அட்ராசக்கை... கியா செல்டோஸ் கார் வேரியண்ட்டுகளில் அதிகரிக்கப்படும் வசதிகள்!

கியா செல்டோஸ் எஸ்யூவியின் வேரியண்ட்டுகளில் கூடுதல் வசதிகள் சேர்க்கப்பட உள்ளன. விரைவில் இந்த புதிய செல்டோஸ் வேரியண்ட்டுகள் விற்பனைக்கு வர உள்ளன.

அட்ராசக்கை... கியா செல்டோஸ் கார் வேரியண்ட்டுகளில் அதிகரிக்கப்படும் வசதிகள்!

கடந்த ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட கியா செல்டோஸ் கார் இந்தியர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. விற்பனையிலும் சூப்பர் ஹிட் மாடலாக இருந்து வருகிறது. கியா செல்டோஸ் காரின் வெற்றிக்கும் அதன் டிசைன், மூன்று விதமான எஞ்சின் தேர்வுகள், நான்குவிதமான கியர்பாக்ஸ் தேர்வுகள், நவீன தொழில்நுட்ப வசதிகள் முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.

அட்ராசக்கை... கியா செல்டோஸ் கார் வேரியண்ட்டுகளில் அதிகரிக்கப்படும் வசதிகள்!

கியா செல்டோஸ் கார் எஞ்சின், கியர்பாக்ஸ் மற்றும் வசதிகளை பொறுத்து 18 விதமான வேரியண்ட்டுகளில் கிடைக்கிறது. கியா செல்டோஸ் காரின் மதிப்பை கூட்டும் விதத்தில், அதன் வேரியண்ட்டுகளில் கூடுதல் வசதிகள் சேர்க்கப்பட உள்ளன.

MOST READ : பருவமழை காலம் வருதுங்க... உங்க வண்டி பத்திரம்!

அட்ராசக்கை... கியா செல்டோஸ் கார் வேரியண்ட்டுகளில் அதிகரிக்கப்படும் வசதிகள்!

கொரோனா பிரச்னைக்கு பிறகு அண்மையில்தான் ஆந்திர மாநிலம் அனந்த்பூரில் உள்ள கியா ஆலையில் உற்பத்தி துவங்கப்பட்டது. இந்த நிலையில், அங்கு உற்பத்தி 100 சதவீதம் என்ற இயல்பு நிலையை எட்டும்போது, கூடுதல் சிறப்பம்சங்களுடன் கியா செல்டோஸ் கார் வேரியண்ட்டுகள் உற்பத்தி செய்யப்பட உள்ளதாக ஆட்டோகார் இந்தியா தள செய்தி தெரிவிக்கிறது.

அட்ராசக்கை... கியா செல்டோஸ் கார் வேரியண்ட்டுகளில் அதிகரிக்கப்படும் வசதிகள்!

கியா செல்டோஸ் காரின் HTE வேரியண்ட்டை தவிர்த்து, பிற அனைத்து வேரியண்ட்டுகளிலும் கூடுதல் சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட உள்ளன. தற்போது HTX மற்றும் HTX+ ஆகிய வேரியண்ட்டுகளில் வழங்கப்படும் இரட்டை புகைப்போக்கி குழல்கள் கொண்ட பம்பர் அமைப்பு HTK வேரியண்ட்டிலும் வழங்கப்பட உள்ளதாம்.

அட்ராசக்கை... கியா செல்டோஸ் கார் வேரியண்ட்டுகளில் அதிகரிக்கப்படும் வசதிகள்!

அதேபோன்று, GTX மற்றும் GTX+ வேரியண்ட்டுகளில் வழங்கப்படும் மெட்டல் ஸ்கஃப் பிளேட்டுகள் இனி அதனைவிட விலை குறைவான HTX மற்றும் HTX+ வேரியண்ட்டுகளிலும் வழங்கப்பட உள்ளதாம். மேலும், HTX மற்றும் GTX வேரியண்ட்டுகளில் எலெக்ட்ரிக் சன்ரூஃப் வசதியும் இடம்பெற இருப்பதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.

அட்ராசக்கை... கியா செல்டோஸ் கார் வேரியண்ட்டுகளில் அதிகரிக்கப்படும் வசதிகள்!

கியா செல்டோஸ் காரின் அனைத்து வேரியண்ட்டுகளிலும் எமெர்ஜென்ஸி ஸ்டாப் சிக்னல் சிஸ்டம் நிரந்தர பாதுகாப்பு வசதியாக அளிக்கப்பட உள்ளது. அதேபோன்று, முன் இருக்கை மற்றும் இருக்கைகளுக்கு யுஎஸ்பி சார்ஜர் வசதி ஆகியவை வழங்கப்பட உள்ளன.

அட்ராசக்கை... கியா செல்டோஸ் கார் வேரியண்ட்டுகளில் அதிகரிக்கப்படும் வசதிகள்!

கியா செல்டோஸ் காரின் HTX, HTX+, GTX மற்றும் GTX+ ஆகிய வேரியண்ட்டுகளில் ஏசி கன்ட்ரோல் பேனல் மற்றும் கதவு கைப்பிடிகளில் உலோக பூச்சு போன்ற விசேஷ பூச்சுடன் அலங்காரமாக மாற்றம் செய்யப்பட உள்ளது. லெதர் உறை போன்று தோற்றமளிக்கும் பூச்சுடன் கியர் லிவர், பியானோ பிளாக் என்ற விசேஷ கருப்பு பூச்சுடன் டேஷ்போர்டு ஆகியவற்றுடன் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

அட்ராசக்கை... கியா செல்டோஸ் கார் வேரியண்ட்டுகளில் அதிகரிக்கப்படும் வசதிகள்!

கியா செல்டோஸ் GTX+ டாப் வேரியண்ட்டில் முழுவதுமான கருப்பு வண்ண இன்டீரியர் தீம் கொடுக்கப்பட உள்ளது. சிவப்பு வண்ண தையல் வேலைப்பாடுகளுடன் அலங்கரமாக இருக்கும். HTK+, HTX, HTX+ மற்றும் GTX ஆகிய வேரியண்ட்டுகளின் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் ரிமோட் முறையில் எஞ்சினை ஸ்டார் செய்வதற்கான வசதியும் சேர்க்கப்பட உள்ளது.

அட்ராசக்கை... கியா செல்டோஸ் கார் வேரியண்ட்டுகளில் அதிகரிக்கப்படும் வசதிகள்!

கூடுதல் வசதிகள் கொண்ட கியா செல்டோஸ் வேரியண்ட்டுகள் அடுத்த ஓரிரு மாதங்களில் ஷோரூம்களுக்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோன்று, நிச்சயம் விலை உயர்வும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அட்ராசக்கை... கியா செல்டோஸ் கார் வேரியண்ட்டுகளில் அதிகரிக்கப்படும் வசதிகள்!

கியா செல்டோஸ் காரில் இருக்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 115 பிஎச்பி பவரையும், 144 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இதன் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 115 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் மாடலானது 140 பிஎச்பி பவரையும், 242 என்எம் டார்க் திறனையும் வழங்கும் அனைத்து வேரியண்ட்டுகளிலும் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றஉம் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.

More from DriveSpark

Article Published On: Thursday, May 28, 2020, 13:28 [IST]
English summary
The Kia Seltos is about to receive a few feature upgrades across its long list of variants. It will be receiving new updates to both interior and exterior of the SUV. With all the new upgrades the prices are expected to be increased slightly as well.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+