விமானமாக உருமாறும் கார்... ப்பா, என்ன வேகத்துல பறக்குது... மெர்சலாக்கும் வீடியோ!

பறக்கும் கார் பற்றிய மெர்சலாக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதுகுறித்த தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

விமானமாக உருமாறும் கார்... ப்பா, என்ன வேகத்துல பறக்குது... மெர்சலாக்கும் வீடியோ!

வாகன பிரியர்களின் பறக்கும் கார் கனவு வெகு விரைவில் நனவாக இருக்கின்றது. ஆமாங்க, பறக்கும் கார்கள் பயன்பாட்டிற்கு வரவிருப்பதைப் பற்றிதான் இங்கு பாரத்துக் கொண்டிருக்கின்றோம். பறக்கும் கார்கள் நடைமுறைக்கு வருவதற்கான அறிகுறிகள் இப்போதே தெண்பட ஆரம்பித்துள்ளது. இதை உறுதிப்படுத்தும் வகையிலும், வாகன ஆர்வலர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையிலும் ஸ்லோவேகியன் நாட்டில் ஓர் சம்பவம் அரங்கேறியிருக்கின்றது.

விமானமாக உருமாறும் கார்... ப்பா, என்ன வேகத்துல பறக்குது... மெர்சலாக்கும் வீடியோ!

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்லோவகியன் நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் கிளெய்ன் விஷன் (Klein Vision). இந்நிறுவனம் அண்மையில் விமான ஓடுதளம் ஒன்றில் வைத்து அதன் ஏர்-கார் வி5 (AirCar V5) எனும் பறக்கும் காரை பரிசோதித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விமானமாக உருமாறும் கார்... ப்பா, என்ன வேகத்துல பறக்குது... மெர்சலாக்கும் வீடியோ!

இந்த பரிசோதனையில் பறக்கும் காரின் திறன்கள் ஆய்வு செய்யப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, வானில் பறப்பது (takeoff) மற்றும் தரையிறங்குவது (landing) ஆகியவை பரிசோதிக்கப்பட்டிருக்கின்றன. பல முறை மேற்கொண்ட இந்த முயற்சியில் ஏர்-கார் வி5 வெற்றிகரமாக செயல்பட்டிருக்கின்றது. இதனை அந்நிறுவனம் கிளெய்ன் விஷன் நிறுவனம் தற்போது உறுதிப்படுத்தியுள்ளது.

விமானமாக உருமாறும் கார்... ப்பா, என்ன வேகத்துல பறக்குது... மெர்சலாக்கும் வீடியோ!

இதுகுறித்த வீடியோவையும் அந்த நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், பறக்கும் கார் முழுமையாக விமானமாக மாறுவது முதல் வானை வட்டமடித்து தரையிறங்குவது வரையிலான காட்சிகள் அடங்கியிருக்கின்றன. குறிப்பாக, இந்த பறக்கும் கார் ஓர் முழு விமானமாக மாற வெறும் 3 நிமிடங்களை மட்டுமே எடுத்திருக்கின்றது. அதாவது, காரின் உருவத்தில் இருந்து விமானம் உருவத்தை அடைவதற்கு ஏர்கார் வி5-ற்கு 3 நிமிடங்கள் தேவைப்படுகின்றது.

விமானமாக உருமாறும் கார்... ப்பா, என்ன வேகத்துல பறக்குது... மெர்சலாக்கும் வீடியோ!

இதற்கான இறக்கை, மற்றும் வால் பகுதிகள் விரியவே இந்த நேரம் எடுத்துக் கொள்ளப்படுகின்றது. இதைத்தொடர்ந்து ஓர் விமானத்தைப் போல் ஓடுதளத்தில் சீறிப் பாய்ந்து, பின்னர், அது வட்டமடிக்க தொடங்குகின்றது. பறத்தல் மற்றும் ஓடும் திறன்களுக்காக பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எஞ்ஜினை கிளெயின் விஷன் பயன்படுத்தியுள்ளது. இது, 140 எச்பி திறன் கொண்டதாகும். இது, தொழில்நுட்ப கூறுகளின் உதவியுடன் 140 பிஎஸ் பவரை வெளியேற்றுகின்றது.

விமானமாக உருமாறும் கார்... ப்பா, என்ன வேகத்துல பறக்குது... மெர்சலாக்கும் வீடியோ!

ஏர்கார் வி5 பறக்கும் காரில் இரு இருக்கைகள் மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. ஒன்று விமானிக்கும், மற்றொன்று பயணிக்கு மட்டுமானது ஆகும். இது 100 கிலோ எடைக் கொண்ட கார். அதேசமயம், இந்த பறக்கும் கார் 200 கிலோ வரையிலான கூடுதலாக எடையைத் தாங்கும் திறனைக் கொண்டிருக்கின்றது. மேலும், 1000 கிமீ தூரம் வரை பறக்கும் திறனை இது பெற்றிருக்கின்றது.

விமானமாக உருமாறும் கார்... ப்பா, என்ன வேகத்துல பறக்குது... மெர்சலாக்கும் வீடியோ!

இந்த பறக்கும் காரை டேக்ஆஃப் செய்வதற்கு முழுமையாக 300 மீட்டர் நீளம் கொண்ட ஓடு தளம் தேவைப்படுகின்றது. இது மணிக்கு 200 கிமீ வேகத்தில் பறக்கும் திறனைக் கொண்டிருக்கின்றது. இதனை எந்தவொரு விமானியும் எளிதில் கன்ட்ரோல் செய்யலாம். இதற்கேற்பவே சுலபமான கட்டமைப்பு வசதிகள் அதில் வழங்கப்பட்டிருக்கின்றன.

மிக விரைவில் 300எச்பி எஞ்ஜின் திறன் கொண்ட பறக்கும் காரை வடிவமைக்கவும் கிளெய்ன் விஷன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இன்னும் 6 மாதங்களில் அதை அடெப்ட் தரச் சான்றுடன் (ADEPT) வெளியீடு செய்ய இருப்பதாக அது கூறியிருக்கின்றது.

Most Read Articles

English summary
Klein Vision Flying Car AirCar V5 TakesOff Like Flight. Read In Tamil.
Story first published: Saturday, November 7, 2020, 12:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X