இந்த பேருந்தின் கண்களில் இருந்து ஒரு நோயாளியாலும் தப்பிக்க முடியாது... அதிரடி காட்டும் எடியூரப்பா!

கொரோனா நோயாளிகளை தேடி தேடிக் கண்டுபிடிக்கும் பேருந்துகளை களத்தில் இறக்கியிருக்கின்றது கர்நாடகா அரசு. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்த பேருந்தின் கண்களில் இருந்து ஒரு கொரோனா நோயாளியும் தப்பிக்க முடியாது... அதிரடி காட்டும் எடியூரப்பா!

கொரோனா வைரசுக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் அறிவிக்கப்படாத போரைத் தொடுத்து வருகின்றன. ஒரு பக்கம் இந்த வைரசுக்கான மருந்து கண்டுபிடிக்கப்பட்டுவிட்டதாகவும், மறு பக்கம் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்ற தகவலும் ஒரு சேர பரவிக் கொண்டிருக்கின்றன. எனவே, இதில் எதை நம்புவது என மக்கள் குழம்பி தவித்து வருகின்றனர்.

இந்த பேருந்தின் கண்களில் இருந்து ஒரு கொரோனா நோயாளியும் தப்பிக்க முடியாது... அதிரடி காட்டும் எடியூரப்பா!

அதேசமயம், வைரஸ் பாதிப்பு முந்தையக் காலங்களைக் காட்டிலும் தற்போது அதி வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. அதிலும், கடந்த இரு வாரங்களில் கொரோனா வைரஸ் பரவிய வேகம், காட்டு தீ பரவும் வேகத்தைக் காட்டிலும் பல மடங்கு அதிகமாக இருக்கின்றது. இதனால், நாடும், நாட்டு மக்களும் கடும் அச்சத்தில் உறைந்திருக்கின்றனர்.

இந்த பேருந்தின் கண்களில் இருந்து ஒரு கொரோனா நோயாளியும் தப்பிக்க முடியாது... அதிரடி காட்டும் எடியூரப்பா!

மேலும், முந்தையக் காலங்களைக் காட்டிலும் தொற்று விகிதம் அதிகரித்திருப்பதன் காரணத்தால் மருத்துவ உபகரணங்களின் பற்றாக்குறை மிகப் பெரிய பிரச்னைகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. அதேசமயம், மருத்துவ கருவிகள் மட்டுமின்றி மருத்துவமனைப் பற்றாக்குறையும் தலையாய பிரச்னைகளில் ஒன்றாக மாறியிருக்கின்றது.

இந்த பேருந்தின் கண்களில் இருந்து ஒரு கொரோனா நோயாளியும் தப்பிக்க முடியாது... அதிரடி காட்டும் எடியூரப்பா!

எனவே, இந்த இக்கட்டான சூழ்நிலையில் மாற்றி யோசிக்கும் விதமாக அந்தந்த மாநில அரசுகள் தன்னிச்சையாக சில தனித்துவமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

அந்தவகையில் உருவாக்கப்பட்டதுதான் ரயில் பெட்டி தனி மருத்துவமனை வார்டு மற்றும் பேருந்து மருத்துவமனை உள்ளிட்டவை.

இந்த பேருந்தின் கண்களில் இருந்து ஒரு கொரோனா நோயாளியும் தப்பிக்க முடியாது... அதிரடி காட்டும் எடியூரப்பா!

அதாவது, பொது போக்குவரத்தில் பயன்படுத்தப்பட்டு பேருந்துகளை தற்காலிக மருத்துவமனைகளாக அந்தந்த மாநில அரசுகள் தொடங்கியிருக்கின்றன. இந்திய ரயில்வேத்துறை தனது ரயில் பெட்டிகளை தற்காலிக மருத்துவமனை மற்றும் வார்டுகளாக மாற்றியதன் பின்னர் இந்த நடவடிக்கையில் ஒரு மாநில அரசுகள் இறங்கியிருக்கின்றன.

இந்த பேருந்தின் கண்களில் இருந்து ஒரு கொரோனா நோயாளியும் தப்பிக்க முடியாது... அதிரடி காட்டும் எடியூரப்பா!

சீனாவைப் போல் இந்தியா வளர்ந்த நாடு அல்லாத காரணத்தல் இங்கு குறைந்த நாட்களில் கொரோனாவிற்காக தனி மருத்துவமனை கட்ட முடியாத நிலை இருக்கின்றது. அதேசமயம், தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் தற்காலிக மருத்துவமனை உருவாக்குவற்கான சாத்திய கூறுகளும் இல்லை.

இந்த பேருந்தின் கண்களில் இருந்து ஒரு கொரோனா நோயாளியும் தப்பிக்க முடியாது... அதிரடி காட்டும் எடியூரப்பா!

இதுபோன்ற பல்வேறு காரணங்களால் பொது போக்குவரத்து வாகனங்கள் மற்றும் பள்ளிக்கூடங்கள் தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன.

ஆரம்பத்தில் இந்தியாவின் வட மாநிலங்களில் மட்டுமே இம்மாதிரியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன.

இந்த பேருந்தின் கண்களில் இருந்து ஒரு கொரோனா நோயாளியும் தப்பிக்க முடியாது... அதிரடி காட்டும் எடியூரப்பா!

ஆனால் இப்போது தென் மாநிலங்களிலும் இந்த தனித்துவமான முயற்சிகள் தென்படத் தொடங்கியுள்ளன. அந்தவகையில், முன்னதாக கேரளா மற்றும் ஆந்திரா ஆகிய மாநில அரசுகள் பேருந்துகளை தற்காலிக மருத்துவமனைகளாகவும், கோவிட்-19 பரிசோதனை மையங்களாகவும் மாற்றின.

இந்த பேருந்தின் கண்களில் இருந்து ஒரு கொரோனா நோயாளியும் தப்பிக்க முடியாது... அதிரடி காட்டும் எடியூரப்பா!

இதைத்தொடர்ந்து, இதே முயற்சியை தற்போது கர்நாடக அரசும் மேற்கொண்டிருக்கின்றது. இதுகுறித்த தகவலை ஆங்கில செய்தி தளம் ஈடி ஆட்டோ வெளியிட்டுள்ளது.

அது வெளியிட்டுள்ள தகவலின்படி, கர்நாடக மாநிலத்திற்கு சொந்தமான கேஎஸ்ஆர்டிசி போக்குவரத்துகழக பேருந்துகள், காய்ச்சல் மற்றும் கோவிட்-19 பற்றிய ஆய்வுகளை செய்யும் தற்காலிக மருத்துவமனைகளாக மாற்றியமைத்திருப்பது தெரியவந்துள்ளது.

இந்த பேருந்தின் கண்களில் இருந்து ஒரு கொரோனா நோயாளியும் தப்பிக்க முடியாது... அதிரடி காட்டும் எடியூரப்பா!

மேலும், இந்த பேருந்துகள் அம்மாநிலத்தின் கொரோனா தொற்று அதிகம் காணப்படும் தனிமைப்படுத்தப்பட்ட மற்றும் சிவப்பு பகுதிகளில் பணியில் ஈடுபடுத்தப்பட இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அங்கு அனைத்துவிதமான, அதாவது லேசானா காய்ச்சல் இருப்பதாக கருதப்படுபவர்களின் மாதிரிகளும்கூட சேகரிக்கப்பட்டு உரிய மருத்துவ ஆலோசனை வழங்கப்பட இருக்கின்றது.

இந்த பேருந்தின் கண்களில் இருந்து ஒரு கொரோனா நோயாளியும் தப்பிக்க முடியாது... அதிரடி காட்டும் எடியூரப்பா!

இந்த சிறப்பு மாற்றியமைக்கப்பட்ட பேருந்து மருத்துவமனைகளை அம்மாநில முதலமைச்சர் பிஎஸ் எடியூரப்பா, மக்கள் பயன்பாட்டிற்காக நேற்று திறந்து வைத்தார். இவை ஏற்கனவே களத்தில் இருக்கும் மருத்துவமனைகளுடன் இணைந்து கோவிட்-19 வைரஸ் மாநிலத்தில் பரவாமல் தடுக்கும் பணியை மேற்கொள்ள இருக்கின்றது.

இந்த பேருந்தின் கண்களில் இருந்து ஒரு கொரோனா நோயாளியும் தப்பிக்க முடியாது... அதிரடி காட்டும் எடியூரப்பா!

இந்த பேருந்தில் தனி வார்டு மற்றும் சிகிச்சை வழங்குவதற்கான தனியறை உள்ளிட்ட பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டிருக்கின்றன. இதுதவிர, ஒவ்வொரு பேருந்திற்கும் ஒரு மருத்துவர், மூன்று செவிலியர்கள் மற்றும் ஒரு லேப் டெக்னீசியன் ஆகியோர் பணியமர்த்தப்பட்டிருக்கின்றனர்.

இந்த பேருந்தின் கண்களில் இருந்து ஒரு கொரோனா நோயாளியும் தப்பிக்க முடியாது... அதிரடி காட்டும் எடியூரப்பா!

இதுதவிர, தன்னார்வலர்களையும் இந்த சிறப்பு பணியில் பயன்படுத்திக் கொள்ள இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்கள், பேருந்து மருத்துமனைகளுக்கு வருபவர்களை சமூக இடைவெளியிடன் நிற்க வைத்தல் மற்றும் சிகிச்சைக்காக உள் நுழைந்த உடன் கடைப்பிடிக்க வேண்டியவை உள்ளிட்டவற்றைப் பற்றிய அறிவுரைகளை வழங்குவர்.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
KSRTC Buses Converted As Mobile Fever Clinics And COVID-19 Testing Lab. Read In Tamil.
Story first published: Wednesday, May 13, 2020, 18:52 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X