம்!

கியா செல்டோஸ் காரை வாங்குவதற்கு திட்டம் போட்டு, பொருளாதார நெருக்கடியால் தள்ளி போட நினைப்பவர்களுக்கு எளிதான மாதத் தவணை, நீண்ட கால கடன் திட்டங்கள் வழங்கப்படுகின்றன.

கியா செல்டோஸ் காருக்கு எளிய கடன் திட்டங்கள் அறிமுகம்!

கியா செல்டோஸ் காருக்கு மிக குறைவான முன்பணத்துடன் கூடிய கடன் திட்டமும், முதல் சில மாதங்களுக்கு மிக குறைவான மாதத் தவணையை கட்டும் கடன் திட்டங்களும் வழங்கப்படுகின்றன. முதல் ஆறு மாதங்களுக்கு லட்சத்திற்கு ரூ.777 என்ற விகிதத்தில் மாதத் தவணை செலுத்தினால் போதுமானது. அதன் பிறகு வழக்கமான கணக்கீடுகளுக்கு உட்பட்ட மாத் தவணைக்கு மாறிக் கொள்ளலாம். இதனால், தற்போதைய நெருக்கடியை எளிதாக சமாளிக்கலாம்.

கியா செல்டோஸ் காருக்கு எளிய கடன் திட்டங்கள் அறிமுகம்!

வேலை இழப்பு மற்றும் சம்பள குறைப்பு அச்சத்தில் இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு மாதத் தவணை உறுதி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி, முதல் மூன்று மாதங்களுக்கு உடல் நல பிரச்னை, பொருளாதார பிரச்னைகளை சமாளிப்பதற்கு ஏதுவான இழப்பீடு பெற வழிவகுக்கும்.

கியா செல்டோஸ் காருக்கு எளிய கடன் திட்டங்கள் அறிமுகம்!

இதுதவிர்த்து, செல்டோஸ் காரின் ஆன்ரோடு விலையில் 100 சதவீதம் மாதத் தவணையாக செலுத்தும் திட்டமும் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்தின்படி, 8 ஆண்டுகள் மாதத் தவணையை திருப்பி செலுத்தும் கால அவகாசம் வழங்கப்படும்.

கியா செல்டோஸ் காருக்கு எளிய கடன் திட்டங்கள் அறிமுகம்!

மேலும், 3, 4 மற்றும் 5 ஆண்டுகள் கழித்து கியா செல்டோஸ் காரை டீலரிடம் திருப்பி விற்கும் வகையிலான Buy Back திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. காரின் விலையில் 55 முதல் 60 சதவீதத்தை திரும்ப பெறும் உறுதியுடன் இந்த திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி, ரூ.13,000 செலுத்தி காருக்கான தகுதி மற்றும் நம்பகத்தன்மை குறித்த சான்று பெற்று இந்த திட்டத்தை தேர்வு செய்யலாம். இதற்கு பல நிபந்தனைகளும் உள்ளது.

கியா செல்டோஸ் காருக்கு எளிய கடன் திட்டங்கள் அறிமுகம்!

கியா செல்டோஸ் காரின் டிசைன், எஞ்சின் தேர்வுகள் என அனைத்துமே வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது. வசதிகளிலும் போட்டியாளர்களை விஞ்சி நிற்கிறது. இந்த காரில் இன்டர்நெட் மூலமாக மொபைல்போன் மூலமாக காரின் பல முக்கிய விஷயங்களை கட்டுப்படுத்துவதற்கும், தகவல்களை பெறுவதற்கான வசதி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

கியா செல்டோஸ் காருக்கு எளிய கடன் திட்டங்கள் அறிமுகம்!

கியா செல்டோஸ் காரில் இரண்டு பெட்ரோல் எஞ்சின்கள் மற்றும் ஒரு டீசல் எஞ்சின் தேர்வு வழங்கப்படுகிறது. இதன் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 115 பிஎச்பி பவரையும், 144 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் 115 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 140 பிஎச்பி பவரையும், 242 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

கியா செல்டோஸ் காருக்கு எளிய கடன் திட்டங்கள் அறிமுகம்!

கியா செல்டோஸ் கார் ரூ.9.89 லட்சம் முதல் ரூ.17.34 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது. ஹூண்டாய் க்ரெட்டா காருக்கு நேர் போட்டியாக இருந்து வருகிறது.

Most Read Articles

English summary
The Kia Seltos is being offered with new finance offers this month by the company. This includes flexible EMI repayment scheme, a guaranteed buyback offer, an EMI protection plan, and long-term loans.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X