வெறும் 14 மாதங்களில் 1.25 லட்ச செல்டோஸ் கார்கள் இந்தியாவில் விற்பனை!! வேகமாக வளர்ச்சியை காணும் கியா

இதுவரை இந்தியாவில் 1.25 லட்ச செல்டோஸ் எஸ்யூவி கார்களை விற்பனை செய்துள்ளதாக கியா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

வெறும் 14 மாதங்களில் 1.25 லட்ச செல்டோஸ் கார்கள் இந்தியாவில் விற்பனை!! வேகமாக வளர்ச்சியை காணும் கியா

இந்திய சந்தைக்கு முற்றிலும் புதியதான தென் கொரியாவை சேர்ந்த கியா நிறுவனம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் செல்டோஸின் மூலம் இந்தியாவில் கால் பதித்தது. அதிலிருந்து பார்த்தோமேயானால், கியா நிறுவனம் செல்டோஸின் விற்பனையில் 1.25 லட்சம் என்ற மைல்கல்லை வெறும் 14 மாதங்களிலேயே எட்டியுள்ளது.

வெறும் 14 மாதங்களில் 1.25 லட்ச செல்டோஸ் கார்கள் இந்தியாவில் விற்பனை!! வேகமாக வளர்ச்சியை காணும் கியா

தற்சமயம் இந்நிறுவனத்தில் இருந்து செல்டோஸ் உள்பட கார்னிவல், சொனெட் என மூன்று மாடல்கள் நம் நாட்டில் விற்பனை செய்யப்பட்டாலும் செல்டோஸிற்கு தான் ஏகோபித்த வரவேற்பு தற்போது வரையில் கிடைத்து வருகிறது.

வெறும் 14 மாதங்களில் 1.25 லட்ச செல்டோஸ் கார்கள் இந்தியாவில் விற்பனை!! வேகமாக வளர்ச்சியை காணும் கியா

முன்னதாக ஜூன் மாதத்தில் சிறிய காஸ்மெட்டிக் அப்டேட்கள் மற்றும் புதிய வசதிகளுடன் செல்டோஸின் அப்டேட் வெர்சனை கியா நிறுவனம் சந்தையில் அறிமுகப்படுத்தி இருந்தது. மேம்படுத்தப்பட்ட செல்டோஸில் பாதுகாப்பு, சவுகரியம், இணைப்பு மற்றும் டிசைன் உள்ளிட்டவற்றில் இந்த எஸ்யூவி காரில் 10 புதிய அம்சங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.

வெறும் 14 மாதங்களில் 1.25 லட்ச செல்டோஸ் கார்கள் இந்தியாவில் விற்பனை!! வேகமாக வளர்ச்சியை காணும் கியா

மேலும் மாடலின் தரத்தை உயர்த்துவதற்காக கூடுதல் சாதனங்களை செல்டோஸின் விலை குறைவான வேரியண்ட்கள் ஏற்றுள்ளன. நீண்ட வேரியண்ட் வரிசையை கொண்ட கியா செல்டோஸிற்கு 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.4 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் சிஆர்டிஐ விஜிடி டீசல் என்ற மூன்று என்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

வெறும் 14 மாதங்களில் 1.25 லட்ச செல்டோஸ் கார்கள் இந்தியாவில் விற்பனை!! வேகமாக வளர்ச்சியை காணும் கியா

இதில் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 138 பிஎச்பி மற்றும் 242 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். அதுவே 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின்கள் முறையே 113 பிஎச்பி & 144 என்எம் டார்க் திறன் மற்றும் 113 பிஎச்பி & 250 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்துபவைகளாக உள்ளன.

வெறும் 14 மாதங்களில் 1.25 லட்ச செல்டோஸ் கார்கள் இந்தியாவில் விற்பனை!! வேகமாக வளர்ச்சியை காணும் கியா

ட்ரான்ஸ்மிஷனுக்கு 6-ஸ்பீடு மேனுவல், 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக், ஐவிடி மற்றும் 7-ஸ்பீடு டிசிடி என்ற கியர்பாக்ஸ் தேர்வுகளாக வழங்கப்படுகின்றன. செல்டோஸின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.9.89 லட்சத்தில் இருந்து ரூ.17.34 லட்சம் வரையில் உள்ளது. இந்த எஸ்யூவி காரில் தயாரிப்பு நிறுவனம் வழங்கும் யுவிஒ தொழிற்நுட்பம் போன்றவைகள் தான் இதன் இத்தகைய விற்பனைக்கு முக்கிய காரணம் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 11, 2020, 9:42 [IST]
English summary
Kia-seltos-sales-cross-1-25-lakh-units-details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+