தயாரிப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் கியா சொனேட் எஸ்யூவி கார் சோதனை...
கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மூன்றாவது மாடலாக சந்தையில் விற்பனைக்கு வரவுள்ள சொனேட் மறைப்பு எதுவுமின்றி மீண்டும் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து மோட்டாராய்ட்ஸ் செய்தி தளத்தில் வெளியிடப்பட்டுள்ள ஸ்பை படங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த கியா நிறுவனத்தின் இந்த சப்-4 மீட்டர் எஸ்யூவி மாடல் அடுத்த ஆகஸ்ட் மாதம் 7ஆம் தேதியில் உலகளாவிய அறிமுகத்தை காணவுள்ளது. இதற்கிடையில் இதன் தற்போதைய சோதனை ஓட்டத்தின் மூலம் சில சுவாரஸ்யமான தகவல்கள் வெளிவந்துள்ளன.

இதன் முன்பகுதி ஏற்கனவே டீசர் படத்தின் மூலமாக வெளியிடப்பட்டு இருந்தது. மேலும் இது முதுகுத்தண்டு வடிவிலான மேற்கூரையின் ஆரம்பத்தை கார் எவ்வாறு பெற்றிருக்கிறது என்பது குறித்த ஐடியாவையும் நமக்கு தருகிறது.

தற்போதைய ஸ்பை படங்கள் ஒருங்கிணைக்கப்பட்ட ஸ்பாய்லர் மற்றும் முழு-எல்இடி டெயில்லைட்களை இந்த எஸ்யூவி காரின் பின்புறத்தில் வழங்கப்பட்டிருப்பதை காட்டுகின்றன. இதில் காரின் மொத்த அகலத்தையும் இணைக்கும் விதமாக பொருத்தப்பட்டுள்ள டெயில்லைட்கள் இரட்டை விளக்குகளுடன் ஒளியூட்டப்பட்ட ஸ்ட்ரிப்ஸை கொண்டுள்ளன.

இதுமட்டுமின்றி காரை சுற்றிலும் சங்கி பாடி க்ளாடிங், சிறிய பின்புற குவார்டர் ஜன்னல் கண்ணாடிகள் உள்ளிட்டவற்றையும் இந்த கார் பெற்றிருப்பதை இந்த ஸ்பை படங்கள் காட்டுகின்றன.

இவற்றுடன் ஸ்டீல் சக்கர டிசைன் (எண்ட்ரீ-லெவல் ட்ரிம்களுக்கு வழங்கப்படலாம்), பின்புற ஏர்-கான் வெண்ட்ஸ் போன்றவையையும் காண முடிவதால் கியா நிறுவனம் சொனேட் காம்பெக்ட் எஸ்யூவி காரை தோற்றத்தில் மிகவும் சிறப்பானதாக வடிவமைத்துள்ளது.

காரின் முன்புறத்தில் வழங்கப்பட்டுள்ள அம்சங்களை ஏற்கனவே நமது தளத்தில் விரிவாக பதிவிட்டுள்ளோம். உட்புறத்தில் இந்த எஸ்யூவி கார் ஆண்ட்ராய்டு ஆட்டோ, ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ப்ராண்டின் லேட்டஸ்ட் யுவிஒ கனெக்டட் வசதி கொண்ட 10.25 இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்தை எதிர்பார்க்கலாம்.

இதுமட்டுமின்றி கியா நிறுவனம் சொனேட் மாடலில் பல எண்ணிக்கையில் ட்ரைவிங் மோட்கள், ப்ரீமியம் போஸ் சவுண்ட் சிஸ்டம், சன்ரூஃப், பல செயல்பாடுகளை கொண்ட ஸ்டேரிங் சக்கரம், ப்ளைண்ட் ஸ்பாட் மானிடரிங் சிஸ்டம் உள்பட பல காற்றுப்பைகள், ஏபிஎஸ் போன்ற பாதுகாப்பு தொழிற்நுட்பங்களையும் வழங்கியிருக்கும்.

இந்த காம்பெக்ட் எஸ்யூவி காரில் ஹூண்டாய் வென்யூ மாடலில் வழங்கப்பட்டு வரும் 1.2 லிட்டர் பெட்ரோல், 1.5 லிட்டர் டீசல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் என்ஜின் தேர்வுகள் வழங்கப்படவுள்ளது. ஆனால் வென்யூ மாடலில் கூட இல்லாத வகையில் டீசல்-ஆட்டோமேட்டிக் தேர்வு இந்த காருக்கு கொடுக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications








