கொரோனா எஃபெக்ட்... கியா சொனெட் எஸ்யூவி அறிமுகம் தள்ளிப் போகிறது!

கொரோனா பிரச்னையால் கியா சொனெட் எஸ்யூவியின் விற்பனைக்கு கொண்டு வரும் திட்டம் ஒத்தி வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

கொரோனா எஃபெக்ட்... கியா சொனெட் எஸ்யூவி அறிமுகம் தள்ளிப் போகிறது!

கொரோனா ஏற்படுத்தியுள்ள பொருளாதார சூழல்கள் நீண்ட காலத்திற்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளன. மக்களின் இயல்பு நிலையை முற்றிலும் முடக்கி உள்ளதோடு, பொருளாதார ரீதியிலும் பெரும் பிரளயத்தை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா எஃபெக்ட்... கியா சொனெட் எஸ்யூவி அறிமுகம் தள்ளிப் போகிறது!

இந்த நிலையில், வாகன உற்பத்தி நிறுவனங்களும் கொரோனா தாக்கத்தால் தங்களது எதிர்கால திட்டங்களில் மாறுதல் செய்து வருகின்றன. குறிப்பாக, கார் நிறுவனங்கள் தங்களது புதிய கார் அறிமுக திட்டங்களை ஒத்திப்போட்டு வருகின்றன.

கொரோனா எஃபெக்ட்... கியா சொனெட் எஸ்யூவி அறிமுகம் தள்ளிப் போகிறது!

அந்த வகையில், பெரிதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய கியா சொனெட் எஸ்யூவி காரின் அறிமுகம் தள்ளி வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதன்படி, வரும் ஆகஸ்ட் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட இருந்த கியா சொனெட் எஸ்யூவி வரும் அக்டோபர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட உள்ளதாக ரஷ்லேன் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனா எஃபெக்ட்... கியா சொனெட் எஸ்யூவி அறிமுகம் தள்ளிப் போகிறது!

கடந்த பிப்ரவரி மாதம் கிரேட்டர் நொய்டாவில் நடந்த சர்வதேச ஆட்டோமொபைல் கண்காட்சியில், கியா சொனெட் எஸ்யூவி கான்செப்ட் நிலையில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்தது. அப்போதே, பலரும் இந்த எஸ்யூவி மீது கண் வைக்க துவங்கினர்.

கொரோனா எஃபெக்ட்... கியா சொனெட் எஸ்யூவி அறிமுகம் தள்ளிப் போகிறது!

பெரும் வெற்றியை பெற்றிருக்கும் கியா செல்டோஸ் எஸ்யூவியின் மினியேச்சர் மாடல் போன்று வரும் என்ற எதிர்பார்ப்பே இதற்கு காரணம். இருப்பினும், குறிப்பிடத்தக்க மாறுதல்களுடன் இந்த புதிய கியா சொனெட் எஸ்யூவி வர இருக்கிறது.

கொரோனா எஃபெக்ட்... கியா சொனெட் எஸ்யூவி அறிமுகம் தள்ளிப் போகிறது!

மேலும், ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டு இருந்த கான்செப்ட் மாடல் கிட்டத்தட்ட தயாரிப்பு நிலைக்கு மாடலுக்கு ஒத்திருப்பதாகவே கருதப்படுகிறது. இதனால், சிறிய அளவிலான மாற்றங்களுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

கொரோனா எஃபெக்ட்... கியா சொனெட் எஸ்யூவி அறிமுகம் தள்ளிப் போகிறது!

இந்த காம்பேக்ட் எஸ்யூவியில் தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், யுவோ கனெக்டெட் கார் செயலி, ரிமோட் முறையில் பல்வேறு வசதிகளை பெறுவதற்கான வாய்ப்புகளுடன் இந்த கார் வாடிக்கையாளர்களை கவரும்.

கொரோனா எஃபெக்ட்... கியா சொனெட் எஸ்யூவி அறிமுகம் தள்ளிப் போகிறது!

ஹூண்டாய் வெனியூ எஸ்யூவியின் அடிப்படையில்தான் கியா சொனெட் உருவாக்கப்பட்டு இருக்கிறது. எனவே, எஞ்சின் தேர்வுகள் இரண்டு மாடலிலும் ஒன்று போல்தான் இருக்கும். அதன்படி, கியா சொனெட் எஸ்யூவியில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின், 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் எதிர்பார்க்கப்படுகிறது. மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் வரும்.

கொரோனா எஃபெக்ட்... கியா சொனெட் எஸ்யூவி அறிமுகம் தள்ளிப் போகிறது!

வரும் தீபாவளி பண்டிகையை ஒட்டி புதிய கியா செல்டோஸ் எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் மற்றும் மஹிந்திரா எக்ஸ்யூவி300 ஆகிய மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

Most Read Articles
English summary
According to report, KIA is planning to postpone the Sonet SUV launch in India by later this year.
Story first published: Tuesday, April 7, 2020, 19:18 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X