செல்டோஸிற்கு இணையான உட்புற வசதிகளுடன் கியா சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி...

வருகிற ஆகஸ்ட் 7ஆம் தேதி உலகளாவிய அறிமுகத்தை காணவுள்ள கியா சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி மாடல் தொடர் சோதனை ஓட்டங்களில் ஈடுப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில் தற்போது மீண்டும் சோதனையில் உட்படுத்தப்பட்டுள்ள இதன் ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

செல்டோஸிற்கு இணையான உட்புற வசதிகளுடன் கியா சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி...

இந்தியன் ஆட்டோ செய்தி தளம் வெளியிட்டுள்ள இந்த ஸ்பை படங்களின் மூலம் காரின் உட்புற தோற்றமும் வெளிவந்துள்ளது. இதன்படி பார்க்கும் சில பாகங்கள் செல்டோஸில் இருந்து பகிர்ந்து கொடுக்கப்பட்டிருப்பது நமக்கு பார்த்தவுடனே தெரிய வருகிறது. பல செயல்பாடுகளை கொண்ட ஸ்டேரிங் சக்கரம் தட்டையாகவும் தாழ்வாகவும் வழங்கப்பட்டுள்ளது.

செல்டோஸிற்கு இணையான உட்புற வசதிகளுடன் கியா சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி...

இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் உள்ளிட்டவை பார்வைக்கு தெரியாதப்படி மறைக்கப்பட்டுள்ளன. செல்டோஸ் மாடலுடன் ஒத்த தளவமைப்பை பெற்றுள்ள கியா சொனெட்டின் உட்புறம் ஆனது சில்வர் நிறங்களுடன் புத்துணர்ச்சியான டிசைனில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

செல்டோஸிற்கு இணையான உட்புற வசதிகளுடன் கியா சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி...

இதில் செங்குத்தான ஏசி வெண்ட்ஸ், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல் மற்றும் எளிமையான மைய கன்சோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இந்த பாகங்களுக்கு ஏற்றவாறு டேஸ்போர்டு மிகவும் பெரியதாகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையில் ஈடுப்படுத்தப்பட்டிருப்பது கியா சொனெட்டின் ஜிடி லைன் ஆகும்.

செல்டோஸிற்கு இணையான உட்புற வசதிகளுடன் கியா சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி...

இது காரின் ஸ்டேரிங் சக்கரத்தில் பொருத்தப்பட்டுள்ள முத்திரையை பார்க்கும்போது தெரிய வருகிறது. அதேபோல் கியர் லிவர் இது டிசிடி ஆட்டோமேட்டிக் வேரியண்ட் என்பதையும் வெளிக்காட்டுகிறது. ஜிடி லைன் பெட்ரோல் ஆட்டோமேட்டிக் தான் இந்த காம்பெக்ட் எஸ்யூவி காரின் டாப் வேரியண்ட் ஆகும்.

செல்டோஸிற்கு இணையான உட்புற வசதிகளுடன் கியா சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி...

ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் வென்யூ மாடலுடன் ப்ளாட்ஃபாரத்தை பகிர்ந்து கொண்டுள்ள இந்த கியா மாடல் பெரும்பான்மையான கூறுகளையும் பகிர்ந்து கொண்டது மட்டுமில்லாமல் என்ஜின் தேர்வுகளையும் ஏற்று கொண்டுள்ளது.

செல்டோஸிற்கு இணையான உட்புற வசதிகளுடன் கியா சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி...

இந்த வகையில் சொனெட் மாடலில் பொருத்தப்படவுள்ள 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 82 பிஎச்பி மற்றும் 114 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். மற்றொரு என்ஜின் தேர்வான 1.5 லிட்டர் டீசல்99 பிஎச்பி மற்றும் 240 என்எம் டார்க் திறனை அதிகப்பட்சமாக காருக்கு வழங்கக்கூடியது.

செல்டோஸிற்கு இணையான உட்புற வசதிகளுடன் கியா சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி...

இவற்றுடன் 118 பிஎச்பி பவரை வழங்கக்கூடிய 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜினும் தேர்வாக கொடுக்கப்படவுள்ளது. இவற்றில் பெட்ரோல் ட்ரான்ஸ்மிஷனும், மற்ற இரு என்ஜின் தேர்வுகளுடனும் 6-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷனும் இணைக்கப்படவுள்ளன.

செல்டோஸிற்கு இணையான உட்புற வசதிகளுடன் கியா சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி...

டர்போ பெட்ரோல் என்ஜினிற்கு மட்டும் கூடுதல் தேர்வாக 7-ஸ்பீடு டிசிடி கியர்பாக்ஸ் தேர்வு வழங்கப்படவுள்ளது. இந்த கியர்பாக்ஸ் அமைப்பு உடன் தான் தற்போது இந்த கியா சொனெட் மாடல் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Saturday, July 25, 2020, 13:30 [IST]
English summary
kia sonet spy pics
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+