லம்போர்கினி காரை சாலையில் ஓரம்கட்டிவிட்டு இளைஞர் செய்த காரியம்... ஆடிப்போன இளம்பெண்... வீடியோ!

விலையுயர்ந்த லம்போர்கினி ஹூராகேன் காரை ஓரம்கட்டிவிட்டு இளைஞர் செய்த காரியத்தால் இளம்பெண் ஒருவர் மிரண்டுபோயுள்ளார். இதுகுறித்த கூடுதல் தகவலைத் தொடர்ந்து பார்க்கலாம்.

லம்போர்கினி காரை சாலையில் ஓரம்கட்டிவிட்டு இளைஞர் செய்த காரியம்... ஆடிப்போன இளம்பெண்... வீடியோ!

மஹிந்திரா நிறுவனத்தின் புதுமுக வரவாக தார் எஸ்யூவி அமைந்துள்ளது. இந்த கார் இந்திய வாகன ஆர்வலர்களுக்கு ஏற்கனவே பரீட்சையமான காராக இருந்தாலும், இதன் புதிய வரவு தற்போது பெரும் வரவேற்பைப் பெற தொடங்கியுள்ளது. எனவேதான், ஆட்டோமொபைல் சார்ந்து செய்தி மற்றும் தகவல்களை வெளியிடும் அமைப்புகள் ஈக்களைபோல் மஹிந்திரா தார் காரை வட்டமடிக்க தொடங்கியிருக்கின்றனர்.

லம்போர்கினி காரை சாலையில் ஓரம்கட்டிவிட்டு இளைஞர் செய்த காரியம்... ஆடிப்போன இளம்பெண்... வீடியோ!

அந்தவகையில், பிரபல யுட்யூப் சேனலான பைக்வித்கேர்ல் அஃபீசியலைச் சேர்ந்த ஓர் பெண்மணி தார் எஸ்யூவி காரை பற்றி தனது சேனலுக்காக விவரித்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவ்வழியாக வந்த லம்போர்கினி ஹூராகேன் கார், திடீரென தார் காரைக் கண்டதும் பிரேக்கைப் போட்டது. அதில் இருந்து வெளிவந்த இளைஞர்கள், தார் காரை மிகவும் ஆச்சரியத்துடன் கண்டனர்.

லம்போர்கினி காரை சாலையில் ஓரம்கட்டிவிட்டு இளைஞர் செய்த காரியம்... ஆடிப்போன இளம்பெண்... வீடியோ!

மேலும், அக்காரை கண் பார்வை மூலமாகவே ஆய்வு செய்தனர். இளைஞர்களின் இந்த செயல் யுட்யூப் சேனல் தொகுப்பாளினிக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவருக்கு மட்டுமின்றி அவருடன் அந்த இடத்தில் இருந்து அனைவருக்கும் அதும் பெரும் வியப்பை ஏற்படுத்தியது. ஏனெனில், உலகின் விலையுயர்ந்த மற்றும் அதி திறன் வாய்ந்த கார்களில் ஒன்றான லம்போர்கினி ஹூராகேனைப் பயன்படுத்துவருக்கு தார் கார் மீது இவ்வளவு ஆர்வமா என்ற எண்ணம் அனைவரின் மத்தியிலும் தோன்றியது.

லம்போர்கினி காரை சாலையில் ஓரம்கட்டிவிட்டு இளைஞர் செய்த காரியம்... ஆடிப்போன இளம்பெண்... வீடியோ!

இந்த எண்ணத்தைத் தூண்டும் வகையிலேயே அந்த இளைஞரின் அனைத்து செயல்களும் அமைந்திருந்தன. எனவேதான், அவர்களின் செயல்களை ஆனந்த் மஹிந்திராவிற்கு தெரியப்படுத்தும்விதமாக அப்பெண் தனது டுவிட்டர் பக்கத்தின் வாயிலாக இந்த தகவலை பகிர்ந்துள்ளார். வாருங்கள் அந்த இளைஞர் என்ன செய்தார் என்பதை வீடியோ வாயிலாக தெரிந்து கொள்ளலாம். வீடியோ கீழே உள்ளது.

லம்போர்கினி காரை சாலையில் ஓரம்கட்டிவிட்டு இளைஞர் செய்த காரியம்... ஆடிப்போன இளம்பெண்... வீடியோ!

மஹிந்திரா தார் கார், லம்போர்கினி ஹூராகேன் உரிமையாளரை மட்டுமின்றி ஒட்டுமொத்த வாகன ஆர்வலர்களையுமே தன்பக்கம் வளைத்துப் போட்டுள்ளது. ஏன், தார்குறித்த வீடியோவை தொகுத்து வழங்கும் அந்த இளம்பெண்ணைக்கூட அக்கார் அதிகம் கவர்ந்திருக்கின்றது. வீடியோவில் இந்த வார்த்தையை தொகுப்பாளினி பலமுறை குறிப்பிடுவதை நம்மால் காண முடிகின்றது.

லம்போர்கினி காரை சாலையில் ஓரம்கட்டிவிட்டு இளைஞர் செய்த காரியம்... ஆடிப்போன இளம்பெண்... வீடியோ!

மஹிந்திரா நிறுவனம், பழைய தாரைக் காட்டிலும் புதிய தலைமுறை காரை முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் உருவாக்கியுள்ளது. இதற்காக புதிய சேஸிஸ் கட்டமைப்பை அது பயன்படுத்தியுள்ளது. இதே கட்டமைப்பு வசதிதான் அடுத்த தலைமுறை ஸ்கார்பியோவிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவேதான் இக்கார்கள் மாடர்ன் தோற்றத்தில் காட்சியளிக்கின்றன.

இதுபோன்ற அம்சங்களின் காரணமாகவே மஹிந்திரா தார் கார் அனைவரையும் கவர்ந்து வருகின்றது. இக்காரின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் ஆர்வலர்கள் அனைவரின் பார்வையும் அறிவிப்பு நாளை நோக்கியிருக்கின்றது. வருகின்ற அக்டோபர் 2ம் தேதி இக்காரின் விலை விபரத்தைப் பற்றி அறிவிக்க இருப்பதாக மஹிந்திரா நிறுவனம் கூறியிருக்கின்றது.

புதிய மஹிந்திரா தார் கார் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்ஜின் தேர்வில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இவ்விரு எஞ்ஜினிலும் 4X4 டிரான்ஸ்ஃபர் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வும் கிடைக்க இருக்கிறது. இதுமாதிரியான சகல வசதிகளைப் பெற்றிருப்பதனாலயே தார் கார் கவனத்தை ஈர்க்கக்கூடிய காராக இருக்கின்றது.

லம்போர்கினி காரை சாலையில் ஓரம்கட்டிவிட்டு இளைஞர் செய்த காரியம்... ஆடிப்போன இளம்பெண்... வீடியோ!

எனவேதான் லம்போர்கினி ஹூராகேன் கார் உரிமையாளரை மட்டுமின்றி அவ்வழியாக பழைய தலைமுறை தார் உரிமையாளரையும், காரை நிறுத்தி விசாரிக்க தூண்டியிருக்கின்றது. ஆம், அந்த இளம்பெண்ணிடம் ஹூராகேன் கார் உரிமையாளரைப் போலவே இவரும் ஆச்சரியத்துடன் பல கேள்விகளை எழுப்பி, தாரை வியந்து சில நிமிடங்கள் பார்த்து ரசித்திருக்கின்றார்.

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Lamborghini Driver Stops Car To Check Mahindra Thar. Read in Tamil.
Story first published: Friday, September 18, 2020, 12:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X