இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்த போகும் கியா கார்... ஒரே நாளில் இவ்வளவு முன்பதிவுகளா? அடேங்கப்பா...

கியா சொனெட் காம்பேக்ட் எஸ்யூவி காருக்கு முன்பதிவு குவிந்து வருகிறது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்த போகும் கியா கார்... ஒரே நாளில் இவ்வளவு முன்பதிவுகளா? அடேங்கப்பா...

கியா மோட்டார்ஸ் நிறுவனம் செல்டோஸ் எஸ்யூவி ரக காரை கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிமுகம் செய்ததன் மூலம், இந்திய சந்தையில் காலடி எடுத்து வைத்தது. அதன்பின் நடப்பாண்டு தொடக்கத்தில் கியா கார்னிவல் எம்பிவி ரக கார் விற்பனைக்கு வந்தது. இந்த இரண்டு கார்களும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்த போகும் கியா கார்... ஒரே நாளில் இவ்வளவு முன்பதிவுகளா? அடேங்கப்பா...

குறிப்பாக கியா செல்டோஸ் எஸ்யூவிக்கு உச்சகட்ட வரவேற்பு கிடைத்துள்ளது. விற்பனைக்கு வந்து சுமார் 1 ஆண்டு மட்டுமே ஆகியுள்ள நிலையில், சாலைகளில் கியா செல்டோஸ் எஸ்யூவிக்களை தற்போது சர்வ சாதாரணமாக காண முடிகிறது. இத்தனைக்கும் கியா நிறுவனம் இந்திய சந்தைக்கு புதியது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்த போகும் கியா கார்... ஒரே நாளில் இவ்வளவு முன்பதிவுகளா? அடேங்கப்பா...

இந்த வரவேற்புகளுக்கு மத்தியில், கியா நிறுவனம் இந்திய சந்தையில் தனது மூன்றாவது தயாரிப்பை களம் இறக்க தயாராகி விட்டது. சொனெட் என பெயர் சூட்டப்பட்டுள்ள அந்த தயாரிப்பு, சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார் ஆகும். மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஆகிய கார்களுக்கு கியா சொனெட் கடும் போட்டியை கொடுக்கவுள்ளது.

இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்த போகும் கியா கார்... ஒரே நாளில் இவ்வளவு முன்பதிவுகளா? அடேங்கப்பா...

மேலும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காருக்கும், கியா சொனெட் வில்லனாக அமையும். இந்தியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கியா சொனெட் காம்பேக்ட் எஸ்யூவி, கடந்த ஆகஸ்ட் 7ம் தேதி வெளியிடப்பட்டது. இதன் கவர்ச்சிகரமான டிசைன், தொழில்நுட்ப வசதிகள், இன்ஜின் தேர்வுகள் வாடிக்கையாளர்களை சுண்டி இழுக்கும் வகையில் உள்ளன.

இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்த போகும் கியா கார்... ஒரே நாளில் இவ்வளவு முன்பதிவுகளா? அடேங்கப்பா...

கியா சொனெட் கார் வாடிக்கையாளர்களை எவ்வளவு கவர்ந்துள்ளது? என்பது முன்பதிவுகளில் எதிரொலிக்க தொடங்கியுள்ளது. ஆம், கியா சொனெட் காம்பேக்ட் எஸ்யூவிக்கு தற்போது முன்பதிவுகள் தொடங்கியுள்ளன. சொனெட் காருக்கான முன்பதிவுகளை கியா நிறுவனம் நேற்று (ஆகஸ்ட் 20) முதல் அதிகாரப்பூர்வமாக ஏற்க தொடங்கியுள்ளது.

இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்த போகும் கியா கார்... ஒரே நாளில் இவ்வளவு முன்பதிவுகளா? அடேங்கப்பா...

கியா நிறுவனத்தின் டீலர்ஷிப்கள் வாயிலாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவே சொனெட் காரை நீங்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பணமாக 25 ஆயிரம் செலுத்த வேண்டும். செல்டோஸ் காரை போல், கியா சொனெட் காம்பேக்ட் எஸ்யூவிக்கும் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சகட்ட வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்த போகும் கியா கார்... ஒரே நாளில் இவ்வளவு முன்பதிவுகளா? அடேங்கப்பா...

புக்கிங் தொடங்கப்பட்ட வெறும் 24 மணி நேரத்தில், சொனெட் காருக்கு கியா நிறுவனம் 6,523 முன்பதிவுகளை பெற்றுள்ளது. கொரோனா வைரஸ் பிரச்னையால் பொருளாதார ரீதியிலான சவால்களை பலரும் சந்தித்து வருவதால், தற்போது கார் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அப்படிப்பட்ட ஒரு சூழலில், ஒரே நாளில் கியா சொனெட் இவ்வளவு முன்பதிவுகளை பெற்றிருப்பது ஆச்சரியம்தான்.

இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்த போகும் கியா கார்... ஒரே நாளில் இவ்வளவு முன்பதிவுகளா? அடேங்கப்பா...

இத்தனைக்கும் கியா சொனெட் காரின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. விலை சரியாக நிர்ணயம் செய்யப்பட்டால், இந்திய சந்தையை கியா சொனெட் நிச்சயமாக ஒரு கலக்கு கலக்கும். ஆந்திர பிரதேச மாநிலம் ஆனந்த்ப்பூரில் உள்ள கியா நிறுவனத்தின் ஆலையில், சொனெட் எஸ்யூவியின் உற்பத்தி பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்த போகும் கியா கார்... ஒரே நாளில் இவ்வளவு முன்பதிவுகளா? அடேங்கப்பா...

தீபாவளி பண்டிகை காலத்தை குறிவைத்து கியா சொனெட் எஸ்யூவி மிக விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்படவுள்ளது. கியா சொனெட் கார் 5 சீட்டர் மாடலாக வரவுள்ளது. இதன் நீளம் 3,995 மில்லி மீட்டர் ஆகவும், அகலம் 1,790 மில்லி மீட்டர் ஆகவும், உயரம் 1,647 மில்லி மீட்டர் ஆகவும், வீல்பேஸ் 2,500 மில்லி மீட்டர் ஆகவும் இருக்கும்.

இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்த போகும் கியா கார்... ஒரே நாளில் இவ்வளவு முன்பதிவுகளா? அடேங்கப்பா...

கியா சொனெட் காம்பேக்ட் எஸ்யூவி காரின் க்ரவுண்ட் க்ளியரன்ஸ் 211 மில்லி மீட்டர். இதன் பூட் ஸ்பேஸ் 392 லிட்டர்கள். அத்துடன் 45 லிட்டர் கொள்ளளவு கொண்ட எரிபொருள் டேங்க் வழங்கப்பட்டுள்ளது. சொனெட் காரின் ஆரம்ப விலை 7 லட்ச ரூபாயாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே சமயம் டாப் வேரியண்ட்டின் விலை 13 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்படலாம்.

இந்தியாவில் புரட்சியை ஏற்படுத்த போகும் கியா கார்... ஒரே நாளில் இவ்வளவு முன்பதிவுகளா? அடேங்கப்பா...

இவை எதிர்பார்க்கப்படும் எக்ஸ் ஷோரூம் விலையாகும். சொனெட் காரின் விலை குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதையும் கியா தற்போது வரை வெளியிடவில்லை. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் சமயத்தில்தான் விலை அறிவிக்கப்படும். எனினும் இதுதான் கியா நிறுவனத்தின் விலை குறைவான தயாரிப்பாக இருக்கும்.

Most Read Articles

English summary
Kia Sonet Compact SUV Records Over 6,500 Bookings In Just 24 Hours. Read in Tamil
Story first published: Friday, August 21, 2020, 21:17 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X