கியா சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி காரின் தோற்றம் முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக வெளியானது...

கியா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனத்தின் அடுத்த அறிமுக மாடலான சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி காரின் டீசர் படம் முதன்முறையாக வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

கியா சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி காரின் தோற்றம் முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக வெளியானது...

தற்போது வெளியாகியுள்ள டீசர் படம், 2020 ஆட்டோ எக்ஸ்போவில் இந்த சப்-4 மீட்டர் கார் என்ன தோற்றத்தை கொண்டிருந்ததோ அதை தான் கொண்டுள்ளது. இந்த படத்தின் மூலம் பார்க்கும்போது சொனெட், கியாவின் தனித்துவமான ஸ்டைல் பாகங்களான புலி-மூக்கு வடிவிலான க்ரில் மற்றும் மூன்று-பரிமாண க்ரில் மெஷ் உடன் கம்பீரமான மற்றும் டைனாமிக் டிசைனை பெற்றுள்ளது.

கியா சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி காரின் தோற்றம் முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக வெளியானது...

கியா சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி காருக்கு மஸ்குலர் பண்பை பெரிய வாகனங்களில் இருந்து எடுத்து கொடுப்பது தங்களது நோக்கமாக இருந்தது எனவும், இதனால் எஸ்யூவி கார்களுக்கு உண்டான ஸ்போர்ட்டியான அணுகுமுறையுடன் இந்த காரை வடிவமைத்துள்ளதாகவும் கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மூத்த துணை தலைவரும் டிசைன் பிரிவின் முதன்மை அதிகாரியுமான கரீம் ஹபிப் கூறியுள்ளார்.

கியா சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி காரின் தோற்றம் முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக வெளியானது...

மேலும் கூறிய அவர், புதிய கியா சொனெட் சமரசமற்ற கவனத்தை பெற வண்ணங்கள் மற்றும் பாகங்களின் தேர்வுகளை எங்களது வடிவமைப்பாளர்கள் இந்தியா முழுவதும் கண்டறிந்த சிறந்த கலாச்சார பாரம்பரியத்தின் அடிப்படையில் வழங்கியுள்ளோம் என தெரிவித்துள்ளார்.

கியா சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி காரின் தோற்றம் முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக வெளியானது...

கரீம் ஹபிப்பின் இந்த கூற்றுகளின் மூலம் தயாரிப்பு நிறுவனம் கியா சொனெட்டை சிறந்த உருவாக்க தரம், வர்க்க-முன்னணி அம்சங்கள், இணைப்பு தொழிற்நுட்பங்கள், ஆற்றல்மிக்க என்ஜின் தேர்வுகள் மற்றும் விரிவான பாதுகாப்பு உபகரணங்கள் உடன் தயாரித்திருக்கும் என்பது உறுதியாகுகிறது.

கியா சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி காரின் தோற்றம் முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக வெளியானது...

இதன்படி கியா சொனெட் ட்யூல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் உடன் 1.0 லிட்டர் டர்போ-பெட்ரோல், 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் 1.2 லிட்டர் பெட்ரோல், 6-ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் உடன் 1.5 லிட்டர் டீசல் போன்ற என்ஜின் தேர்வுகளை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கியா சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி காரின் தோற்றம் முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக வெளியானது...

இவற்றுடன் ஹூண்டாய் வென்யூ காம்பெக்ட் எஸ்யூவி மாடலில் இருந்து புதிய ஐஎம்டி செமி-ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனையும் பெறலாம். கியா சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி மாடல் உலகளாவிய அறிமுகத்தை வருகிற ஆகஸ்ட் 7ஆம் தேதி காணவுள்ளது. இந்தியாவில் கியா நிறுவனத்தின் இரண்டாவது ‘மேட் இன் இந்தியா' தயாரிப்பாக இந்த கார் வெளிவரவுள்ளது.

கியா சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி காரின் தோற்றம் முதன்முறையாக அதிகாரப்பூர்வமாக வெளியானது...

இந்திய சந்தையில் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா, ஹூண்டாய் வென்யூ மற்றும் டாடா நெக்ஸான் உள்ளிட்ட மாடல்களுடன் விற்பனையில் போட்டியிடவுள்ள இந்த கியா காரின் விலை ரூ.7.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.

Most Read Articles
English summary
Kia Sonet First Teaser Image
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X