கியா சொனெட் காம்பேக்ட் எஸ்யூவியின் புதிய டீசர்... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!
கியா சொனெட் காம்பேக்ட் எஸ்யூவியின் புதிய டீசர் வெளியிடப்பட்டு இருக்கிறது. இந்த டீசர் மூலமாக தெரிய வந்திருக்கும் புதிய அம்சங்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

கியா செல்டோஸ் மூலமாக எஸ்யூவி மார்க்கெட்டை அதகளப்படுத்தி வருகிரது கியா மோட்டார்ஸ் நிறுவனம். இரண்டாவது மாடலாக வர இருக்கும் கார்னிவல் எம்பிவி காருக்கும் முன்பதிவு சிறப்பான முறையில் இருந்து வருகிறது. இந்த சூழலில், மூன்றாவது மாடலாக புத்தம் புதிய காம்பேக்ட் எஸ்யூவியை கியா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்த உள்ளது.

ஹூண்டாய் வெனியூ காரின் அடிப்படையிலான மாடலாக வர இருக்கும் இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவியை சொனெட் என்ற பெயரில் விற்பனைக்கு கொண்டு வர இருக்கிறது கியா மோட்டார்ஸ்.

இந்த நிலையில், கியா சொனெட் எஸ்யூவியின் கான்செப்ட் மாடல் வரும் 5ந் தேதி துவங்க இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட இருக்கிறது. இந்த புதிய மாடலானது இந்த ஆண்டு பிற்பாதியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

கியா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவியின் இரண்டாவது டீசர் வெளியாகி இருக்கிறது. இதில், கதவுகளில் ஃப்ளஷ் வகை கதவு கைப்பிடிகள் கொடுக்கப்பட்டுள்ளன. சி பில்லர் வலிமையானதாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.
இந்த புதிய காம்பேக்ட் எஸ்யூவி 4 மீட்டருக்குள் வடிவமைக்கப்பட்டு இருக்கும். அதேபோன்று, கியா நிறுவனத்தின் பாரம்பரிய டிசைன் அம்சங்களுடன் இந்த கார் வர இருக்கிறது. பக்கநாட்டில் பெரிய சக்கரங்கள், வலிமையான வீல் ஆர்ச்சுகளுடன் கவர்வதாக இருக்கும்.

கியா சொனெட் எஸ்யூவியில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் பயன்படுத்தப்பட்டு இருக்கும். இதன் பெட்ரோல் எஞ்சின் 115 பிஎஸ் பவரையும், 144 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். டீசல் எஞ்சினஅ 115 பிஎஸ் பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

இந்த காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வும் இடம்பெறும். இந்த எஞ்சின் 120 பிஎஸ் பவரையும், 171 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளிலும் கிடைக்கும்.

புதிய கியா சொனெட் காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், 16 அங்குல அலாய் வீல்கள், எல்இடி டெயில் லைட்டுகள், எலெக்ட்ரிக் சன்ரூஃப், 8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவை இடம்பெறும்.

இதன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும். யுவோ கனெக்டெட் கார் தொழில்நுட்பமும் இடம்பெற்றிருக்கும். வயர்லெஸ் சார்ஜர் வசதியும் கொடுக்கப்பட்டு இருக்கும்.

வரும் 5ந் தேதி துவங்க இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் புதிய கியா சொனெட் எஸ்யூவியின் கான்செப்ட் கார் காட்சிப்படுத்தப்பட உள்ளது. இதைத்தொடர்ந்து, இந்த ஆண்டு பிற்பாதியில் அறிமுகத்திற்கும


Click it and Unblock the Notifications








