ஒரே சார்ஜில் 450 கிமீ பயணிக்கலாம்... ஆட்டோ எக்ஸ்போவில் காட்சியாகிய கியா நீரோ...
கியா நிறுவனம் அதன் நீரோ என்ற புத்தம் புதிய எலெக்ட்ரிக் காரை இந்திய வாகன கண்காட்சியில் காட்சிப்படுத்தியது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

தென் கொரியாவை மையமாகக் கொண்டு இயங்கும் கியா நிறுவனம், அதன் புத்தம் புதிய நீரோ என்ற மின்சார காரை இந்திய ஆட்டோ எக்ஸ்போ 2020-இல் அறிமுகம் செய்துள்ளது. இந்த காரை முன்னதாக கொரியாவில் நடைபெற்ற சர்வதேச மின்சார வாகன கண்காட்சியில் கியா நிறுவனம் காட்சிப்படுத்தியிருந்தது.

இதுமட்டுமின்றி, ஜனவரி மாதம் லாஸ் ஏஞ்ஜல்ஸ் நகரத்தில் நடைபெற்ற தொழில்நுட்ப கண்காட்சியிலும் இந்த கார் காட்சிப்படுத்தப்பட்டது. இதையடுத்தே, தற்போது இந்தியாவிலும் காட்சிப்படுத்தியுள்ளது கியா.
காம்பேக்ட் க்ராஸோவர் ஸ்டைலிலான இந்த கார் எப்போது இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டுவரப்படும் என்ற தகவல் வெளியாகவில்லை.

இருப்பினும், இந்நிறுவனம் வருகின்ற 2025ம் ஆண்டிற்குள் 16 மின்மயமாக்கப்பட்ட வாகனங்களை இந்தியாவில் களமிறப்பதற்கான செயலில் ஈடுபட்டு வருகின்றது.
இதனடிப்படையில், இந்தியச் சந்தைக்காக இன்னும் 18 மாதங்களில் தொடர்ச்சியாக ஐந்து புத்தம் புதிய மாடல்களை அது களமிறக்க திட்டமிட்டிருக்கின்றது. இதில், ஏற்கனவே களமிறக்கப்பட்ட செல்டோஸ் மற்றும் கார்னிவலும் அடங்கும்.

ஆகையால், தொடர்ந்து வரும் காலங்களில் எஸ்பி கான்செப்ட் மாடலைப் போன்று பல்வேறு கார்கள் இந்தியாவை நோக்கி படையெடுக்க உள்ளன. இதற்கான பணிகள் ஆந்திராவில் இயங்கிக் கொண்டிருக்கும் கியா உற்பத்தியாலையில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

தற்போது, இந்திய வாகன கண்காட்சியில் காட்சிக்குள்ளாயிருக்கும் கியாவின் நீரோ எலெக்ட்ரிக் கார் 380 கிமீ ரேஞ்சை வழங்கும் திறனைப் பெற்றிருக்கின்றது. இதற்கான சக்தியை 64kWh பேட்டரி பேக்கிலிருந்து அது பெற்றுக்கொள்கின்றது. இதேபோன்று, 241 கிமீ ரேஞ்சை வழங்கும் வேரியண்ட் நீரோ எலெக்கட்ரிக் காரில் காணப்படுகின்றது.

இதைவிட அளவு குறைந்த பேட்டரி பேக்காக 32kWh திறன் கொண்ட நீரோ அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், தற்போது ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள கார் ஒரே ஒரு முழுமையான சார்ஜில் அதிகபட்சமாக 450 கிமீ தூரம் வரை செல்லும்.
இதற்கான எஞ்ஜின் போன்ற ஒரு சில கருவிகள் கியாவின் சகோதர நிறுவனமான ஹூண்டாய் மோட்டார்ஸிடம் இருந்து பெறப்பட்டு வருகின்றது.

இந்த காரின் டிசைனிங் நீரோவின் சாதாரண (எரிபொருள் வேரியண்ட்) மாடலைப் போன்றே காட்சியளிக்கின்றது. குறிப்பாக பாராமெட்ரிக்ரில், டிஸ்பிளே பேனல் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப அம்சங்கள் ஒரே மாதிரியானதாக இருக்கின்றது. இருப்பினும், மின்சார காருக்கே உரித்தான இணையம் மற்றும் ஸ்மார்ட் கன்னெக்டிவிட்டியில் தனித்துவமானதாக காட்சியளிக்கின்றது.


Click it and Unblock the Notifications








