சொனெட் காரை முன்பதிவு செய்பவர்களுக்கு கியா கொடுத்த ஷாக்!! உடனே டெலிவிரி எடுக்க முடியாதாம்..

சமீபத்தில் செல்டோஸ் காரை முன்பதிவு செய்பவர்களுக்கான காத்திருப்பு காலம் அதிகரித்ததை தொடர்ந்து தற்போது சொனெட் காம்பெக்ட் எஸ்யூவி காருக்கான காத்திருப்பு காலம் 5 மாதங்கள் வரையில் உயர்த்தப்பட்டுள்ளது.

சொனெட் காரை முன்பதிவு செய்பவர்களுக்கு கியா கொடுத்த ஷாக்!! உடனே டெலிவிரி எடுக்க முடியாதாம்..

தென் கொரியாவை சேர்ந்த கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகம்தான் சொனெட். காம்பெக்ட் எஸ்யூவி பிரிவில் நிலைநிறுத்தப்பட்டு வரும் இந்த காருக்கான முன்பதிவுகள் கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதியில் துவங்கப்பட்டன.

சொனெட் காரை முன்பதிவு செய்பவர்களுக்கு கியா கொடுத்த ஷாக்!! உடனே டெலிவிரி எடுக்க முடியாதாம்..

அப்போதில் இருந்து வெறும் 2 மாதங்களுக்கு உள்ளாகவே இந்த கியா காரை சுமார் 50,000 வாடிக்கையாளர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இதன் காரணமாக செப்டம்பரில் அதிகளவில் விற்பனையான எஸ்யூவி காராக இந்திய சந்தையில் சொனெட் உருவெடுத்தது.

சொனெட் காரை முன்பதிவு செய்பவர்களுக்கு கியா கொடுத்த ஷாக்!! உடனே டெலிவிரி எடுக்க முடியாதாம்..

டாடா நெக்ஸான், மாருதி விட்டாரா பிரெஸ்ஸா போன்ற காம்பெக்ட்-எஸ்யூவி மட்டுமின்றி ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் கியா செல்டோஸ் போன்ற நடுத்தர அளவு கொண்ட எஸ்யூவிகளையும் விற்பனையில் சொனெட் அந்த மாதத்தில் முந்தியிருந்தது.

சொனெட் காரை முன்பதிவு செய்பவர்களுக்கு கியா கொடுத்த ஷாக்!! உடனே டெலிவிரி எடுக்க முடியாதாம்..

இவ்வாறு இந்த காம்பெக்ட்-எஸ்யூவி காருக்கு தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால் கியா நிறுவனம் அதனை முன்பதிவு செய்து காத்திருப்பவர்களுக்கான காத்திருப்பு காலத்தை அதிகரித்துள்ளது. இதன்படி சொனெட்டின் சில வேரியண்ட்களை முன்பதிவு செய்பவர்கள் 4.5 மாதம் வரையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

சொனெட் காரை முன்பதிவு செய்பவர்களுக்கு கியா கொடுத்த ஷாக்!! உடனே டெலிவிரி எடுக்க முடியாதாம்..

ஆனால் டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் சொனெட்டின் எச்டிஎக்ஸ் ப்ளஸ் மற்றும் எச்டிகே ப்ளஸ் டிசிடி வேரியண்ட்களை முன்பதிவு செய்பவர்கள் வெறும் 6- 7 வாரங்கள் (1.5 மாதம்) காத்திருந்தாலே போதும் என இதுகுறித்த கியாவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

சொனெட் காரை முன்பதிவு செய்பவர்களுக்கு கியா கொடுத்த ஷாக்!! உடனே டெலிவிரி எடுக்க முடியாதாம்..

அதேநேரம் எச்டிஇ மற்றும் எச்டிகே வேரியண்ட்களை டீசல் என்ஜின் உடன் வாங்க நினைப்பவர்கள் 2 மாதம் வரையிலும், டீசல் என்ஜின் உடன் எச்டிகே ப்ளஸ், டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் உடன் ஜிடிஎக்ஸ் ப்ளஸ், ஜிடிஎக்ஸ் ப்ளஸ் டிசிடி, எச்டிகே ப்ளஸ் மற்றும் எச்டிஎக்ஸ் உள்ளிட்ட வேரியண்ட்களை முன்பதிவு செய்பவர்கள் 13- 14 வாரங்கள் (3 மாதங்களுக்கும் மேல்) காத்திருந்தாக வேண்டும்.

சொனெட் காரை முன்பதிவு செய்பவர்களுக்கு கியா கொடுத்த ஷாக்!! உடனே டெலிவிரி எடுக்க முடியாதாம்..

சொனெட்டின் எச்டிஎக்ஸ் ப்ளஸ், எச்டிஎக்ஸ் ப்ளஸ் ஆட்டோமேட்டிக், ஜிடிஎக்ஸ் ப்ளஸ் மற்றும் ஜிடிஎக்ஸ் ப்ளஸ் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்களுக்கு (டீசல் என்ஜின் உடன்) 3.5 மாதங்களும், 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உடன் எச்டிஇ, எச்டிகே மற்றும் எச்டிகே ப்ளஸ் வேரியண்ட்களுக்கு 18-19 வாரங்களும் (4- 4.5 மாதங்கள்) காத்திருப்பு காலமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சொனெட் காரை முன்பதிவு செய்பவர்களுக்கு கியா கொடுத்த ஷாக்!! உடனே டெலிவிரி எடுக்க முடியாதாம்..

அதிகப்பட்சமாக டீசல் என்ஜின் உடன் சொனெட்டின் எச்டிஎக்ஸ் வேரியண்ட்டை முன்பதிவு செய்தவர்களுக்கு 19 -20 வாரங்கள் (4.5 மாதங்களுக்கும் அதிகம்) காத்திருப்பு காலமாகும். சொனெட்டின் முன்பதிவுகளில் 60 சதவீதம் அதன் டர்போசார்ஜ்டு மற்றும் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் ட்ரிம்களின் மீதுதான் நடைபெறுகிறது.

சொனெட் காரை முன்பதிவு செய்பவர்களுக்கு கியா கொடுத்த ஷாக்!! உடனே டெலிவிரி எடுக்க முடியாதாம்..

மீதி 40 சதவீதத்தினர் டீசல் என்ஜின் உடன் சொனெட்டை வாங்க விரும்புகின்றனர். மொத்த முன்பதிவுகளில் 46 சதவீதம் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட இண்டெலிஜண்ட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் மீது மேற்கொள்ளப்படுகிறது. கியா சொனெட்டின் எக்ஸ்ஷோரூம் விலைகள் ரூ.6.72 லட்சத்தில் இருந்து ரூ.13 லட்சம் வரையில் உள்ளன.

More from DriveSpark

Article Published On: Friday, December 11, 2020, 15:06 [IST]
English summary
Kia Sonet waiting period gets longer: 5 months of wait time for some variants
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+