ஏற்றுமதியிலும் கலக்கும் கியா செல்டோஸ் எஸ்யூவி... டாப் - 3 இடத்திற்குள் வந்து அசத்தல்!

உள்நாட்டு விற்பனையில் கலக்கி வரும் கியா செல்டோஸ் கார் ஏற்றுமதியிலும் டாப் - 3 இடங்களுக்குள் வந்து அசத்தி உள்ளது.

ஏற்றுமதியிலும் கலக்கும் கியா செல்டோஸ் எஸ்யூவி... டாப் - 3 இடத்திற்குள் வந்து அசத்தல்!

கடந்த ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட கியா செல்டோஸ் கார் விற்பனையில் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது. அறிமுகம் செய்யப்பட்ட ஓரிரு மாதங்களிலேயே எஸ்யூவி மார்க்கெட்டில் விற்பனையில் நம்பர்-1 மாடல் என்ற பெருமையை பெற்றது.

ஏற்றுமதியிலும் கலக்கும் கியா செல்டோஸ் எஸ்யூவி... டாப் - 3 இடத்திற்குள் வந்து அசத்தல்!

இந்த நிலையில், கியா செல்டோஸ் காருக்கு உள்நாட்டு சந்தையில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், கியா மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் 40 நாடுகளுக்கு செல்டோஸ் ஏற்றுமதியையும் துவங்கி இருக்கிறது.

ஏற்றுமதியிலும் கலக்கும் கியா செல்டோஸ் எஸ்யூவி... டாப் - 3 இடத்திற்குள் வந்து அசத்தல்!

கடந்த மாதம் மட்டும் 6,341 கியா செல்டோஸ் கார்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. இதன்மூலமாக, இந்தியாவின் அதிகம் ஏற்றுமதியாகும் கார் மாடல்களில் மூன்றாவது இடத்தை பிடித்து அசத்தி உள்ளது.

ஏற்றுமதியிலும் கலக்கும் கியா செல்டோஸ் எஸ்யூவி... டாப் - 3 இடத்திற்குள் வந்து அசத்தல்!

கடந்த மாதத்தில் 12,607 ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் எஸ்யூவிகளும், 9,237 நிஸான் சன்னி கார்களும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இதற்கடுத்த இடத்தில் கியா செல்டோஸ் உள்ளது. உள்நாட்டு விற்பனையில் சிறப்பான இடத்தை பிடித்துள்ள கியா செல்டோஸ் ஏற்றுமதியிலும் டாப் -3 மாடல்களில் ஒன்றாக மாறி இருக்கிறது.

ஏற்றுமதியிலும் கலக்கும் கியா செல்டோஸ் எஸ்யூவி... டாப் - 3 இடத்திற்குள் வந்து அசத்தல்!

கியா செல்டோஸ் காருக்கு தொடர்ந்து சிறப்பான வரவேற்பு இருந்து வருகிறது. எனவே, இதுவரை ஹூண்டாய் க்ரெட்டா மற்றும் மாருதி விட்டாரா பிரெஸ்ஸா கார்களிடமிருந்து நம்பர்-1 இடத்தை கியா செல்டோஸ் மிக குறுகிய காலத்தில் பிடித்துள்ளது. இதேநிலை தொடர்ந்தால் நம்பர்-1 இடத்தில் சிம்மாசனம் போட்டு அமர்ந்துவிடும்.

ஏற்றுமதியிலும் கலக்கும் கியா செல்டோஸ் எஸ்யூவி... டாப் - 3 இடத்திற்குள் வந்து அசத்தல்!

கியா செல்டோஸ் காரின் அசத்தலான டிசைன் வாடிக்கையாளர்களை வசியம் செய்துவிட்டது. எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், பனி விளக்குகள், அட்டகாசமான அலாய் வீல்கள், ரூஃப் ரெயில்கள் என அனைத்தும் வசீகரிக்கும் அம்சங்களாக உள்ளன.

ஏற்றுமதியிலும் கலக்கும் கியா செல்டோஸ் எஸ்யூவி... டாப் - 3 இடத்திற்குள் வந்து அசத்தல்!

புதிய கியா செல்டோஸ் காரின் உட்புறமும் அசத்துகிறது. அழகிய டேஷ்போர்டு அமைப்பு, 10.25 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், யுவோ செயலி மூலமாக 37 விதமான வசதிகளை பெறும் வாய்ப்புகள் உள்ளன.

ஏற்றுமதியிலும் கலக்கும் கியா செல்டோஸ் எஸ்யூவி... டாப் - 3 இடத்திற்குள் வந்து அசத்தல்!

இந்த காரில் 8.0 அங்குல ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, ஆட்டோ க்ரூஸ் கன்ட்ரோல் சிஸ்டம், சர்ரவுண்ட் சவுண்ட் சிஸ்டம், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், புஷ் பட்டன் ஸ்டார்ட், வயர்லெஸ் சார்ஜர் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன.

ஏற்றுமதியிலும் கலக்கும் கியா செல்டோஸ் எஸ்யூவி... டாப் - 3 இடத்திற்குள் வந்து அசத்தல்!

புதிய கியா செல்டோஸ் காரில் 360 டிகிரி கேமரா, ஏர்பேக்குகள், ஹில் ஹோல்டு அசிஸ்ட், பிளைன்ட் ஸ்பாட் மானிட்டரிங் சிஸ்டம், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் என பாதுகாப்பு அம்சங்களும் பஞ்சமில்லாத கார் மாடலாக உள்ளது.

ஏற்றுமதியிலும் கலக்கும் கியா செல்டோஸ் எஸ்யூவி... டாப் - 3 இடத்திற்குள் வந்து அசத்தல்!

கியா செல்டோஸ் காரில் 113 பிஎச்பி பவரையும், 144 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின், 113 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 138 பிஎச்பி பவரையும், 242 என்எம் டார்க் திறனையும் வழங்கும் 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கும். மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் வழங்கப்படுகிறது.

ஏற்றுமதியிலும் கலக்கும் கியா செல்டோஸ் எஸ்யூவி... டாப் - 3 இடத்திற்குள் வந்து அசத்தல்!

புதிய கியா செல்டோஸ் கார் ரூ.9.89 லட்சம் ஆரம்ப விலையிலிருந்து கிடைக்கிறது. ஹூண்டாய் க்ரெட்டா, எம்ஜி ஹெக்டர் உள்ளிட்ட கார் மாடல்களுடன் போட்டி போடுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, January 25, 2020, 10:39 [IST]
English summary
KIA Motors India has dispatched 6341 units Seltos SUVs in December 2019 to the overseas market.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+