கியா சொனெட் எஸ்யூவி காரின் முன்பகுதியின் தோற்றம் அதிகாரப்பூர்வமாக வெளியீடு...

வருகிற ஆகஸ்ட் 7ஆம் தேதி இந்தியாவில் இருந்து அதன் உலகளாவிய அறிமுகத்தை காணவுள்ள கியா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சொனெட் சப்-4 மீட்டர் எஸ்யூவி மாடலின் புதிய டீசர் படம் வெளியிடப்பட்டுள்ளது. அதன் மூலம் வெளிவந்துள்ள இந்த காம்பெக்ட் எஸ்யூவி காரை பற்றிய தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

கியா சொனெட் எஸ்யூவி காரின் முன்பகுதியின் தோற்றம் அதிகாரப்பூர்வமாக வெளியீடு...

இந்த டீசர் படம் காரின் முன்புறத்தை மட்டுமே வெளிப்படுத்தும் வகையில் உள்ளது. இதன் முன்பகுதி கிட்டத்தட்ட 2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த இதன் கான்செப்ட் மாடலை தான் பெரிதும் ஒத்து காணப்படுகிறது.

கியா சொனெட் எஸ்யூவி காரின் முன்பகுதியின் தோற்றம் அதிகாரப்பூர்வமாக வெளியீடு...

இதில் ஹெட்லேம்ப் மற்றும் டிஆர்எல்களின் டிசைன் தான் மிகவும் கவனிக்கத்தக்க விஷயமாக உள்ளது. முழு-எல்இடி தரத்திலான இந்த ஹெட்லேம்ப் அமைப்பின் மேற்புறத்தில் உள்ள ஓவர்-லைன்கள், கண் புருவம் போன்று காட்சியளிக்கிறது. அங்கு கூடுதலான எல்இடி ஸ்ட்ரிப்பும் காட்சியளிக்கின்றன.

கியா சொனெட் எஸ்யூவி காரின் முன்பகுதியின் தோற்றம் அதிகாரப்பூர்வமாக வெளியீடு...

இதை ஒரிஜினல் கான்செப்ட்டில் பார்க்க முடியவில்லை. இது ஒன்று மட்டுமே கான்செப்ட் மாடலில் இருந்து இந்த டீசரில் வேறுபடுகிறது. இதை தவிர்த்து பார்த்தோமேயானால் முன்புற க்ரில் நேரடியாக கான்செப்ட்டில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது.

கியா சொனெட் எஸ்யூவி காரின் முன்பகுதியின் தோற்றம் அதிகாரப்பூர்வமாக வெளியீடு...

கீழ்பகுதியில் க்ரோம் கார்னஷிங் உடன் காட்சியளிக்கும் இது கியாவின் தனித்துவமான க்ரில் அமைப்பாகும். இந்த க்ரில் அமைப்பில் சிவப்பு நிறத்தில் சில பகுதிகளும் காட்சியளிக்கின்றன. கான்செப்ட் மாடலிலும் பார்க்க முடிந்த இவை தான் கியாவின் இந்த சிறிய எஸ்யூவி மாடலுக்கு கூடுதலான ப்ரீமியம் உணர்வை தருகின்றன.

கியா சொனெட் எஸ்யூவி காரின் முன்பகுதியின் தோற்றம் அதிகாரப்பூர்வமாக வெளியீடு...

பம்பர் இந்த டீசரில் காட்டப்படவில்லை. இருப்பினும் சொனெட் எஸ்யூவி காரில் பம்பர் பகுதியானது இருபுறத்திலும் ஃபாக்ஸ் ஏர் வெண்ட்களுக்கான ஹௌசிங்கை கொண்டிருக்கும். இந்த ஹௌசிங் தான் ஃபாக் விளக்குகளையும் தாங்கியிருக்கும். எல்இடி ஸ்ட்ரிப்பை தவிர்த்து காரின் முன்புற டிசைனில் வேறெந்த மாற்றத்தையும் அறிய முடியவில்லை.

கியா சொனெட் எஸ்யூவி காரின் முன்பகுதியின் தோற்றம் அதிகாரப்பூர்வமாக வெளியீடு...

க்ரில் அமைப்பில் வழங்கப்பட்டுள்ள சிவப்பு பகுதிகள் மற்றும் க்ரோம் பகுதிகளை இந்த எஸ்யூவி காரின் டாப் வேரியண்ட்களில் மட்டுமே எதிர்பார்க்க முடியும். இதன் டாப் வேரியண்ட் ஜிடி என்ற பெயரால் அழைக்கப்படலாம். கான்செப்ட் மாடலில் இருந்து பெரும்பான்மையான டிசைனை அப்படியே பெறவுள்ளதால் எதிர்பார்த்தப்படி சொனேட் எஸ்யூவி கார் மிகவும் கம்பீரமான தோற்றத்தில் வெளிவரும் என்பது உறுதி.

கியா சொனெட் எஸ்யூவி காரின் முன்பகுதியின் தோற்றம் அதிகாரப்பூர்வமாக வெளியீடு...

இந்த காருக்கு வழங்கப்படவுள்ள என்ஜின் அமைப்பு குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் தற்போதைக்கு இல்லை. ஹூண்டாய் வென்யூ காம்பெக்ட் எஸ்யூவி உடன் ப்ளாட்ஃபாரத்தை பகிர்ந்து கொண்டுள்ளதால் அதில் வழங்கப்பட்டுள்ள என்ஜின் தேர்வு தான் இதற்கும் கொடுக்கப்படவுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, July 16, 2020, 17:13 [IST]
English summary
Kia Sonets Front Fascica Teased
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+