இந்தோனேசியாவில் களமிறங்கும் இந்தியர்கள் மனம் கவர்ந்த கார்... இந்திய தயாரிப்பு என்பது கூடுதல் சிறப்பு

இந்தியர்களுக்கு பிடித்தமான மேட்-இன்-இந்தியா காரொன்று விரைவில் இந்தோனேசியாவில் அறிமுகமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தோனேசியாவில் களமிறங்கும் இந்தியர்களின் மனம் கவர்ந்த கார்... இது இந்திய தயாரிப்பு என்பது கூடுதல் சிறப்பு!!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கார்களை தாய்லாந்து நாட்டில் பிரபல நிறுவனம் விரைவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தென் கொரிய நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் கியா நிறுவனமே அதன் மேட்-இன்-இந்தியா கார்களை தாய்லாந்து நாட்டில் களமிறக்க திட்டமிட்டுள்ளது.

இந்தோனேசியாவில் களமிறங்கும் இந்தியர்களின் மனம் கவர்ந்த கார்... இது இந்திய தயாரிப்பு என்பது கூடுதல் சிறப்பு!!

எனவே இதுகுறித்த தகவலை விரைவில் அந்த நிறுவனம் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிறுவனம் கடந்த வருடம்தான் இந்தியாவில் கால் தடம் பதித்தது. செல்டோஸ் எஸ்யூவி காரையே முதல் மாடலாக அது அறிமுகப்படுத்தியது. இக்காருக்கு எக்கசக்க டிமாண்ட் இந்தியாவில் நிலவியது.

இந்தோனேசியாவில் களமிறங்கும் இந்தியர்களின் மனம் கவர்ந்த கார்... இது இந்திய தயாரிப்பு என்பது கூடுதல் சிறப்பு!!

இதைத்தொடர்ந்தே, கார்னிவல் எனும் அதிக லக்சூரி வசதிக் கொண்ட காரை அது களமிறக்கியது. மேலும், இந்திய சந்தையில் வலுவாகக் கால் தடம் பதிக்க வேண்டும் என்பதற்காக சொனெட் எனும் எஸ்யூவி ரக காரை அது களமிறக்கியது. செல்டோஸின் சின்ன தம்பியைப் போல் காட்சியளிக்கும் இக்காரில் பிரீமியம் மற்றும் சொகுசு வசதிகள் ஏராளம். இதனால்தான் செல்டோஸ்க்கு வழங்கிய அதே வரவேற்பை இந்தியர்கள் சொனெட்டிற்கும் வழங்கி வருகின்றனர்.

இந்தோனேசியாவில் களமிறங்கும் இந்தியர்களின் மனம் கவர்ந்த கார்... இது இந்திய தயாரிப்பு என்பது கூடுதல் சிறப்பு!!

இந்த சிறப்பு வாய்ந்த காரையே கியா இந்தியாவில் வைத்து தயாரித்து வருகின்றது. இங்கிருந்துதான் உலக நாடுகள் சிலவற்றிற்கு ஏற்றுமதி செய்ய அது திட்டமிட்டுள்ளது. இதனடிப்படையிலேயே, இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட்ட கியா சொனெட் கார்களை இந்தோனேசியாவில் அது அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது.

இந்தோனேசியாவில் களமிறங்கும் இந்தியர்களின் மனம் கவர்ந்த கார்... இது இந்திய தயாரிப்பு என்பது கூடுதல் சிறப்பு!!

கியா சொனெட் ஓர் காம்பேக்ட் ரக எஸ்யூவி காராகும். இக்கார் நவம்பர் 11இல் இருந்து இந்தோனேசியாவில் விற்பனைக்கு வழங்கப்படும் என கூறப்படுகின்றது. கியா நிறுவனம், சொனெட் காரை இந்தியாவை மையமாக வைத்தே உற்பத்தி செய்து வருகின்றது. எனவேதான் இங்கிருந்து இந்தோனேசியாவிற்கு சொனெட் ஏற்றுமதி செய்யப்பட இருக்கின்றது.

இந்தோனேசியாவில் களமிறங்கும் இந்தியர்களின் மனம் கவர்ந்த கார்... இது இந்திய தயாரிப்பு என்பது கூடுதல் சிறப்பு!!

இதுதவிர, உலகின் 70க்கும் மேற்பட்ட பிற சந்தைகளுக்கும் இங்கிருந்தே ஏற்றுமதி செய்யப்பட இருக்கின்றது. இந்தோனேசியா சந்தைக்காக உற்பத்தி செய்யப்படும் கியா சொனெட் காருக்கும், தற்போது இந்தியாவில் விற்பனையில் இருக்கும் சொனெட் காருக்கும் இடையே லேசான வித்தியாசங்கள் இருக்கலாம் என கருதப்படுகின்றது.

இந்தோனேசியாவில் களமிறங்கும் இந்தியர்களின் மனம் கவர்ந்த கார்... இது இந்திய தயாரிப்பு என்பது கூடுதல் சிறப்பு!!

குறிப்பாக இதன் நீளத்தில் வித்தியாசம் தென்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இரு நாட்டு தயாரிப்புகளுக்கும் இடையே எந்தவொரு மாறுபாடும் இல்லை என நிர்வாகம் தரப்பில் கூறப்படுகின்றது. இதன் தரம், தொழில்நுட்ப வசதி மற்றும் தோற்றம் என அனைத்துமே ஒரே மாதிரியானதாகவே இருக்கும் என்கின்றனர்.

இந்தோனேசியாவில் களமிறங்கும் இந்தியர்களின் மனம் கவர்ந்த கார்... இது இந்திய தயாரிப்பு என்பது கூடுதல் சிறப்பு!!

மேலும், இந்தியாவில் தற்போது இக்காருக்கு கிடைத்து வரும் உச்சபட்ச வரவேற்பை இந்தோனேசியாவிலும் கியா எதிர்பார்க்கின்றது. கியா நிறுவனம், மேலும் 1.55 மில்லியன் டாலர்களை நாட்டில் முதலீடு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. இந்த முதலீட்டின்கீழ் புதுமுக எம்பிவி வாகனங்கள் மற்றும் மின்சார வாகனங்களைத் தயாரிக்க அது திட்டமிட்டுள்ளது.

Most Read Articles

மேலும்... #கியா #kia motors
English summary
Korean Car Maker Kia Planning To Laucnh Made-In-India Sonet In Indonesia. Read In Tamil.
Story first published: Monday, November 9, 2020, 16:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X