ரூ. 1.20 கோடி மதிப்புள்ள பென்ஸ் காருக்காக இளைஞர்கள் செய்த காரியம்... வாயடைத்துபோன கேரள மக்கள்...

ஒன்றரை கோடி மதிப்புள்ள புதிய பென்ஸ் காருக்காக கேரளத்து இளைஞர்கள் செய்த காரியம் அம்மாநிலத்து மக்களை வாயடைக்கச் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

புதிய பென்ஸ் காரின் பதிவெண்ணிற்காக பல லட்சங்களை வாரி இறைத்த இளைஞர்கள்... வாயடைத்து நிற்கும் கடவுளின் தேசம்... எவ்வளவு தெரியுமா?

கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர், தனது ஒன்றரை கோடி மதிப்புள்ள மெர்சிடிஸ் பென்ஸ் காருக்காக 9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பேன்சி பதிவெண்ணை வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடவுளின் தேசத்தில் (கேரளா) அரங்கேறிய இந்த சம்பவம், அம்மாநில மக்கள் ஆச்சரியத்தில் உறைய வைத்துள்ளது. இதுகுறித்த தகவலை மலப்புரம் லைஃப் ஸ்டைல் எனும் முகப்புத்தக குழு புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளது.

புதிய பென்ஸ் காரின் பதிவெண்ணிற்காக பல லட்சங்களை வாரி இறைத்த இளைஞர்கள்... வாயடைத்து நிற்கும் கடவுளின் தேசம்... எவ்வளவு தெரியுமா?

பெரும்பாலான கோடீஸ்வரர்கள் தாங்களின் கார்களை மட்டுமின்றி அதன் பதிவெண்ணையும்கூட சிறப்பு வாய்ந்ததாகவும், பிரத்யேகமானதாகவும் இருக்க வேண்டும் என விரும்புகின்றனர். இதற்காக அவர்கள் காருக்கு இணையான, சில நேரங்களில் காரின் மதிப்பையே விஞ்சக்கூடிய தொகையை செலவழிப்பதுண்டு.

புதிய பென்ஸ் காரின் பதிவெண்ணிற்காக பல லட்சங்களை வாரி இறைத்த இளைஞர்கள்... வாயடைத்து நிற்கும் கடவுளின் தேசம்... எவ்வளவு தெரியுமா?

அந்தவகையிலேயே கேரள மாநிலத்தில் இந்த இந்த சம்பவம் அரங்கேறியிருக்கின்றது. அண்மையில் மலப்புரத்தில் புதிதாக கொண்டோட்டி எனும் துணை மண்டல போக்குவரத்து அலுவலகம் திறக்கப்பட்டது. இந்த அலுவலகத்தின் முதல் பதிவெண்ணான 'கேஎல் 84 0001' -ஐ ஏலத்தின் வாயிலாக விற்பனைச் செய்ய அந்த ஆர்டிஓ-வின் அதிகாரிகள் திட்டமிட்டனர்.

புதிய பென்ஸ் காரின் பதிவெண்ணிற்காக பல லட்சங்களை வாரி இறைத்த இளைஞர்கள்... வாயடைத்து நிற்கும் கடவுளின் தேசம்... எவ்வளவு தெரியுமா?

இதற்கான ஏலம் மிக விருவிருப்பாக நடைபெற்று வந்தநிலையில் ரூ. 9,01,000-க்கு அந்த எண்ணை கேரளாவைச் சேர்ந்த இளைஞர்கள் வாங்கினர். மொஹமத் ரஃபீக் என்பவரே இந்த பதிவெண்ணை பெற்ற இளைஞர் என கூறப்படுகின்றது. இவர் தனது புத்தம் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்இ 53 கூபே காருக்காக வாங்கியிருப்பதாக தெரிவித்திருக்கின்றார்.

புதிய பென்ஸ் காரின் பதிவெண்ணிற்காக பல லட்சங்களை வாரி இறைத்த இளைஞர்கள்... வாயடைத்து நிற்கும் கடவுளின் தேசம்... எவ்வளவு தெரியுமா?

'கேஎல் 84 0001' பேன்சி பதிவெண்ணிற்கான ஏலத்தில் இருவர் மட்டுமே கலந்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. கடும் போட்டி நிலவி வந்தநிலையில், விடா முயற்சியின் காரணமாக மொஹமத் ரஃபீக் ஏலத்தில் வெற்றி பெற்றார். இதுதவிர ரஃபீக் சாலை வரியாக ரூ. 25 லட்சம் வரை செலுத்தியிருப்பதாக கூறப்படுகின்றது. இவையனைத்தும் மலப்புரம் லைஃப்ஸ்டைல் வெளியிட்ட தகவலின் அடிப்படையிலேயே தெரியவந்துள்ளது.

புதிய பென்ஸ் காரின் பதிவெண்ணிற்காக பல லட்சங்களை வாரி இறைத்த இளைஞர்கள்... வாயடைத்து நிற்கும் கடவுளின் தேசம்... எவ்வளவு தெரியுமா?

மொஹமத் ரஃபீக் வாங்கியிருக்கும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் கார் புதுமுக காராகும். அதாவது, பென்ஸ் நிறுவனம் இந்த ஏஎம்ஜி ஜிஎல்இ 53 கூபே காரை அண்மையில்தான் புதுப்பிக்கப்பட்ட வெர்ஷனாக இந்தியாவில் களமிறக்கியது. அதாவது, கடந்த செப்டம்பர் மாதம்தான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இதன் விலை இந்திய மதிப்பில் ரூ. 1.20 கோடியாகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

புதிய பென்ஸ் காரின் பதிவெண்ணிற்காக பல லட்சங்களை வாரி இறைத்த இளைஞர்கள்... வாயடைத்து நிற்கும் கடவுளின் தேசம்... எவ்வளவு தெரியுமா?

இத்தகைய விலையுயர்ந்த காருக்கே மொஹமத் ரஃபீக் விலையுயர்ந்த பேன்சி பதிவெண்ணை வாங்கியிருக்கின்றார். முந்தைய மாடலைக் காட்டிலும் புதிய ஏஎம்ஜி ஜிஎல்இ 53 கூபே ஆற்றல்மிக்க காராக களமிறங்கியுள்ளது. இதற்காக லேசான ஹைபிரிட் சிஸ்டத்தை பென்ஸ் வழங்கியுள்ளது. இது எஞ்ஜின் திறன் மற்றும் செயல்பாடு ஆகியவற்றை மிகச் சிறப்பாக வெளிப்படுத்த உதவும். குறிப்பாக சற்று கூடுதலாக வெளியேற்ற உதவும். இதேபோன்று, கவர்ச்சியான தோற்றத்திற்கும் குறைச்சலின்றி இக்காரை பென்ஸ் உருவாக்கியிருக்கின்றது.

புதிய பென்ஸ் காரின் பதிவெண்ணிற்காக பல லட்சங்களை வாரி இறைத்த இளைஞர்கள்... வாயடைத்து நிற்கும் கடவுளின் தேசம்... எவ்வளவு தெரியுமா?

புதிய ஏஎம்ஜி ஜிஎல்இ 53 கூபே காரில் 3.0 லிட்டர் இரட்டை டர்போ 6 சிலிண்டர் பெட்ரோல் எஞ்ஜினை மெர்சிடிஸ் பென்ஸ் பயன்படுத்தியுள்ளது. ஹைபிரிட் திறன் கொண்ட இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 435 பிஎச்பி மற்றும் 530 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்த கூடியது. இந்த என்ஜின் 9-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் இயங்குகின்றது.

புதிய பென்ஸ் காரின் பதிவெண்ணிற்காக பல லட்சங்களை வாரி இறைத்த இளைஞர்கள்... வாயடைத்து நிற்கும் கடவுளின் தேசம்... எவ்வளவு தெரியுமா?

இதில் வழங்கப்பட்டிருக்கும் ஹைபிரிட் அம்சமானது 48 வோல்ட் வரையிலான திறனை வெளிப்படுத்துகின்றது. இதன் மூலம் கூடுதலாக 22 பிஎச்பி திறனை இக்கார் வெளியேற்றுகின்றது. புதிய ஏஎம்ஜி ஜிஎல்இ 53 கூபே கார் அதிகப்பட்ச மணிக்கு வேகம் 250 கிமீ வேகத்தில் செல்லும் திறனைக் கொண்டிருக்கின்றது. அதேசமயம், இதன் பிக் வேகமும் நம்மை ஆச்சரியப்படுத்தும் வகையில் இருக்கின்றது. அதாவது, இக்கார் 0-ல் இருந்து 100 கிமீ வேகத்தை எட்ட வெறும் 5.3 வினாடிகளை மட்டுமே எடுத்துக் கொள்கின்றது.

புதிய பென்ஸ் காரின் பதிவெண்ணிற்காக பல லட்சங்களை வாரி இறைத்த இளைஞர்கள்... வாயடைத்து நிற்கும் கடவுளின் தேசம்... எவ்வளவு தெரியுமா?

இந்தளவிற்கு திறன் மிக்க காராக மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிஎல்இ 53 கூபே கார் இருக்கின்றது. இந்த காரின் சிறப்பை மேலும் கூட்டும் விதமாக கேரள இளைஞர் 9 லட்ச ரூபாய் செலவில் பேன்சி பதிவெண்ணை ஏலத்தின் வாயிலாக பெற்றிருக்கின்றார். இந்த நிகழ்வு கேரள மக்களை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கும் வகையில் அமைந்துள்ளது.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Kondotty RTO First Registration Number auctioned by Rs. 9 Lakh. Read in Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X