இந்திய சந்தையை அதகளப்படுத்த அடுத்து ஒரு பட்ஜெட் எஸ்யூவி... கியா மோட்டார்ஸ் அதிரடி!

கியா சொனெட் காம்பேக்ட் எஸ்யூவியின் கான்செப்ட் மாடல் ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. படங்கள், கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய காம்பேக்ட் எஸ்யூவியுடன் இந்திய சந்தையை அதகளப்படுத்தப்போகும் கியா மோட்டார்ஸ்!

கியா செல்டோஸ் காருக்கு அபரிமிதமான வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், அடுத்து அதனைவிட விலை குறைவான காம்பேக்ட் எஸ்யூவி மாடலை கியா மோட்டார்ஸ் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது. கியா சொனெட் என்ற பெயரிலான இந்த கான்செப்ட் எஸ்யூவி ஹூண்டாய் வெனியூ காரின் பல முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொள்ள இருக்கிறது.

புதிய காம்பேக்ட் எஸ்யூவியுடன் இந்திய சந்தையை அதகளப்படுத்தப்போகும் கியா மோட்டார்ஸ்!

கியா சொனெட் கான்செப்ட் எஸ்யூவி 4 மீட்டருக்கும் குறைவான நீளத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் கியா நிறுவனத்தின் பாரம்பரிய க்ரில் அமைப்பு, எல்இடி ஹெட்லைட்டுகள், பகல்நேர விளக்குகளுடன் வசீகரிக்கிறது. வலிமையான தோற்றத்தை தரும் அலாய் வீல்கள், கச்சிதமான பின்புறம், எல்இடி டெயில் லைட்டுகள் இடம்பெற்றுள்ளன.

புதிய காம்பேக்ட் எஸ்யூவியுடன் இந்திய சந்தையை அதகளப்படுத்தப்போகும் கியா மோட்டார்ஸ்!

ஹூண்டாய் வெனியூ காரில் பயன்படுத்தப்படும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின், 1.4 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் இந்த எஸ்யூவியில் வழங்கப்படும். இந்த எஞ்சின்களுடன் மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

புதிய காம்பேக்ட் எஸ்யூவியுடன் இந்திய சந்தையை அதகளப்படுத்தப்போகும் கியா மோட்டார்ஸ்!

இந்த காரில் 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், யுவோ கனெக்ட்டிவிட்டி செயலி, நேரடி இன்டர்நெட் வசதி, போஸ் ஆடியோ சிஸ்டம் ஆகிய அம்சங்களுடன் இந்த காம்பேக்ட் எஸ்யூவி வாடிக்கையாளர்களை வசியம் செய்யும்.

புதிய காம்பேக்ட் எஸ்யூவியுடன் இந்திய சந்தையை அதகளப்படுத்தப்போகும் கியா மோட்டார்ஸ்!

கியா சொனெட் எஸ்யூவி கான்செப்ட் மாடலாக இருந்தாலும், இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் தயாரிப்பு நிலை மாடலாக விற்பனைக்கு கொண்டு வரப்படும். ரூ.7 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய காம்பேக்ட் எஸ்யூவியுடன் இந்திய சந்தையை அதகளப்படுத்தப்போகும் கியா மோட்டார்ஸ்!

புதிய கியா சொனெட் எஸ்யூவி கார் இந்தியாவில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஆகிய கார்களுடன் போட்டி போடும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 5, 2020, 12:15 [IST]
English summary
Kia Sonet Concept unveiled at the Auto Expo 2020. Kia Motors India has unveiled the concept version of its upcoming compact-SUV offering for the Indian market, the Sonet. The Kia Sonet will be the latest product offering from the brand after the launch of the Carnival MPV.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+