எஸ்யூவி மார்க்கெட்டில் கியா செல்டோஸ் காரின் 'தர்பார்' !!

எஸ்யூவி மார்க்கெட்டில் கியா செல்டோஸ் கார் தர்பார் நடத்தி வருகிறது. இந்தநிலையில், முன்பதிவு இமாலய எண்ணிக்கையை கடந்து சாதனை படைத்துள்ளது.

எஸ்யூவி மார்க்கெட்டில் கியா செல்டோஸ் காரின் 'தர்பார்' !!

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட கியா செல்டோஸ் கார் விற்பனையில் பின்னி பெடலெடுத்து வருகிறது. கார் சந்தையே நிலைகுலைந்து போன வேளையில் வந்தாலும், தனக்கென தனி தர்பார் நடத்தி வருகிறது.

எஸ்யூவி மார்க்கெட்டில் கியா செல்டோஸ் காரின் 'தர்பார்' !!

அறிமுகம் செய்யப்பட்டு முதல் இரண்டு மாதங்களில் 50,000 புக்கிங்குகளை குவித்த கியா செல்டோஸ் எஸ்யூவி கார், அடுத்த மாதத்திலேயே 80,000 புக்கிங்குகளை கடந்து அதிசயிக்க வைத்தது. இந்த நிலையில், புத்தாண்டு பிறந்துள்ள இவ்வேளையில், கியா மோட்டார்ஸ் உற்சாகத்தை மேலும் ஒருபடி மேலே கொண்டு செல்லும் விதத்தில், முன்பதிவு எண்ணிக்கை ஒரு லட்சத்தை கடந்து சாதனை படைத்துள்ளது.

எஸ்யூவி மார்க்கெட்டில் கியா செல்டோஸ் காரின் 'தர்பார்' !!

மேலும், விற்பனையிலும் பல புதிய மைல்கல்லை தொட்டு விற்பனையில் இந்தியாவின் நம்பர்-1 எஸ்யூவி என்ற பெருமையை ஒரு சில மாதங்களில் பெற்றுள்ளது. கடந்த மாதம் மட்டும் ஆண்டு கடைசி என்பதை கருதி செல்டோஸ் காரின் உற்பத்தியை குறைத்ததால், விற்பனை 67 சதவீதம் குறைவாக இருந்தது.

எஸ்யூவி மார்க்கெட்டில் கியா செல்டோஸ் காரின் 'தர்பார்' !!

ஆனால், புத்தாண்டு பிறந்துள்ள இவ்வேளையில், கியா செல்டோஸ் காரின் விற்பனை மீண்டும் சூடுபிடிக்கும் என்று தெரிகிறது. எனினும், ஜனவரியில் விலை உயர்வை மனதில் வைத்தே, கியா நிறுவனம் செல்டோஸ் காரின் உற்பத்தியை குறைத்ததாகவும் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது.

எஸ்யூவி மார்க்கெட்டில் கியா செல்டோஸ் காரின் 'தர்பார்' !!

கியா செல்டோஸ் கார் இந்தளவுக்கு வரவேற்பை பெற்றதற்கு, அதன் அட்டகாசமான டிசைன், நவீன தொழில்நுட்ப சிறப்புகள், இடவசதி, விலை ஆகியவை காரணங்களாக கூறலாம். இந்த கார் ரூ.9.69 லட்சம் என்ற ஆரம்ப விலையில் வந்ததால், அதிகம் பேர் முண்டியடித்து முன்பதிவு செய்தனர்.

எஸ்யூவி மார்க்கெட்டில் கியா செல்டோஸ் காரின் 'தர்பார்' !!

அத்துடன், எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பனி விளக்குகள், அழகிய அலாய் வீல்கள், ரூஃப் ரெயில்கள், க்ரோம் பட்டைகள் அரணாக கொண்ட க்ரில் அமைப்பு, எல்இடி டெயில் லைட்டுகள், ஸ்கஃப் பிளேட்டுகள் என இதன் சிறப்புகளை அடுக்கிக் கொண்டே செல்ல முடியும்.

எஸ்யூவி மார்க்கெட்டில் கியா செல்டோஸ் காரின் 'தர்பார்' !!

உட்புறத்திலும் மிக அழகிய டிசைன் அமைப்புடன் கவர்கிறது. இந்த காரின் டேஷ்போர்டு மிக நேர்த்தியாக இருப்பதுடன், 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய பெரிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை உள்ளது. ஆன்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும். யுவோ கனெக்ட் செயலி மூலமாக 37 விதமான கட்டுப்பாட்டு வசதிகளையும் பெற முடியும்.

எஸ்யூவி மார்க்கெட்டில் கியா செல்டோஸ் காரின் 'தர்பார்' !!

கியா செல்டோஸ் கார் இரண்டு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் எஞ்சின் தேர்வுகளில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு நிகரானதாக கிடைக்கிறது. இந்த காரில் 115 பிஎச்பி பவரையும், 144 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 140 பிஎச்பி பவரையும், 242 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கிறது.

எஸ்யூவி மார்க்கெட்டில் கியா செல்டோஸ் காரின் 'தர்பார்' !!

டீசல் மாடலில் இருக்கும் 1.5 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 115 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். மூன்று எஞ்சின் தேர்வுகளிலுமே மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. டீசல் எஞ்சின் தேர்வுக்கு அதிக டிமான்ட் இருப்பதாக கியா மோட்டார்ஸ் தெரிவிக்கிறது.

எஸ்யூவி மார்க்கெட்டில் கியா செல்டோஸ் காரின் 'தர்பார்' !!

அறிமுக விலைச் சலுகையாக ரூ.9.69 லட்சம் முதல் ரூ.16.99 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு வந்தது. இந்த நிலையில், கடந்த 2ந் தேதி முதல் கியா செல்டோஸ் காரின் பேஸ் வேரியண்ட் விலை ரூ.20,000 வரையிலும், டாப் வேரியண்ட் விலை ரூ.35,000 வரையிலும் அதிகரிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

எஸ்யூவி மார்க்கெட்டில் கியா செல்டோஸ் காரின் 'தர்பார்' !!

கியா செல்டோஸ் காருக்கு கிடைத்திருக்கும் இமாலய வரவேற்பு கொடுத்திருக்கும் உற்சாகத்தை தொடர்ந்து, இரண்டாவது கார் மாடலாக கார்னிவல் எம்பிவி கார் மாடலை அடுத்த மாதம் நடக்க இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் வைத்து கியா மோட்டார்ஸ் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, January 4, 2020, 10:22 [IST]
English summary
The Kia Seltos has started its new year with a bang. The SUV has reached a milestone by crossing 1,00,000 units as far as bookings are concerned. The Seltos SUV became an overnight sensation when launched during August next year.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+