பெங்களூருவில் கியா சொனேட் காம்பெக்ட்-எஸ்யூவி சோதனை ஓட்டம்..!

செல்டோஸ் எஸ்யூவி மூலம் இந்திய சந்தையில் அறிமுகமான கியா மோட்டார்ஸ் தனது அடுத்த இந்திய மாடலாக கார்னிவல் எம்பிவியை சமீபத்தில் நடைபெற்ற 2020 ஆட்டோ எக்ஸ்போவின் மூலம் சந்தைக்கு கொண்டு வந்தது.

பெங்களூருவில் கியா சொனேட் காம்பெக்ட்-எஸ்யூவி சோதனை ஓட்டம்..!

இந்நிலையில் ஆட்டோ எக்ஸ்போவில் கார்னிவல் எம்பிவியுடன் காட்சிக்கு வைக்கப்பட்ட காம்பெக்ட் எஸ்யூவி மாடலான சொனேட் கார் பெங்களூருவில் பொது சாலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டது போது நமது தளத்தின் ஆட்டோமோட்டிவ் பாப்பராஸி என்பவரால் அடையாளம் காணப்பட்டுள்ளது.

பெங்களூருவில் கியா சொனேட் காம்பெக்ட்-எஸ்யூவி சோதனை ஓட்டம்..!

முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ள இந்த கியா சொனேட் மாடலின் அறிமுகம் இந்த வருட இறுதியில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாயின் வென்யூ மாடலை ஒத்து தோற்றமளிக்கும் சொனேட் கார் கியா மோட்டார்ஸின் முதல் காம்பெக்ட்-எஸ்யூவி மாடலாக இந்தியாவில் வெளியாகவுள்ளது.

பெங்களூருவில் கியா சொனேட் காம்பெக்ட்-எஸ்யூவி சோதனை ஓட்டம்..!

தற்போதைய சோதனை ஓட்ட புகைப்படங்களின் மூலம் இதன் விற்பனை மாடலில் வழங்கப்படவுள்ள டிசைன் பாகங்களை பற்றி பெரிய அளவில் எதுவும் அறிய முடியவில்லை. ஆனால் புதிய சொனேட் எஸ்யூவியில் ஏகப்பட்ட ப்ரீமியம் வசதிகளையும் தொழிற்நுட்பங்களையும் கியா மோட்டார்ஸ் வழங்கி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெங்களூருவில் கியா சொனேட் காம்பெக்ட்-எஸ்யூவி சோதனை ஓட்டம்..!

ஒருங்கிணைந்த எல்இடி டிஆர்எல்களுடன் உள்ள ஹெட்லைட்ஸ், புலியின் மூக்கு வடிவில் க்ரில், எல்இடியில் டெயில்லைட்ஸ், ஸ்டைலிஷான டிசைனில் அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவை இந்த எஸ்யூவி காரில் எதிர்பார்க்கப்படும் அம்சங்களாகும்.

பெங்களூருவில் கியா சொனேட் காம்பெக்ட்-எஸ்யூவி சோதனை ஓட்டம்..!

உட்புறத்தில் UVO இணைப்பு வசதியுடன் உள்ள பெரிய அளவிலான தொடுத்திரை இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், லெதரால் மூடப்பட்ட ஸ்டேரிங் சக்கரம் போன்றவற்றை கியா சொனேட் பெற்றிருக்கும் என கூறப்பட்டு வருகிறது.

பெங்களூருவில் கியா சொனேட் காம்பெக்ட்-எஸ்யூவி சோதனை ஓட்டம்..!

தோற்றம் மட்டுமில்லாமல் என்ஜின் மற்றும் ட்ரான்ஸ்மிஷன் தேர்வுகளையும் ஹூண்டாய் வென்யூவிடம் இருந்து இந்த எஸ்யூவி கார் பகிர்ந்து கொண்டுள்ளது. அதாவது இரு பெட்ரோல் மற்றும் ஒரு டீசல் என்ஜின் தேர்வுகளை சொனேட் எஸ்யூவி கார் பெறவுள்ளது.

பெங்களூருவில் கியா சொனேட் காம்பெக்ட்-எஸ்யூவி சோதனை ஓட்டம்..!

பிஎஸ்6 தரத்திற்கு இணக்கமாக அப்டேட் செய்யப்பட்ட நிலையில் காரில் பொருத்தப்படவுள்ள இந்த மூன்று என்ஜினில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் 83 பிஎச்பி பவரையும், மற்றொரு 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு என்ஜின் 123 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டவை.

பெங்களூருவில் கியா சொனேட் காம்பெக்ட்-எஸ்யூவி சோதனை ஓட்டம்..!

இதன் டீசல் வேரியண்ட் காரில் செல்டோஸ் எஸ்யூவியின் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்படவுள்ளது. ஆனால் இந்த டீசல் என்ஜின் சொனேட் மாடலில் சிறிது ட்யூன் செய்யப்பட்டு பொருத்தப்படவுள்ளது. இதனால் என்ஜின் காருக்கு வழங்கும் ஆற்றல் அளவுகளில் வித்தியாசம் ஏற்படலாம்.

பெங்களூருவில் கியா சொனேட் காம்பெக்ட்-எஸ்யூவி சோதனை ஓட்டம்..!

இந்த மூன்று என்ஜின் தேர்வுகளுடனும் நிலையான 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் வழங்கப்படவுள்ளன. 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் மட்டும் கூடுதலாக ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் தேர்வையும் பெறவுள்ளது.

பெங்களூருவில் கியா சொனேட் காம்பெக்ட்-எஸ்யூவி சோதனை ஓட்டம்..!

இந்திய சந்தையில் காம்பெக்ட் எஸ்யூவி பிரிவில் நிலைநிறுத்தப்படவுள்ள சொனேட் எஸ்யூவியின் ஆரம்ப விலை எக்ஸ்ஷோரூமில் ரூ.7 லட்சம் அளவில் நிர்ணயிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. அறிமுகத்திற்கு பிறகு இந்த புதிய கியா மாடல் காருக்கு மற்ற காம்பெக்ட் எஸ்யூவி மாடல்களான ஹூண்டாய் வென்யூ, டாடா நெக்ஸான், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 உள்ளிட்டவை விற்பனை போட்டியினை அளிக்கவுள்ளன.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 25, 2020, 16:48 [IST]
English summary
Kia Sonet Compact-SUV Spied Testing In Bangalore Ahead Of Launch: Spy Pics & Details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+